வளவ. துரையன் ”வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்” என்ற பழமொழி சரியாய்த்தான் சொன்னார்கள் போலிருக்கிறது. இரண்டுமே எளிதாகப் பிறர் உதவியின்றி எந்தத் தடங்கலும் வராமல் செய்ய முடியாத செயல்கள்தாம். அப்பப்பா, இந்த வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் எத்தனை சோதனைகள், எவ்வளவு சிரமங்கள் எல்ல்லாவற்றையும் சமாளித்து ஒரு வழியாய் முடித்தாகி விட்டது” என்று நினைத்துக் கொண்டான் பரமு. ’பரமேஸ்வரன்’ என்ற பெயரே ’பரமேஸ்’ என்றாகி இப்போது நண்பர் வட்டாரத்துக்குள் ‘பரமு’ என்றாகி விட்டது. எப்படிப்பட்ட பெயர் […]
’தில்லையாடி ராஜா’ எனும் புனைபெயரில் எழுதும் இரா. இராஜேந்திரன் தற்போது கடலூரில் வசித்து வருகிறார். அவர் எழுதி உள்ள இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு ’என் வாழ்க்கை விற்பனைக்கல்ல’ எனும் பெயரில் வெளியாகி உள்ளது. இத்தொகுப்பில் உள்ள பத்துச் சிறுகதைகளும் படிக்கும்போது இவை ஏதோ ஒரு வகையில் நம்மோடு சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றனவே என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு கதைகளின் பாத்திரங்கள் நாம் நாள்தோறும் பார்ப்பவர்களாகவே இருக்கிறார்கள். கதைகளில் வரும் உரையாடல்கள் மிகவும் இயல்பாய் இருக்கின்றன. கதைகளின் தள […]
நவீன இலக்கிய உலகில் கடந்த ஆண்டு சில அதிர்வுகளை ஏற்படுத்திய “அறம்” சிறுகதைத் தொகுப்பிற்குப் பிறகு 2013–ஆம்-ஆண்டுவெளிவந்துள்ளது ஜெயமோகனின் “வெண்கடல்” சிறுகதைத் தொகுப்பு. முன்னுரையில் ஜெயமோகனே குறிப்பிட்டிருப்பது போல இதில் உள்ள 11 சிறுகதைகளும் வெவ்வேறு தளத்திலியங்கும் பல்சுவைத் தன்மை கொண்டவை. . பொதுவாகவே ஜெயமோகனின் கதைகளில் உரையாடல்கள் நேர்த்தியாக இருக்கும். கதைகளுக்கேற்ப அவை ஆழமாகவும் இருக்கக் கூடும். “குருதி” சிறுகதையின் இறுதியில் சேத்துக்காட்டார் கூறும் ”மனுசனா வாழணும்ல—-நாயா, பன்னியா வாழாதே; மனுஷனா […]
நவீன எழுத்தாளர்களில் மரபிலக்கியத்தில் ஆழ்ந்த பயிற்சி உள்ளவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் குறிபிடத்தகுந்தவர் நாஞ்சில் நாடன். அவருடைய நூல்களுக்கு அவர் வைத்திருக்கும் சில தலைப்புகளே அதற்கு சாட்சிகளாய் நிற்கின்றன. சாலப் பரிந்து, என்பிலதனை வெயில் போலக் காயும், எட்டுத் திக்கும் மத யானை, நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை, காவலன் காவான் எனின், தீதும் நன்றும் என்பன போன்றவற்றைக் கூறிக் கொண்டே போகலாம். 5-1-2013—ஆம் நாள் காரைக் குடியில் பழனியப்பா—மீனாட்சி அறக் கட்டளை சார்பாக அவர் நடத்திய […]
வளவ. துரையன் தாயுரை கொண்டு தாதை உதவிய தரணிதன்னைத் தீவினை என்று நீத்துக் கானகம் சென்றான் இராமன். அங்கே ஏழை வேடன் குகனைச் சகோதரனாக ஏற்றான். சூர்ப்பனகை வந்து தகாத வார்த்தைகள் பேச அவளை மூக்கறுத்து அனுப்புகிறான் இலக்குவன். அவள் இலங்கை வேந்தன் இராவணனிடம் முறையிட்டு அவன் மனத்தில் சீதையைப் பற்றி வர்ணித்து ஆசையை மூட்டுகிறாள். இராவணன் மாரீசனை மாயமானாக அனுப்பி அதன் மூலம் இராம இலக்குவர்களைப் பிரித்துத் தனியாக இருந்த சீதையைச் சிறை […]
வளவ. துரையன். சங்க காலத்தின் பெருமையை விளக்கும் எட்டுத் தொகை நூல்களுள் அகநானூறும் ஒன்றாகத் திகழ்கிறது. அகநானூறு முழுதும் தலைவனும், தலைவியும் உலவும் அகத்திணைச் செய்திகளே விரவிக் கிடக்கின்றன என்றாலும் பண்டைத் தமிழரின் செல்வச் செழிப்பையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் சில பாடல்கள் காட்டுகின்றன. பண்டை வணிகமுறை பண்டம் மாற்று முறையிலேயே அமைந்திருந்தது. தன்னிடம் அதிகமாக உள்ள ஒரு பொருளைத் தந்து அதற்கு மாற்றாக தனக்குத் தேவையான வேறு ஒரு பொருளைப் பெற்றுக் கொள்வதே பண்டம் மாற்று […]
“கம்பர் போற்றிய கவிஞர்” என்னும் நூலை அண்மையில் கோவையில் நாஞ்சில் நாடனைச் சந்திக்கும்போது அவர் கொடுத்தார். முனைவர் தெ. ஞான சுந்தரம் எழுதிய அருமையான நூல் அது. ஞானசுந்தரம் அவர்களை நான் முன்பே நன்கு அறிவேன். வளவனூர் திருக்குறட் கழகத்திலும், கடலூர் இலக்கியச் சோலையிலும், கிருஷ்ணாபுரம் நடுநிலைப் பள்ளியிலும் அவரை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறேன். நான் எழுதிய “வைணவ விருந்து” எனும் நூலுக்கு அவர்தான் அணிந்துரை எழுதிக் கொடுத்தார். இந்த நூல் அவர் காரைக்குடியில் […]
தக்க வயது வந்த இளம்பருவ ஆண்மகனுக்கு ஏற்ற ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து மணம் முடித்தல் தொன்று தொட்டு வரும் மரபான வழக்கமாகும். பெண் இருக்கும் இடம் அறிந்தவுடன் அவளைத் தங்கள் மகனுக்காக அப்பெண்ணின் பெற்றோரிடம் கேட்டுத் தூது அனுப்பும் நடைமுறையும் உண்டு. பெண்ணைப் பெற்றவர்கள் பெண் தரச் சம்மதித்து மணம் நடைபெறும். மாறாகப் பெண் கொடுக்க மறுத்தலையும் இலக்கியங்களில் பார்க்க முடிகிறது. சில நேரங்களில் பெண் தர மறுப்பதோடு வரும் தூதனை இழித்துரைத்தலையும் காண்கிறோம் […]
இந்த இரண்டு மகாகவிகளும் காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் காவியம் தரவல்லவர்கள். ஒருவர் கவிச்சக்கரவர்த்தி, மற்றொருவர் கவியரசர். தேரழுந்தூரில் தோன்றி, சடையப்ப வள்ளலால் திருவெண்ணை நல்லூரிலே ஆதரிக்கப்பட்டு ”ஒரு பூனை பாற்கடலைக் குடிப்பதுபோல மாபெரும் இராமகாதை இயற்ற வந்தேன்” என்ற கம்பனும், சிட்டுக்குருவிகள் கூட கூடுகட்டப் பயப்படும், பொட்டல்வெளியான சிறுகூடற்பட்டியிலே பிறந்து, “போற்றுபவர் போற்றட்டும், புழுதிவாரித் தூற்றுபவர் தூற்றட்டும்; ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன், எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்” என்று […]
எம்பெருமானுக்கே பல்லாண்டு பல்லாண்டு எனப் பல்லாண்டு பாடி மகிழ்ந்தவர் பெரியாழ்வார். அதோடு நில்லாமல் கண்ணபிரானைக் குழந்தையாக்கிப் பிள்ளைத் தமிழ் பாடிப் போற்றியவர் அவரே. பிள்ளைத் தமிழின் பத்துப் பருவங்களில் ஒன்றான செங்கீரைப் பருவத்தைப் பாடும்போது, நம்முடை நாயகனே, நான்மறையின் பொருளே, நாவியுள் நற்கமல நான்முக னுக்குஒருகால் தம்மனை யானவனே, தரணி தலம்முழுதும் தாரகை யினுலகும் தடவி யதன்புறமும் விம்ம வளர்ந்தவனே, வேழமும் ஏழ்விடையும் விரவிய […]