தில்லிகை

This entry is part 23 of 37 in the series 22 ஜூலை 2012

  தில்லிகை – தில்லியில் சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டு இலக்கிய ஆர்வலர்களின் கவனத்தைப் பெற்றுவரும் தமிழ் இலக்கிய வட்டம்.  இது, தில்லித் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு, தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சந்திப்புகளை நட த்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு மையக் கருத்தை ஒட்டி இந்தச் சந்திப்புகள் நிகழ்கின்றன.  இதுவரை, ‘மதுரை’, ‘கரு’, ‘போர்’, ‘தில்லியும் தமிழ் இலக்கியமும்’, ‘தமிழும் பிற இந்திய மொழி இலக்கியங்களும்’ ஆகிய மையக் கருத்துக்களை ஒட்டி ஐந்து இலக்கியச் சந்திப்புகள் நடந்தேறியுள்ளன.  உறுப்பினராக […]

வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது

This entry is part 20 of 37 in the series 22 ஜூலை 2012

Dear Sir, The Tamil Literary Garden Iyal Virudhu  nomination form is attached. I shall be grateful if you will please please carry this in Thinnai website. Many thanks for your usual cooperation. best regards. anbudan a.muttulingam வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது. கனடாவில், அறக்கொடை நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் உலகெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். […]

கோவை இலக்கியச் சந்திப்பு

This entry is part 11 of 41 in the series 8 ஜூலை 2012

கோவை இலக்கியச் சந்திப்பு என்ற  இலக்கிய நிகழ்ச்சி மாதந்தோறும் கோவையில்      இளஞ்சேரல், பொன் இளவேனில், யாழி, தியாகு போன்றவர்களால் காத்திரமான இலக்கிய விமர்சனங்கள், இலக்கிய உரைகளை முன்வைத்து நடத்தப்படுகிறது. ஜுன் மாத நிகழ்வு நரசிம்மலுநாயுடு நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடந்த்து.. கோவையில் இதழியலின் முன்னோடியாக இருந்தவர் நரசிம்மலுநாயுடு. பயண இலக்கியங்களில் முத்திரை பதித்தவர். அரிய நூல்களைப் பதிப்பித்தவர்.எண்ணிக்கையில் அவர் பதிப்பித்தவை நூற்றுக்கு மேல் இருக்கும். கோவை கிழாரின் நூல்கள் வெளிவர உத்வேகமாக இருந்தவர்.கோவையின் சிறுவாணி குடிநீரின் மூலத்தைக்கண்டு பிடித்து […]

பத்தாவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா

This entry is part 22 of 32 in the series 1 ஜூலை 2012

ரொறொன்ரோ சுயாதீன கலைத் திரைப்படச் சங்கத்தின் பத்தாவது குறுந்திரைப்பட விழா கடந்த சனிக்கிழமை (23-06-2012) ஸ்காபரோ சிவிக் சென்ரறில் வெற்றிகரமாக நடந்தேறியது. தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமான விழாவின் முதல் அங்கமாக, இரு விசேட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட ‘பாலை’ ஒரு அரங்கிலும், கனடிய தயாரிப்பான ‘ஸ்ரார் 67’ பிறிதொரு அரங்கிலும் காண்பிக்கப்பட்டன. முடிவில் இவ்விரு திரைப்படங்களையும் பார்வையிட்ட இரசிகர்கள் […]

சூலைத் திங்கள் 7, 8 நாள்களில் பிரான்சு திரான்சி பெரு நகரில் தமிழிலக்கிய உலக மாநாடு

This entry is part 11 of 32 in the series 1 ஜூலை 2012

அன்புள்ள ஆசிரியர்   அவர்களுக்குப் பணிவு வணக்கம் வரும் சூலைத் திங்கள் 7, 8 நாள்களில் பிரான்சு திரான்சி பெரு நகரில் தமிழிலக்கிய உலக மாநாடு நடைபெற  உள்ளது. அதற்கான அழைப்பிதழ், கையேடு இம்மடலுடன் இணைக்கப்பட்டுள்ளன. வர இயலாதவர்கள் வாழ்த்து அனுப்பின் பெரிதும் மகிழ்வோம். இவற்றைத் தங்கள் இதழில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நனி நன்றியன் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தலைவர் தமிழிலக்கிய உலக மாநாடு பிரான்சு. இணையதள முகவரி http://tamlitworldconf.wordpress.com/

தமிழிலக்கியத்தை பிரெஞ்சுமொழியினருக்கு அறிமுகப்படுத்த

This entry is part 8 of 32 in the series 1 ஜூலை 2012

அன்புடையீர் தமிழிலக்கியத்தை பிரெஞ்சுமொழியினருக்கு அறிமுகப்படுத்தவேண்டுமென்கிற முனைப்பில் சில எளிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். மேற்குலகிற்கும் பிரெஞ்சு சூழலுக்கும் பொருந்தக்கூடிய ஒரு சிறுகதையைத் தேர்வு செய்து பிரெஞ்சில் மொழி பெயர்த்து வெளியிட திட்டம். இதுவரை பாவண்ணன், பிரபஞ்சன் சிறுகதைகள் வந்துள்ளன. விரைவில். கி.ரா சிறுகதையொன்று வெளிவரவிருக்கிறது. நமது மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தனையும் மறக்கவியலாது. அவருடைய சிறுகதையொன்றும் விரைவில் இடம்பெறும். அன்னாரின் பாரீஸ¤க்குப்போ நாவல் குறித்து நண்பர் வி.எஸ் நாயக்கரின் ஆழமான விமர்சனம் அண்மையில் வெளிவந்து பல பிரெஞ்சு நண்பர்களின் பாராட்டுதலையும் […]

எனது வலைத்தளம்

This entry is part 40 of 43 in the series 24 ஜூன் 2012

அன்புடையீர், எதிர்வரும் ஜூலைமாதத்துடன் எனது வலைத்தளம் தொடங்கி ஒரு வருடம் முடியப்போகிறது. இதுவரை ஏறக்குறைய 9000 நண்பர்கள் வலத்தளத்தை பார்வையிட்டதாக கணக்கு. உங்களுக்கு முதலில் எனது நன்றிகள். ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிகளில் புதுப்பிப்பதென்ற வரையறைகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தாலும் தவறிய சந்தர்ப்பங்கள் அநேகம். இனி அவ்வாறு நிகழாது.  இதுவரை பதிவிட்ட இடுகைகளின் மொத்த எண்ணிக்கை 130. மாதத்திற்கு 11 இடுகைகள். உங்கள் ஆதரவினால் கிடைத்த உற்சாகம். புதிய இடுகைகள் 1. துப்பறியும் புனைவுகள்: Whodunit வரலாறு குற்றபுனைவுகள் […]

தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகமாக மாற்றாதீர் !

This entry is part 21 of 43 in the series 24 ஜூன் 2012

  தஞ்சையில் முன்னாள் துணைவேந்தர்கள் பொற்கோ, ம.இராசேந்திரன் உரை!     தஞ்சையில் 1981 செப்ட்டம்பர் 15 அன்று அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழத்தைத் தொடங்கி வைத்தார். அதற்கு சற்றொப்ப ஆயிரம் ஏக்கர் நிலம் ஒப்படைத்தார்.   அப்பல்கலைக்கழகம் எம்.ஜி.ஆருக்குப் பிறகு கவனிப்பார் அற்று நலிவடைந்துள்ளது. மாதா மாதம் சம்பளம் வழங்குவதற்கே வழியின்றி திண்டாடுகிறார்கள். இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் நிலத்தை அவ்வபோது வெவ்வேறு நோக்கங்களுக்கு வெளியாருக்கு கொடுத்து வருகிறது தமிழக அரசு. முதலில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் […]