மும்பை தமிழ் அமைப்புகள் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டு விழா

This entry is part 31 of 31 in the series 5 பிப்ரவரி 2012

அறிவிப்பு மும்பை தமிழ் அமைப்புகள் பம்பாய் தமிழ் சங்கத்துடன் இணைந்து சாகித்திய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டு விழா . அனைவரும் வருக. மும்பை தமிழ் அமைப்புகள் சார்பாக புதியமாதவி

சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் – கருத்தரங்கம்

This entry is part 26 of 31 in the series 5 பிப்ரவரி 2012

திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரி தமிழ்த்துறை மற்றும் இஸ்லாமிய ஆய்வுமையம் ஒருங்கிணைக்கும் இருநாள் தேசியக் கருத்தரங்கம் -ஹெச்.ஜி.ரசூல் கன்னியாகுமரிமாவட்டம் திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரி தமிழ்த்துறை மற்றும் இஸ்லாமிய ஆய்வுமையம் ஒருங்கிணைக்கும் இருநாள் தேசியக் கருத்தரங்கம் 2012 பிப்ரவரி 10,11 வெள்ளி , சனி நாட்களில் முஸ்லிம் கலைக்கலூரியில் நடைபெறுகிறது. முதல்நாள் துவக்க விழாவிற்கு முதல்வர் முனைவர் எ.அப்துல் ரஹீம் தலைமையேற்க தமிழ்த்துறைத்தலைவர் பேரா. என் ஹைருன்னிஸா வரவேற்புரை நல்குகிறார்.ஹாஜி எஸ் செய்யது முகமது முன்னிலை வகிக்க ஆங்கிலத்துறை முனைவர் […]

எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது

This entry is part 31 of 42 in the series 29 ஜனவரி 2012

2011ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்‌ஷ்மி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை ஆகியவர்களைத் தொடர்ந்து இம்முறை இந்த விருதுக்கு உரியவராக கடந்த […]

“எழுத்தாளர் விபரத் திரட்டு”

This entry is part 23 of 42 in the series 29 ஜனவரி 2012

தயாராகிறது!! “எழுத்தாளர் விபரத் திரட்டு” (ஈழத்து படைப்பாளர்களின் விபரங்கள் அடங்கிய தொகுதி) இணையத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் பட்டியல் நூலாக அச்சில் வெளி வருகிறது. எழுத்தாளர்கள் தங்கள் பெயர்,புனை பெயர்,பிறந்த இடம்,பிறந்த திகதி,கல்வித் தகைமை,கல்வி கற்ற கல்வி நிறுவனங்கள்,விருத்துகள்/பரிசுகள்,படைப்புகள் வெளி வந்த ஊடகங்கள், நூல்கள்,முகவரி,முகவரி,மின்னஞ்சல் எனும் விபரங்களை அனுப்பி நூலை சிறப்பியுங்கள். தொடர்பிற்கு: R.MAHENDRAN. 34,RED RIFFE ROAD, PLAISTOW, LONDON E13 0JX mullaiamuthan@gmail.com mullaiamuthan_03@hotmail.co.uk

திருப்பூர் படைப்பாளிகளின் ”பருத்திநகரம் ” நூல் வெளியீடு

This entry is part 21 of 42 in the series 29 ஜனவரி 2012

திருப்பூர் படைப்பாளிகளின் இலக்கியத் தொகுப்பான “பருத்திநகரம் ” செவ்வாயன்று திருப்பூர் காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் வெளியிடப்பட்டது. முத்தமிழ்ச்சங்கத்தலைவர் கேபிகே செல்வராஜ் தலைமை வகித்தார். . திருப்பூர் மாநகர துணை மேயர் குணசேகரன் “பருத்திநகரம் ” நூலை வெளியிட, சென்னை பத்திரிக்கையாளர் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஸ்ணன்., சந்திரகாந்த் தேசய், எக்ஸ்லான் ராமசாமி, திருமகள் குமரேசன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். வழக்கறிஞர் சி.ரவி நூல் குறித்த அறிமுகம் உரை நிகழ்த்தினார்.. முன்னதாக திருப்பூரிலிருந்து வெளிவரும் “ கனவு” இலக்கிய இதழுக்கு […]

பாரதி இணையதளத்தில்

This entry is part 18 of 42 in the series 29 ஜனவரி 2012

அன்பார்ந்த பாரதி அன்பர்களுக்கு, வணக்கம். நமது பாரதி இணையதளத்தில் ‘பாரதியைப் பயில…’ http://www.mahakavibharathiyar.info/bharathi_ithazh.htm என்ற பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. மாதம் இருமுறை (11 மற்றும் 26 ஆகிய தேதிகளில்) தங்களுக்கு தகவல் வந்து சேரும். படித்துப் பயன் பெற வேண்டுகிறோம். வழக்கம்போல நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இத்தகவலை தெரிவிக்கவும். நன்றி. குறிப்பு: பாரதியாரின் பாடல்கள் மற்றும் புகைப்படங்கள் முழுமையாக தொகுத்து நமது இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்புடன், வீ.சு.இராமலிங்கம் தலைவர், பாரதி சங்கம், தஞ்சாவூர்

விளிம்பு:விழிப்பும் விசாரணைகளும் – 39வது இலக்கியச்சந்திப்பு

This entry is part 10 of 42 in the series 29 ஜனவரி 2012

விளிம்பு:விழிப்பும் விசாரணைகளும் 39வது இலக்கியச்சந்திப்பு ரொறொன்டோ கனடா மே 5-6, 2012 1. கனேடிய சமூக வாழ்வியல் – முதற்பிரஜைகள், மாற்றுப் பாலியல் கண்டோட்ட சமூகங்கள், முதியோர்கள், இலக்கிய மரபுகள் 2. ஆக்க இலக்கியங்கள் – மாற்று அழகியல்மரபுகள், தமிழர் இலக்கிய வடிவங்கள், மேடை ஆற்றுகைகள், திரைப்படங்கள் 3. போருக்கு முன்-பின் ஈழத்து நிலை 4. புலப்பெயர்வு வாழ்வியல் – குடிபெயர்வு செயன்முறைகள், புலம்பெயர்வு வரலாற்றுப்பதிவுகளும் இனக்குழுத் தொடர்ச்சிகளும், புலம் பெயர் இலக்கியங்கள் மரபுகள்; மீள்வரையறைகளும் புத்துயிர்ப்புக்களும் […]

அ. முத்துலிங்கம் அவர்களின் “அமெரிக்க உளவாளி”: போட்டி

This entry is part 4 of 42 in the series 29 ஜனவரி 2012

திருப்பூர் தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கி வருகிறது. இவ்வாண்டு பரிசு பெற்ற நூலில் ஒன்று அ. முத்துலிங்கம் அவர்களின் “ அமெரிக்க உளவாளி ‘’ . தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத்தகவல்களும் பொது இயல்பாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் எழுத்து புதிய உத்வேகத்தையும் அழகியலையும் வழங்குகிறது.முத்துலிங்கத்தின் கவனம்பெறும் ஒவ்வொரு அனுபவமும் உயிர்ச்சித்திரங்களாக விழித்தெழுகிறது. எந்த ஒரு சிறிய நிகழ்வையும் நினைவையும் ஒரு மர்மமான ரசவாதத்தால் வாழ்வின் தரிசனமாக மாற்றி விடும் […]

துபாய் அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் இலவசக் கணினிப் பயிலரங்கம்

This entry is part 26 of 30 in the series 22 ஜனவரி 2012

துபாய் அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் இலவசக் கணினிப் பயிலரங்கம் நடந்தது. துபாய், அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் நடந்த இலவசக் கணினிப் பயிலரங்கில் தமிழைக் கணினியில் உள்ளிடுவது குறித்த பயிற்சியோடு தமிழ் இணைய வரலாறு, கணினியில் தமிழ்ப் பயன்பாட்டின் வளர்ச்சி, தமிழில் கிடைக்கும் பிற சேவைகள் ஆகியவை குறித்தும் விளக்கப்பட்டது. பெனாசிரின் அறிமுக உரையோடு துவங்கிய நிகழ்ச்சியில் தமிழில் எழுத்துருக்கள் இன்று ஒருங்குறியில் வந்து நிற்பது வரையிலான வரலாற்றை சுருக்கமாகவும் தெளிவாகவும் அமீரகத் தமிழ் மன்றத்தின் […]