தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தக்கலை கிளையும் நூறுல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்துறையும் இணைந்து ஒருங்கிணைக்கும் கவிதை எழுத்து பயிலரங்கம் ஆகஸ்டு15,16 ஆகிய தேதிகளில் அக்கல்லூரி அரங்கில் நடைபெற உள்ளது. சங்ககாலகவிதை அகமும் புறமும்,பக்திமரபுஆண்டாள் காரைக்கால் அம்மையாரை முன்வைத்து,அருணகிரிநாதரும் தமிழ் அடையாள உருவாக்கமும்,மறைஞான கவிதைமரபு சித்தர்களும் சூபிகளும் என அமைக்கப்பட்டுள்ளன. கவிதை நவீனமான கதை அரங்கில் எழுத்துமரபு , வானம்பாடிமரபு, தலித்கவிதை, பெண்கவிதை எழுத்து என்பதான பொருண்மைகளில் ஆய்வுரைகள் வாசிக்கப்படுகின்றன. முனைவர் பா.ஆனந்தகுமார், முனைவர் […]
கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் வழங்கும் திருமதி ரங்கம்மாள் விருதுக்கு நான் எழுதிய “வெட்டுப்புலி’ நாவல் தேர்வாகியுள்ளது. ÷இதுகுறித்து கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் வெளியிட்டுள்ள செய்தி: ÷இலக்கிய முன்னேற்றத்துக்காக இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சிறந்த தமிழ் நாவலுக்கு, திருமதி ரங்கம்மாள் பரிசு வழங்கப்படுகிறது. 2009, 2010-ம் ஆண்டுகளில் வெளியான 20 நாவல்கள் இவ்வாண்டு பரிசுப் போட்டிக்கு வரப்பெற்றன. இதில் தமிழ்மகன் எழுதிய “வெட்டுப்புலி’ நாவல், பரிசுக்குத் தேர்வாகியுள்ளது. ÷இதில் நாவலாசிரியர் தமிழ்மகனுக்கு பரிசுத் தொகையாக ரூ. 20 ஆயிரம், […]
கோவி நேசனின் ‘சிறுவர் அரங்க கோலங்கள்’ மறைந்த கோவிந்தசாமி லோகநேசன் (கோவி நேசன்) எழுதிய ‘சிறுவர் அரங்கக் கோலங்கள்’ என்னும் சிறுவர் நாடகப் பிரதிகளைக் கொண்டமைந்த நூல் வெளியீடு 31.07.2011 ஞாயிறு காலை 8.00 மணிக்கு யாழ்ப்பாணம், வதிரி தமிழ்மன்ற மண்டபத்தில் கவிஞர் வதிரி கண எதிர்வீரசிங்கம் தலைமையில் இடம்பெற்றது. ஆசிரியராக, அதிபராக, பல்துறை ஆற்றல் மிக்க கலைஞனாகத் திகழ்ந்த கோ. லோகநேசன் மறைந்த 31 ஆம் நினைவு நாளிலே இந்நூல் வெளியீடு இடம்பெற்றது. நிகழ்வில் செல்வி […]
வணக்கத்துக்கு உரியவர்களுக்கு இத்துடன் வடக்கு வாசல் இசைவிழாவின் அழைப்பினை தங்களின் மேலான பார்வைக்கு இணைத்திருக்கிறேன். யதார்த்தா பெண்ணேஸ்வரன்
விரைவில்..! ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. ‘இலக்கியப்பூக்கள்-2’ நீங்களும் எழுதலாம். *ஒருகட்டுரை ஒரு எழுத்தாளர் பற்றி இருக்க வேண்டும். *ஒருவர் எத்தனை கட்டுரைகளும் அனுப்பலாம். *கட்டுரைகள்4/5 பக்கங்களுக்குக் குறையாமல்(புகைப்படத்துடன்) இருத்தல் வேண்டும். *கட்டுரை எழுதுபவர்கள் தங்கள் சுயவிபரக் கோவையையும் இணைத்தல் வேண்டும். *நூலின் பிரதி அனுப்ப அவர்களின் தெளிவான முகவரி அனுப்ப தவறக்கூடாது. அனுப்ப வேண்டிய முகவரி:R.MAHENDRAN. 34.REDRIFFE ROAD, PLAISTOW. LONDON, E 13 0JX மின்னஞ்சல் முகவரி:mullaiamuthan@hotmail.co.uk. mullaiamuthan@gmail.com […]
(மாலினி) எழுத்தாளர் எஸ்.பொ, எழுத்தாளர் குரு அரவிந்தன், எழுத்தாளர் அகில் ஆகியோருக்கு கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் பாராட்டு விழா ஒன்றை 26-06-2011 ஞாயிற்றுக் கிழமை மாலை 7:00 மணியளவில் ரொறன்ரோ பேர்ச்மவுண்ட வீதியில் உள்ள பார்வையாளர் அரங்கத்தில் நடத்தினர். அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்திருந்த கனடிய தமிழ் இலக்கியத்தோட்டத்தில் விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை, தமிழகத்தில் இருந்து வெளிவரும் மூத்த சஞ்சிகைகளில் ஒன்றான கலைமகள் சஞ்சிகை நடத்திய சர்வதேச குறுநாவல் போட்டி – 2011ல் விருது […]
இலங்கை ‘தடாகம்’ கலை, இலக்கிய வட்டத்தினால் கலை, இலக்கிய துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் படைப்பாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் சாய்ந்தமருது அல்ஹிலால் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.எழுத்தாளர் ‘கலைமகள்’ ஹிதாயா ரிஸ்வியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ.அப்துல் றஸாக், ஏ.எம். ஜெமீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வில் ‘அகஸ்தியர்’ விருதுதினையும், ‘கலைத்தீபம்’ பட்டத்தினையும் பெற்றுக்கொண்ட கவிஞர் யாழ் அஸீம், கவிஞர் மன்னார் அமுதன், ‘தமிழ் தென்றல்’ அலி அக்பர்,கவிஞர் நஜ்முல் […]
விஎம்.பவுண்டேசன் மற்றும் தமிழ் உலகம் அறக்கட்டளை இணைந்து கணினித்தமிழ் கற்போம்! தமிழ் இணைய பயிலரங்கு 25-6-2011 சனிக்கிழமை காலை கிருஷ்ணகிரியில் சாந்தி திருமணமண்டபத்தில் நடைபெற்றது. இப்பயிலரங்கம் கலை 10 மணிக்கு திரு செலவமுரளி வரவேற்பு மூலம் தொடங்கியது. 10.15 மணிக்கு தமிழ் உலகம் அற்க்கட்டளையின் தலைவர் திரு பழனியப்பன் சிங்கப்பூரிலிருந்து காணொலிமூலம் வந்திருந்த மாணவர்கள்,மாணவிகள் மற்றும் பள்ளிக்கூட மாணவர்களுடன் உரையாடினார். 10.30 மணிக்குத் தமிழும் தமிழ் இனையமும், தமிழில் தட்டச்சு முறை எனற தலைப்பில் முதலில் நான் […]
செய்தி : புதுவை எழில் பாரீசிலும் சரி பாரில் வேறு எங்கும் சரி, விழாவைக் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கிக் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கும் வழக்கம் தமிழர்களிடம் இல்லை. இதற்கு விலக்காக நடை பெற்ற விழா, இலக்கிய விழா-இலக்கியத் தேடல் விழா! சூன் திங்கள் 4 -ஆம் நாள் பாரீஸ் 14 – ஆம் வட்டத்தில் உள்ள Maison de l’Inde என்ற இடத்தில் இவ்விழா நடந்தேறியது. இதில் மகா கவி தாகூரின் 150 -ஆவது ஆண்டு விழாவும் […]
பேரன்புடையீர் தமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். அன்பு கூர்ந்து கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். ஆர்வமுள்ள தங்கள் நண்பர்களுக்கும் தமிழ் இணையம் 2011 குறித்த நிகழ்வைத் தெரிவிக்கவும் வேண்டுகிறேன். தங்களின் தமிழ்சங்க உறுப்பினர்களுக்கும் தெரிவிக்க வேண்டுகிறேன். அன்புடன் வா.மு.சே. கவிஅரசன் தலைவர் உத்தமம் தலைவர் பன்னாட்டுக் குழு- தமிழ் இணையம் 2011. www.infitt.org TI2011_PressReleaseJune14.pdf