‘அறுபதுகளில் ‘எழுத்து’வில் சி.சு.செல்லப்பாவால் அறிமுகப்படுத்தப்பட்ட புதுக்கவிதைப் பிரவேசம் என் போன்ற மரபுக்கவிதை ரசிகர்களுக்கு எரிச்சலை ஊட்டியது. புதுக்கவிதை புரியவில்லை என்ற குறை பலருக்கும். அப்போது ‘எழுத்து’வில் வந்த ‘உரிப்பு’ என்ற ஓரு புதுக்கவிதை என்னை ஈர்த்தது. “இந்த நகரத்துச்சுவர்கள் நகராத பாம்புகள் அடிக்கடி வால்போஸ்டர் தோல் வளர்ந்து தடித்துவிட நள்ளிரவில் அவசரமாய் சட்டையுரித்துப் புதுத்தோலில் விடிந்து பளபளக்கும் பட்டணத்துப் பாம்புகள் இந்த நகரத்துச்சுவர்கள்.” – எழுதியவர் பெயரைப்பார்த்தேன். எஸ்.வைத்தீஸ்வரன் என்றிருந்தது. புதுக்கவிதை மேல் இருந்த எரிச்சல் மாறி […]
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com ‘‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது அதனினும் அரிது கூன், குறளு, செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது’’ என்று ஔவையார் மனிதப் பிறவியின் உயர்வைப் பற்றிப் பாடும்போது குறிப்பிடுகின்றார். பிறவியில் இறுதியானது மனிதப் பிறவியே என்பர். உயிர்கள் செய்யக் கூடிய நல்வினைப் பயன் காரணமாகவே உயர்வான மனிதப் பிறவியாக பிறக்கின்றது என்று அறிஞர்கள் கூறுவர். அதில் எந்தக் குறைபாடும் இல்லாது பிறப்பது […]
‘அ’ , ‘ ஆ’ ஒரே நாட்டைச் சேர்ந்த இரு படை வீரர்கள். இருவரும் காட்டு வழியே போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மரத்தைக் கடந்து போகும் போது ‘அ’ சற்று முன்னே சென்று விட்டான். அப்போது ‘ஆ’ அந்த மரத்தின் ஒரு கிளையில் ஒரு கேடயம் தொங்குவதைப் பார்த்தான். அது பச்சை நிற வண்ணம் பூசப் பட்டிருந்தது. முன் சென்று விட்ட ‘அ’ வை ‘ஆ’ அழைத்து ” பாரப்பா ஆச்சரியத்தை! கேடயத்துக்கு வண்ணம் பூசப் […]
பாவண்ணன் எண்பதுகளின் இறுதியில் வேலை நிமித்தமாக நான் அடிக்கடி தாவணகெரெ என்னும் இடத்துக்குச் செல்லவேண்டியிருந்தது. அந்த மாவட்டத்தின் ஆட்சியர் எங்கள் துறைக்கு நுண்ணலை கோபுரமொன்றைக் கட்டுவதற்காக அரசு இடத்தை ஒதுக்கித் தருவதாக வாக்களித்திருந்தார். ஆனால் எழுத்துமூலமாக அதற்குரிய ஆணையை அவர் இன்னும் வழங்காமலிருந்தார். எத்தனை நாட்களானாலும் தங்கியிருந்து வாங்கிவரும்படி எனக்கு நிர்வாகம் கட்டளையிட்டிருந்தது. இரண்டு நாட்கள் அலுவலக வளாகத்திலேயே காத்திருந்தும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பார்வையாளர் வளாகத்தில் அமர்ந்துகொண்டு நான் கையோடு கொண்டுசென்றிருந்த புத்தகங்களையெல்லாம் படித்ததுதான் […]
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com ‘‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’’ என்பர் தொல்காப்பியர். தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு பொருள் உண்டு. காலத்திற்கேற்ப சூழல், இடத்திற்கேற்ப அச்சொற்களுக்குப் பொருள் உண்டு. ஒரே சொல் ஓரிடத்தில் ஒரு பொருளையும் பிறிதோரிடத்தில் வேறொரு பொருளையும் தரும் இது தமிழ் மொழிக்கே உரிய சிறப்பாகும். அவ்வகையில் அறுத்தல், உரித்தல் ஆகிய இரு தொழிற்சொற்களையும் பழமொழிகளில் பயன்படுத்தி அதன் வாயிலாகப் பல்வேறு பண்பாட்டு நெறிகளை […]
‘ அவன் அந்த ஊருக்குள் நுழைந்த போது அந்த ஊரே நாற்றமடித்தது ‘ ஜெயகாந்தனின் இந்த முதல் வரிகள் கதை நாயகனைப் பற்றிய முழுமையான ஒரு உருவத்தை வாசகர்களின் மனதில் தோற்றுவித்துவிடும். அதுதான் ஜெ கேயின் மொழி ஆளுமை, கதை சொல்லும் திறன். இப்படி எத்தனையோ வரிகள் வாசகனைக் கட்டிப் போட்டிருக்கின்றன. ‘ கிளாஸ்கோ மல்லுல ரவிக்கை.. அதிலயும் கலரு.. அப்பா செத்தவுடனே செறச்சா கொட்டிண்டே.. ‘ { சில நேரங்களில் சில மனிதர்கள் } ஜெயகாந்தனை […]
முனைவர் சுபாசு சந்திரபோசு தொகுத்த கு.ப.ராஜகோபாலனின் 15 சிறுகதைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படித்தவுடன் எனக்குத் தோன்றியது இவர் காலத்துக்கு ஏற்ற கதைகளை எழுதவில்லை. அக்காலத்தையும் தாண்டி எழுதி இருக்கிறார் என்பதே. புத்தகச் சந்தையில் புதுமைப்பித்தனின் பெண்ணியச் சிறுகதைகள் எனும் நூலை வாங்கியபோது சுகன் சொன்னார்: ‘ இப்ப படிச்சா போரடிக்கும் ‘ கு.ப.ரா. கதைகளையும் நான் அப்படியே அணுகினேன். போரடிச்சா வச்சுடலாம். ஆனால் ஆச்சர்யம்! அவை போரடிக்கவில்லை. இன்·பாக்ட் கொஞ்சம் சுவாரஸ்யமாகக்கூட இருந்தன. அசோகமித்திரனுக்குப் பிறகு […]
ஹிராகுட்டில் எனக்குப் பரிச்சயமான உலகம், அந்த அணைக்கட்டின் தாற்காலிக முகாமில் கிடைத்திருக்கக் கூடிய பரிச்சயங்கள் தான் என்று சொல்ல முடியாது. ஆனால் நேரில் எதிர்ப்படும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பு இருந்தால் அந்த முனைப்பு ஏற்படுத்தும் பரிச்சயங்கள் சாதாரணமாக அந்தந்த சூழல்களில் எதிர்ப்படாத பரிச்சயங்களையும் கூட முன் கொண்டுவந்து நிறுத்தும் என்று தான் சொல்ல வேண்டும். ஹிராகுட்டுக்கு வந்த முதல் வருடம் 1950-ல் புத்தகம் வாங்க என்றால் பக்கத்தில் 10 மைல் தூரத்தில் இருக்கும் […]
எனக்கு தமிழ் நாவல்களே அதிக அறிமுகம். அதற்காக சோமர்செட் மாமையும் அயன் ராண்டையும் படிப்பவனல்ல நான். இன்·பாக்ட் அயன்ராண்டை என்னால் நூறு பக்கங்கள் கூட தள்ள முடியவில்லை. நமக்கு ஏற்றதெல்லாம் லை ·பிக்ஷன். ஜேம்ஸ் ஹேட்லி சேஸ், அலிஸ்டர் மெக்லீன், சிட்னி ஷெல்டன், ஜெ·ப்ரீ ஆர்ச்சர் இப்படி. ஏதோ ஒரு கொல்கத்தா புத்தகச்சந்தையில் எனக்குப் பிடித்த ஜெ·ப்ரீ ஆர்ச்சரின் ‘ஒன்லி டைம் வில் டெல் ‘ முதல் பாகத்தை வாங்கி வந்தாள் என் மகள். கூடவே அவள் […]
ஒரு இலக்கியச் சிந்தனைக் கூட்டத்தில் திருப்பூர் கிருஷ்ணன் தான் சொன்னார். ‘ வல்லிக்கண்ணனை ஒல்லிக்கண்ணன் என்றே சொல்லலாம்.. அவ்வளவு மெலிசாக இருப்பார். ‘ பல கூட்டங்களில் வல்லிக்கண்ணனைப் பற்றித் தகவல்கள் வந்து கொண்டே இருந்தன. மணிக்கொடி காலத்து எழுத்தாளர், சிற்றிதழ்களின் பேராதரவாளர் என்றெல்லாம். ராயப்பேட்டை பகுதியில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு இலக்கிய ஆர்வலர், எனது மேலதிகாரி என்னிடம் சொன்னார்.. ‘ வல்லிக்கண்ணன் இங்கேதான் இருக்கார்.. லாயிட்ஸ் சாலை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, எண் […]