முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் வடிவம், தோற்றம் கொடுப்பது உடல் ஆகும். இவ்வுடல் உயிர் தங்கி இருப்பதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது. இவ்வுடலைக் கூடு என்றும் உயிரை அதில் தங்கும் பறவை என்றும், உடலை மெய் என்றும் உயிரை ஆவி என்றும் பலவகைகளில் கூறுவர். உடலும் உயிரும் ஒன்றை ஒன்று சார்ந்து விளங்குகின்றன. ஒன்றற்கு ஒன்று ஆதாராமாக இவை விளங்குவது குறிப்பிடத்தக்கது. இவற்றில் ஏதும் […]
முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பக்தி இயக்கப் பாடல்கள் நெகிழ்வான மொழிநடையை உடையன. பேச்சு மொழியின் அடிக் கூறுகளான வழக்குச் சொற்கள், சொல்லடைகள், பழமொழிகள், ஒலிக்குறிப்புச் சொற்கள் ஆகியவை கலந்த ஒரு மொழிநடையினையே தேவார மூவரும், ஆழ்வார்களும் பயன்படுத்தியுள்ளனர். இக்காலத்திலேயே மக்களிடையே வழங்கப்பட்ட பல்வேறு விதமான நாட்டுப்புறக் கூறுகள் இலக்கிய வடிவம் பெற்றன. மக்களின் விளையாட்டுக்கள், புதிர்கள், பழமொழிகள் ஆகியவை அவற்றுள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. தேவாரம் பாடிய மூவரில் நீண்ட காலம் வாழ்ந்த பெருமைக்கு உரியவர் திருநாவுக்கரசர். இந்நாவுக்கரின் இயற்பெயர் மருணீக்கியார் என்பதாகும். இவரை, உழவாரப் படையாளி, தாண்டக […]
1940களில் மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்கு திடீரென்று ஒரு மவுசு ஏற்பட்டது. ஆனந்தவிகடன், கல்கி போன்றவை இந்தி, வங்காளி, மராத்தி மொழிக் கதைகளை போட்டி போட்டுக் கொண்டு மொழி பெயர்த்து வெளியிட்டன. அம்மொழி நாவல்களும் வெளியாகி மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றன. அதற்கு முன்பே க.நா.சு ஜர்மனி, ஸ்வீடிஷ் போன்ற மேலை நாட்டு மொழி நாவல்களை, அநேகமாக அனைத்து உலக நாவல்களையும் அசுர வேகத்தில் மொழி பெயர்த்துத் தள்ளினார். 60களில் தீபம், கலைமகள் போன்ற இலக்கிய இதழ்களில் நம் சகோதர […]
-ராமலக்ஷ்மி எழுத்து என்பது ஒரு சிற்பத்தைப் போல ஒரு கல்வெட்டைப் போல தான் வாழ்ந்த காலத்தை வருங்காலத்துக்கு எடுத்துச் செல்லும் ஆவணமாக அமைந்து போகையில் எழுதப்பட்ட காலத்தில் கொண்டாடப்பட்டு மக்கள் மனதில் இடம் பெறுவதையெல்லாமும் தாண்டி வருங்காலம் வியந்து போற்றுவதாக உயர்ந்து நின்று விடும். கவனிப்பற்று போகும் அத்தகு எழுத்துக்கள் கூட பின்னாளில் எவராலேனும் புதையல் எனக் கண்டெடுக்கப்பட்டதும் நடந்திருக்கிறது. ஆனால் ஆசிரியர் சுகாவுக்கு சக காலத்திலேயே அந்த அங்கீகாரத்தை ஆனந்த விகடன் தந்திருந்தது ‘மூங்கில் மூச்சு’ […]
என்னை என்றும் ஆச்சர்யப்படவைப்பது மொழிபெயர்ப்பு நூல்கள். நாம் ஒன்றை எழுதி விடலாம்., கொஞ்சம் வாசிப்பு மற்றும் அனுபவ சேகரிப்பு போதும். ஆனால் மொழிபெயர்ப்பில் அந்த மொழி சிதைவுறாமல்., சொல்லவந்த கருத்துக்கள் பிழைபடாமல் சொல்வது கடினம். ஒரு மொழிபெயர்ப்பாளன் வாசகர்க்கும், அந்த நூலை எழுதிய எழுத்தாளனுக்கும் உண்மையாய் இருக்க வேண்டும். தன் கருத்து. ஒர் சார்பு நிலை எந்த இடத்திலும் வெளிப்பட்டுவிடாமல் காக்க வேண்டும். ஒரு சிருஷ்டிகர்த்தாவை விட கடினமான பணி அதைப் போன்ற குறைவில்லாத உயிர் சிற்பம் […]
முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com விளையாட்டு என்பது வெளித்தூண்டல்களின்றி மகிழ்ச்சியூட்டும் செயல்களில் இயற்கையாக ஈடுபடுவதாகும். இவ்விளையாட்டை மனகிழ்ச்சி ஊட்டும் செயல் என்பர். அவ்விளையாட்டில் பொழுதுபோக்கு மட்டுமின்றி உடல், உள நலச் செயல்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் விளையாட்டானது தமிழக மக்களின் வாழ்க்கையோடும், பண்பாட்டோடும் இணைந்ததாக விளங்குகின்றது. பழந்தமிழர்களிடையே காணப்பட்ட மகளிர் விளையாட்டுக்கள் குறித்த செய்திகள் பல தமிழிலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. விளையாட்டுக்களின் வகைகள் விளையாட்டை பால்(sex) அடிப்படையில் பாகுபடுத்தலாம். அவையாவன, 1. […]
கொங்கு நாட்டு மண்வாசமும் வட்டாரப் பேச்சும் முதன்முதலாக திரு.ஆர்.சண்முகசுந்தரம் அவர்களின் படைப்புகளில்தான் கண்டோம். இப்போது அவரது வாரிசாக திரு.சூர்யகாந்தனது படைப்புகளில் அதைக் காண முடிகிறது. சூர்யகாந்தனது ‘மானாவாரி மனிதர்கள்’, ‘பூர்வீக பூமி’ போன்ற அவரது ஆரம்ப நாவல்கள் ஆர்.சண்முகசுந்தரத்தின் வெற்றிடத்தை நிரப்பும் படைப்புகளாக அடையாளம் காட்டின. சூர்யகாந்தன் பன்முகப் படைப்பாளி. கவிஞராகவும், சிறுகதை மற்றும் நாவல் எழுத்தாளராகவும், இலக்கிய விமர்சகராகவும் தமிழ் இலக்கிய உலகில் சாதனை புரிந்து வருபவர். இவரது எழுத்துக்களின் மையம் கொங்குநாட்டு மக்களின் வாழ்வியலையே […]
சட்டென தொலைந்த மின்சாரத்தில், மிதந்துகொண்டிருந்த ஒளியும், கசிந்து கொண்டிருந்த ஒலியும் தீர்ந்துபோனது. எங்கு நோக்கினும் அடர் இருள். சாலையில் கால் பதித்தபோது, நடுஇரவிலும் பரபரப்பாய் இயங்கும் நகரத்தின் மற்றொரு முகமாய் அமைதி நீண்டு கிடந்தது. நிலவில்லாத வெளுத்தவானம். குறை இயக்கத்தில் இருக்கும் நீண்ட சாலையைப் பார்க்கும்போது அந்த அமைதி சலனமில்லாமல் உறங்கும் ஒரு குழந்தையைப் போலிருந்தது. ஓசை போன்றே வெளிச்சமும் அமைதியைத் தின்றுவிடுவதாகத் தோன்றியது. வெளிச்சம் மிகு இடத்தைவிட குறை வெளிச்சத்தில் அதிக அமைதியை உணரமுடிவதாகத் தோன்றியது. […]
ஷி றி ஸேதுராஜன் [ ஊமையர் கண்ட கனவுகள்] படைப்புக்கன்றி படைப்பாளருக்கே விமர்சனம் எழுதுவது மற்றெங்கேயும் எப்படியோ, நான் பார்த்த வட்டங்களில் சகஜமாகிவிட்டது. தீவிர பிரதட்சவாதத்தை (க்ஷீமீணீறீவீனீ) விட பின்நவீனத்துவமே இன்றைய சமுகத்தின் அவலங்களின் வலிவையும் அந்த அவலங்களின் எதிராக பலர் இலக்கியம் என்ற பெயரில் கொடுக்கும் குரல்களின் மலிவையும் எடுத்துரைக்கவல்லது. ஏனெனில் எல்லோரும் ஒரே மொழி பேசக்கூடிய நிலைக்கு உலகம் வளர்ந்து கொண்டிருந்தாலும், நாம் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக்கூடிய புரிந்துணர்வோ குறைந்துகொண்டே வருகிறது. […]
மன்னார் அமுதன் ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு அவருடைய மரணத்தின் போது தான் தீர்மானமாகின்றது. அந்தச் சிறப்பை வாழும்போதே பெற்றுவிட வேண்டும் என்பதற்காக நேர்மையான வழியில் உழைப்பவர்களை விட குறுக்கு வழியில் செயல்படுபவர்களே அதிகம். இவர்களுக்கு மத்தியில் 22 நூல்களை வெளியிட்டுள்ள கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் எவ்வித படோடோபமுமின்றி இயல்பாக வாழ்ந்து வருதலே அவரது சிறப்பாகும். இலங்கையின் குறிப்பிடத்தக்க திறனாய்வாளர்களுள் ஒருவராக இருந்து வரும் சிவகுமாரன் பிரபலமான இலக்கியவாதிகள் மற்றும் புத்திஜீவிகள் பலரின் நூல்களை திறனாய்வு செய்து அவற்றை […]