அதீதத்தை ஒரு முறையேனும் ருசித்திருக்கிறீர்களா.. உணவில் மட்டுமே இருக்கலாம் போதும் எனத் தோன்றுவது. புகழாகட்டும் பணமாகட்டும் அதீதமே ஒரு ருசியைப் போலப் பீடிக்கிறது.. அது கசியும் ரத்தத்தின் சுவையாகவும் இருக்கலாம். எல்லாமுமான ஒரு சுவையில் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும். அதுதான் அதீதத்தின் ருசி. உடல் அழிய அழிய உயிர் சுடர் விட்டுப் பிரகாசிப்பதைப் பார்ப்பது மிகவும் கிளர்ச்சியூட்டுவதாகும். உடலின் சுமையும் நினைவின் சுமையும் குறையக் குறைய பறக்கலாம்தானே..ஒரு சுடரைக் கிள்ளி எடுக்க முடியும் உங்களால். ஒரு […]
எனது எழுத்தார்வத்துக்கு முதலில் தூண்டுதலாக இருந்தவர் திரு.அகிலன் என்றால், அதனைத் தீவிரப்படுத்தியவர் திரு.ஜெயகாந்தன் அவர்கள். 1957ல்தான் அவரது படைப்பை நான் ‘சரஸ்வதி’ இதழில் படித்தேன். பிறகு ‘ஆனந்தவிகடனி’ல் வந்த முத்திரைக் கதைகளும், குறுநாவல்களும், தொடர் நாவல்களும் என்னை அவரது தீவிர ரசிகனாக ஆக்கின. அதற்குப் பிறகு புதுமைப்பித்தனைப் படிக்க நேர்ந்த போது, ஜெயகாந்தன் அவரது வாரிசாகவும், அவரது இடத்தை நிரப்புகிற வராகவும் எனக்குத் தெரிந்தார். 1962ல் அரியலூரில் நடைபெற்ற ‘கலை இலக்கியப் பெருமன்ற’ ஆண்டு விழாவில் ஜெயகாந்தன் […]
பணம் மட்டுமே குறிக்கோளாய்க்கொண்ட ஒரு சமூகம்.அதையே இந்தப்படத்தை பார்ப்பவருக்கும் எடுத்திருப்பவர்களுக்குமான மையக்கருத்தாக வைத்து,எப்படியேனும், வலிக்காமல், அதற்கென பெரும் முயற்சி என்று எதுவும் செய்யாமல் , குறுக்கு வழியில்”Easy Money”யை அடைந்து விடத்துடிக்கும் ஒரு கூட்டம் என்ற எதிர்மறை எண்ணங்கள் கொண்ட நால்வர் – அஜித்’தோடு ஐவர்,என ஒன்று கூடிச்சேர்ந்து கொண்டு யாருக்கோ சொந்தமான பணத்தை அடி’த்துச்செல்லுவதை கொஞ்சம் மிரட்டலாகவே சொல்லியிருக்கிறார் பிரபு வெங்கட். பணம் , பணம் , பணம் இதுவே தாரக மந்திரம் காதோரத்தில் சிறிது […]
முனைவர் மு. பழனியப்பன் சித. சிதம்பரம், பூம்புகார்க்கவிதைகள், முருகப்பன் பதிப்பகம், பழனியப்ப விலாசம், 48. முத்துராமன் தெரு, முத்துப்பட்டணம், காரைக்குடி, 630001- 2011 ஆகஸ்டு, விலை ரு. 60 கவியரங்கம் என்ற கலைவடிவம் மிக்க ஆளுமை உடையதாக சென்ற இருபதாண்டுகளுக்கு முன்னர் அதாவது கவியரசு கண்ணதாசன் காலத்தில் விளங்கியது. மக்கள் முன்னிலையில் கவிதையைப் படைத்து அவர்களின் கைத்தட்டலில் பெருமை பெற்ற சிறப்பினை கவியரங்கங்கள் பெற்றன. பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு போன்ற சிறப்பு நாள்களில் ஊடகங்களிலும் இவை நடைபெற்றுப் பெருமை […]
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பண்டைத் தமிழரின் இலக்கியங்களை மூன்று பெரும் பரிவுகளாகப் பகுப்பர். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்பனவாகும். அவற்றில் பதினெண் கீழ்க்கணக்குத் தோன்றிய காலத்தைச் சங்கம் மருவிய காலம் என மொழிவர். இவ்விலக்கியங்கள் நீதி இலக்கியங்கள், அற இலக்கியங்கள் என வாழங்கப்பெறுகின்றன. சங்க காலத்தில் காதலும், வீரமும் பாடு பொருளாக விளங்கியது. அதனை அடியொற்றி வந்த சங்கம் மருவிய கால இலக்கியங்களிலும் இத்தகைய […]
முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி புதுக்கோட்டை கவிச்சக்கரவர்த்தி கம்பன் படைத்த இராமாவதாரம் என்ற கம்பராமாயணத்திற்கு நல்ல உரை ஒன்று மறுபதிப்பாகித் தற்போது வந்துள்ளது. தமிழ் வளர்த்துப் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 1955 ஆம் ஆண்டில் கம்பராமாயணத்திற்கு ஒரு நல்ல உரையை பதினான்குத் தொகுதிகளில் வழங்கியது. இந்த உரை உருவாக்கத்திற்குச் சொல்லின் செல்வர் ரா. பி . சேதுப்பிள்ளை, இராவ் சாகிப் மு. இராகவையங்கார், பேராசிரியர் தெ. பொ. […]
சென்னை செல்லும்போதெல்லாம் இலக்கியப் பத்திரிகை அலுவலகங்களுக்குப் போய் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்திப்பது போல, பிரபல எழுத்தாளர்களைச சந்திப்பதும் ஆரம்ப காலத்தில் எனக்கு விருப்பமான ஒன்றாக இருந்தது. அத்தகைய சந்திப்புகள் பிறகு நட்பாகவும் நெருக்கமாகவும் வளர்ந்து இன்று வரை தொடர்கிறது. முதன்முதல் எனக்கு அமரர் – தமிழின் முதல் ஞானபீட விருதாளர் – திரு.அகிலனுடன் ஏற்பட்ட சந்திப்பு தற்செயலானது. 1957 வாக்கில், என் உறவினர் ஒருவரின் திருமணம் நடந்த ஒரு சிறு கிராமத்தில் வைத்து நிகழ்ந்தது அந்த சந்திப்பு. […]
கணையாழி 1965ல் தொடங்கப்பட்டது. ஓராண்டுக்குப் பிறகுதான் எனக்கு அது பார்க்கக் கிடைத்தது. உடனே சந்தா அனுப்பி வைத்தேன். அப்போது அதன் விலை 40 பைசா தான். அதோடு, முதல் இதழிலிருந்தே வாங்கிச் சேகரிக்கும் என் வழக்கப்படி, விட்டுப்போன இதழ்களைக் கேட்டு ஆசிரியர் கஸ்தூரிரங்கள் அவர்களுக்கு எழுதினேன். சில இதழ்களே கிடைத்தன. எஞ்சியவற்றை அதன் சென்னை அலுவலகத்தின் பொறுப்பாளரான திரு.அசோகமித்திரன் அவர்களிடம் கேட்டு, அவரும் அன்போடு, விட்டுப் போனவற்றைத் தேடி வாங்கி அனுப்பினார். பிறகு சென்னைக்கு கஸ்தூரிரங்கன் அவர்கள் […]
முதலில் இம்மாதிரி ஒரு தலைப்பில் ஆரம்பிப்பதே தவறு என்றுதான் தோன்றுகிறது. தலைப்பை வைத்தே அவரை யாருக்கும் தெரியாது என்பதை நாமே உறுதிப் படுத்துவதாக ஆகி விடுகிறது என்பதுதான் உண்மை. ஆனாலும் கூட இம்மாதிரி விஷயத்திற்கெல்லாம் இப்படித் தலைப்பிட்டுத்தான் சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது. காரணம் நம் தமிழ்நாட்டின் நிலைமை அப்படி. அதாவது தமிழ்நாட்டிலுள்ள பல எழுத்தாளர்களின் நிலைமை என்று சொல்ல வந்தேன். கேரளா போன்ற மாநிலங்களில் ஒருவர் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தால் கூட அவரை ஊரறிய மேடை ஏற்றி […]
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சு ‘சோளக்கொல்லை பொம்மைக்கு’ச் சாகித்திய அக்காதமி பரிசு – செய்தி கேட்டுச் செவி குளிர்ந்தேன் ; மனத்தில் மகிழ்ச்சிப் பூக்கள். காரணம், அந்நூலின் ஆசிரியர், பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள் அடியேனின் நண்பர். புதுச்சேரித் தாகூர் கலைக் கல்லூரியில் 1970 -ஆம் ஆண்டு, பணியில் யான் சேர்ந்த போது, அவரும் அங்கே முன்னதாகச் சேர்ந்து இருந்தார். “இவர்தாம் தங்கப்பா…” – என் இனிய நண்பர் பேராசிரியர் அ.பசுபதி (தேவமைந்தன்) அவரை எனக்கு அறிமுகம் செய்த போது […]