வரலாற்றின் தடத்தில்

வரலாற்றின் தடத்தில்

என் அலுவலக நண்பர்களில் இருவரைப்பற்றி இங்கே குறிப்பிடவேண்டும். ஒருவர் நான்கு நாள்களுக்கு விடுப்பு எழுதிக்கொடுத்துவிட்டு வெளியூர் செல்வார். ஆனால் எட்டு நாள் கழித்துத்தான் திரும்பிவருவார். வந்ததுமே அப்பாவித்தனமான புன்னகையோடு பக்கத்தில் வந்து நிற்பார். அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளும்வண்ணம் ஏதேதோ காரணங்களை அடுக்கி விடுப்பு…

தற்காலப் பார்வையில் திருக்குறள்

திரு. பெ. சக்திவேல், உதவிப்பேராசிரியர், ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காஞ்சிபுரம். இந்தியத் திருநாடு வள்ளுவர் காலத்திருந்த மன்னராட்சி முற்றிலும் ஒழிக்கப்பட்டு மக்களை மக்களே ஆளும் மக்களாட்சி முறை (அ) குடியாட்சி முறை சென்ற நூற்றாண்டில் நடைமுறைக்கு வந்துவிட்டது.…

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்

ஐம்பது வருடங்களுக்கு மேலாயிற்று. நான் எழுதிய முதல் கட்டுரையிலே நாம் தமிழ் சமூகத்திலிருந்து என்னென்ன எதிர்பார்க்க்லாம். எது அறவே தமிழ்னுக்கு சித்திக்க இயலாத குண்ங்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். அது தான், திரும்பச் சொல்கிறேன்,. நான் எழுத முயன்ற முதல் முயற்சி. சித்திக்க…

பாரதிதாசனும் பட்டுக்கோட்டையாரும்

காலச்சூழல்களே கவிஞர்களை உருவாக்குகின்றன. அவ்வாறு காலத்தால் உருவாக்கப்பட்ட கவிஞரே பட்டுக்கோட்டை கலியாணசுந்தரனார் ஆவார். தம் காலத்தில் வாழ்ந்த பாவேந்தரைத் தன் குருவாகவும், வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்டு பாரதிதாசன் பரம்பரையில் வந்த கவிஞராகப் பட்டுக்கோட்டையார் திகழ்ந்தார். பாவேந்தரைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டாலும்…
எனது இலக்கிய அனுபவங்கள் – 17 எழுத்தாளர் சந்திப்பு – 4. (மௌனி)

எனது இலக்கிய அனுபவங்கள் – 17 எழுத்தாளர் சந்திப்பு – 4. (மௌனி)

“நினைவுப்பாதை” முற்றிலும் ஒரு மாறுபட்ட வாசிப்பாகவே எனக்கு அமைந்தது. இப்பொழுது கூட அக்கதையில்(கதையா?) வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் நினைவிருக்கிறதே தவிர அவற்றின் தன்மைகள் விளங்கவில்லை எனக்கு. மேலும் பெரும்பாலான இடங்களில் வார்த்தை விளையாட்டு காணப்படுகிறது. அதுவே வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போல் தெரியவில்லை.…

நாடகம் நிகழ்வு அழகியல். ஒரு பார்வை.

நாடக உலகம் இயல் இசை சேர்ந்த அழகியல் கொண்டது. முத்தமிழும் இணைந்து கிடக்கும் ஒரு பரந்த வெளியை உடையது. பெண்ணிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு சிறந்த நாடக ஆசிரியரின் சந்திப்பு நிகழ்ந்தது. நம்மையே நாடகக் கதாபாத்திரங்களாக உணரச் செய்யும் ஒரு…

எனது இலக்கிய அனுபவங்கள் – 16 எழுத்தாளர் சந்திப்பு – 3 (அசோகமித்திரன்)

'கணையாழி' தொடங்கிய 1965ஆம் ஆண்டின் இறுதியில், திரு. அசோமித்திரன் அவர்களை சென்னை பெல்ஸ் ரோடில் இருந்த கணையாழி அலுவலகத்தில் தான் முதன்முதலாக சந்தித்தேன். அப்போது அவர் கணையாழியின் சென்னை பொறுப்பாளராக இருந்தார். கணையாழியின் முதல் இதழ் முதல் பெற விரும்பி, என்னிடம்…
அகஒட்டு( நாவல்)விமர்சனம்

அகஒட்டு( நாவல்)விமர்சனம்

அகஒட்டு, இலக்குமி குமாரன் ஞானதிரவியம். அன்னம், தஞ்சாவூர், விலை. ரு. 140. கவிஞர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம். கவிதைகளை ஒருகட்டத்தில் கடந்து கட்டுரைகள், சிறுகதைகள், நாவல் என்று அவரின் படைப்பு வகைமைகள் பரவி வளர்ந்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. படைப்புகளின் முலம்,…

பேராசிரியர் சி இலக்குவனார்: கலகக்காரர்

  =சுப்ரபாரதிமணியன்   இதழியல் துறையிலும் ஈடுபட்டு தன் நில புலங்களை விற்று தமிழுக்குப் பணி செய்தவர் இலக்குவனார்.. குறள் நெறி, சங்க இலக்கியம், திராவிடக்கூட்டறவு ஆகிய இதழ்களை நட்த்தினார்.அயல் மொழிக்கலப்பால் தமிழ்நாட்டின் எல்லை சுருங்கியதை  உணர்ந்து  பிற மொழிக்கலப்பு இன்றியே…

அதீதத்தின் ருசி., இதற்கு முன்பும் இதற்குப் பின்பும். :-

அதீதத்தை ஒரு முறையேனும் ருசித்திருக்கிறீர்களா.. உணவில் மட்டுமே இருக்கலாம் போதும் எனத் தோன்றுவது. புகழாகட்டும் பணமாகட்டும் அதீதமே ஒரு ருசியைப் போலப் பீடிக்கிறது.. அது கசியும் ரத்தத்தின் சுவையாகவும் இருக்கலாம். எல்லாமுமான ஒரு சுவையில் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும். அதுதான்…