நாகர்கோவில் பகுதி மக்களின் வட்டார வழக்கு தமிழை இவ்வளவு சுவையாக எழுதி இதற்கு முன் நான் படித்ததில்லை. ஒரு புளிய மரம், அதை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் – நகரும் கதைகள். ஒரு மரம் எங்கும் நகர்ந்து போவதில்லை. ஆனால் அது வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதை சுற்றிலும் எத்தனை மாற்றங்கள் நடந்தாலும் அது அப்படியே தான் இருக்கிறது. எத்தனை மனிதர்கள் வந்து போனாலும் அதனிடம் எந்த மாற்றமும் இல்லை. அது தனக்கான வாழ்க்கையை வாழ்கிறது. வாழ்ந்து […]
‘எடிட்டிங்’ என்கிற ‘பிரதியைச் செப்பனிடுதல்’ பத்திரிகை ஆசிரியரின் தலையாய உரிமை ஆகும். அது தேவையானதும் ஆகும். மேலை நாடுகளில் பதிப்பாளர்கள் அதில் அதிகமும் கவனம் காட்டுகிறார்கள். இதற்கென்றே ஒவ்வொரு பதிப்பகமும் தனித்திறமை மிக்க எடிட்டர்களை வைத்திருப்பார்கள். எவ்வளவு பெரிய எழுத்தாளரானாலும் இவர்களது கண்டிப்புக்குத் தப்ப முடியாது. தமது வெளியீடு தரமாக அமைய வேண்டும் என்பதில் அவர்கள் காட்டும் அக்கறை பிரமிப்பானது. தமிழ்ப் பதிப்பாளர்களில் ‘க்ரியா’ இதில் தனிக் கவனம் செலுத்துவதாக அறிகிறேன். தங்களுக்குத் திருப்தி ஏற்படுகிறவரை எழுத்தாளரைத் […]
சனி மூலை என்று தன் கன்னி எழுத்து முயற்சியை அடையாளப் படுத்துவார்களா? பொதுவாக நம் தமிழர்களுக்கு இதைக் கேலி செய்யத் தோன்றலாம். ஆனால் அப்படி ஒருவர் கிடைத் திருப்பதும், சனி மூலை ஒரு புத்தகமாக உருவாவதும் நல்ல விஷயங்கள் தான். நமக்கு வேண்டிய விஷயங்கள் தான். இது சம்பிரதாயமான பாராட்டு அல்ல. பாசாங்குகளும் பாவனைகளும் அற்ற தனக்கு நேர்மையும் உண்மையுமான மனப் பதிவுகள் ஒன்று சொல்ல வேண்டும். ஏற்கனவே போட்டிருக்கும் பாதையில் செல்லாமல் தனக்கென வழி ஒன்று […]
ஜே. ஜே. எனும் தமிழ் படத்தில் நாயகன் நாயகி கைகளில் தவழும் ஒரு நாவல், எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் படைப்புகளில் அதிகம் பேசப்பட்ட நாவல், காலச்சுவட்டின் கிளாசிக் வரிசையில் வருகிற நாவல் என்பது தாண்டி நாவல் பற்றிய எந்த விமர்சனக் குறிப்பும் தெரிந்து கொள்ளாமல் வாசிக்க ஆரம்பிக்க, எடுத்த எடுப்பிலேயே சுவாரஸ்யத்துக்குள் இட்டுச் சென்று பிரமிக்க வைத்து சிந்தனையை தூண்டியது என்று சொன்னால் மிகை இல்லை. ஆனால் இப்படி எல்லாம் சொல்லிவிட மாத்திரம் நாவலின் களம் ஒரு […]
முத்துக்கள் பத்து என்கிற தலைப்பில் வண்ணநிலவன் அவர்களின் சிறந்த பத்து கதைகளை எழுத்தாளர் திலகவதி தொகுத்துள்ளார். இது ஒரு அம்ருதா பதிப்பக வெளியீடு. இதே போல் தமிழின் பிற சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த பத்து கதைகளும் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. முன்னுரையில் திலகவதி வண்ணநிலவன் எழுத்துகள் பற்றி அழகாக சொல்லி செல்கிறார். பின் திடீரென தமிழ் இலக்கிய சூழலில் நிலவும் அரசியலுக்குள் நுழைந்து எக்கச்சக்கமாய் சொல்கிறார். (ஏனோ?) இந்த நூலில் என்னை மிக கவர்ந்தது முதல் மற்றும் கடைசி […]
(01) ………………………….. உதயசூரியன் கவிழ்ந்து ஈர்க்குத் தடியாகிப் பெருக்காதா எங்கிலும் மழைக் குப்பை…குப்பை.. உண்மைதான். வானம் ஒரு குப்பைத் திடலெனில் அதிலிருந்து கீழே விழுபவை குப்பைகள் தானே? தனது ‘இலை துளிர்த்து குயில் கூவும்’ தொகுப்பின் முதலாவது கவிதையில் இப்படித்தான் மழையை ஒரு குப்பையெனச் சொல்கிறார் கவிஞர் எஸ். நளீம். சேவல் கூவும் அதிகாலைவேளையொன்றில் பெய்யும் மழை குறித்த அவரது பார்வை இக் கவிதையாகியிருக்கிறது. தன் பரட்டைத் தலை விரித்து எல்லா இடங்களிலும் படர்ந்திருக்கும் மூடுபனியை, […]
வாழ்க்கையில் அனுபவப்பட்டுப் பெற்ற பாடங்களைத் தமிழர்கள் பழமொழிகளாக்கிகப் பின்வரும் சந்ததியினரின் வாழ்க்கைக்குப் பயன்படும் என்று அவற்றை விட்டுச் சென்றனர். பழமொழிகளுள் பல்வேறுவிதமான உள்ளடக்கக் கூறுகள் காணப்படுகின்றன. மனிதப் பண்புகள், செயல்கள், பொருள்கள் பற்றிய மதிப்புகள், தொழில்களைப் பற்றிய செய்திகள் உள்ளிட்டவை அதிகம் பழமொழிகளில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. பணம் பணம் படைத்தோர் பற்றியும், அவர்களது செயல்களையும் சமுதாயத்தில் பணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவமும் பழமொழிகளில் இடம்பெற்றுள்ளன. முதன் முதலில் மக்கள் தங்களிடம் இருந்த பொருள்களைக் கொடுத்துவிட்டுப் பின்னர் அதற்கு ஈடாகத் […]
வே.சபாநாயகம் எழுத்தாளர் அனுப்பும் கதை அல்லது கட்டுரையின் தலைப்பை, தனதுரசனைக்கு அல்லது வாசகரது ரசனைக்கு ஏற்றது என ஆசிரியர் கருதுவதற்குஏற்ப மாற்றுவது ஆசிரியரின் இன்னொரு உரிமையாகும். சில சமயம் மாற்றப்படும்தலைப்பு எழுத்தாளருக்கு உவப்பானதாகவும் அமைந்து விடுவதுண்டு. அநேகமாகஎழுத்தாளர் முகம் சுளிப்பதாகவே மாற்றம் அமைவதுதான் யதார்த்தம். அதேசமயம் வாசகருக்கும் உவந்ததாகவும் அமைந்து விடலாம். ஆனால் படைப்பாளிமுகம் சுளிப்பதில் பயனில்லை. அடுத்து அவருக்கு வாய்ப்பு இல்லமால் போகக்கூடும். எல்லா பத்திரிகைக்கும் இது பொதுவானதுதான் என்றாலும் ‘குமுதம்’பத்திரிகைக்கு தலைப்பை மாற்றுவது என்பது […]
ஏலாதி என்ற நூல் நீதி நூல்களில் ஒன்றாகும். இதனுள் ஆண்களுக்குரிய நீதிகளும் பெண்களுக்கு உரிய நீதிகளும் இடம் பெற்றுள்ளன. இந்நூல் வழியாகப் பெறப்படும் இந்த நீதிகளைக் கொண்டு அந்தக் காலத்தில் ஆண்சமுகம் மற்றும் பெண் சமுகம் ஆகியன எவ்வாறு இருந்தன என்பதனை அறிந்து கொள்ள முடிகின்றது. இந்தக் கட்டுரையின் வழியாக ஏலாதி என்ற நீதி நூல் காலத்தில் ஆண்களுக்கு உரிய நீதிகளாகக் காட்டப் பெற்ற செய்திகள் எடுத்துரைக்கப்படுகின்றன. ஏலாதி ஆண்களைச் சிறந்தவர்களாக ஆக்குவதற்காக அவர்களுக்கு உரிய நல்ல […]
திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சிறுகதை தொகுப்பு. அவரின் இயல்பான நடையில், காற்றில் அடித்துச் செல்லப்படும் இறகை போல, இந்த நூலை வாசிக்கும்போது பறக்கத் தொடங்கி விடுவீர்கள். பல்வேறு தளங்களில் எழுதப்பட்டிருக்கும் இந்த சிறுகதை தொகுப்பில் மிகச் சிறந்த கதையாக நான் விரும்புவது, “குதிரைகள் பேச மறுக்கின்றன”. பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் கணவன் மனைவியின் வாழ்க்கையில், நின்று நிதானிக்க நேரம் இல்லை. ஊரில் இருந்து வரும் அவனின் அப்பா வீட்டில் வளரும் நாயை வெளியே கூட்டிச் […]