காஷ்மீர் பையன்

This entry is part 28 of 43 in the series 29 மே 2011

அமீரின் தாத்தா தாடிக்கு வயது எழுபத்தைந்து என்பார் அப்பா. அண்டை வீட்டுத் தாத்தாவின் தாடியலைகளில் மிதப்பது பிடிக்கும் காஷ்மீர் பையனுக்கு. உள்ளே அழுத்தும் துயரங்களைத் தேக்கி வைத்திருக்கும் பள்ளத் தாக்குகளான முகச் சுருக்கங்களுக் கிடையே வெள்ளையருவியாய்த் தொங்கும் தாடி.   தாத்தா தன் பேரன் அமீருடன் விளையாடும் போது சிரிப்பார். காஷ்மீர் பையனோ பரமபத விளையாட்டில் பாம்புகளிடையே எப்போதும் உருண்டு கொண்டிருப்பான். “எனக்கும் ஒரு நாள் தாடி வளருமா?” “பரமபத விளையாட்டில் காய்கள் பிழைப்பது பகடைக் காய்கள் […]

ஏதுமற்றுக் கரைதல்

This entry is part 26 of 43 in the series 29 மே 2011

நான் நடக்கின்ற பாதை   எரியமுடியாத இருளினடிக்கட்டைகளால் கிழிபட்டிருந்தது. ஒவ்வொரு காயக்கிடங்கிலும் செந்நிறமுறிஞ்சிய நினைவுகளை விழுங்கிய எறும்புகள் பரபரத்தோடி விழுகின்றன. பாதையின் முடிவற்ற வரிகளைஒவ்வொருவரிடமும் காவியபடி ஊர்ந்துவருகின்றன சிவந்த எறும்புகள். உலரமுடியா அழுகையினீரம்இருட்கட்டைகளிலிருந்து சிந்துகிறது. ஓலச்சுவர்களின் வெறுமையில் நாக்கறுந்த பல்லியொன்றினசைவு எதுவுமற்றுக் கரைந்துபோகிறது. நினைவுப்பாலையாகிவிட்ட இந்த நிலத்திலிருந்து காயக்கிடங்கில் எறும்புகள் மொய்த்த என்னைப்பார்க்கிறேன்.இருட்கட்டைகளினீரம் எங்கும்டரஏதுமற்றுக் கரைந்துபோகிறேன்.   –ந.மயூரரூபன்  

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2)

This entry is part 20 of 43 in the series 29 மே 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎழுதும் இந்த எழுத்தாணியை    எடுக்காது செம்மறி ஆடு ! பிரிக்கும் இடைவெளிப் பேதங்கள் இல்லை நமக்குள்ளே ! காதலின் புனித பீடம் இது ! கண்களைக் கசக்கி காதலைக் காதலோடு நோக்கு மீண்டும் !   ++++++++++++   “வாசலில் யாரெனக் கேட்டாய்” “உனது அன்புத் தாசன்” என்றேன் நான் ! “எதற்கு வந்தாய் ?” என்று நீ கேட்டாய். “வழிபட்டு உன் […]

பிறப்பிடம்

This entry is part 19 of 43 in the series 29 மே 2011

வெள்ளையர் வேட்டி சேலையிலும் நம்மவர் ஜீன்சிலுமாய் நீறு மணமும் மக்களின் வேண்டுதல்களும் கமழும் நம் ஊர் கோவில்..   ஊர்களின் பெயர்களும் விற்கப்படும் பொருட்களும் ஒலித்துக்கொண்டிருக்கும் முகம் தெரியா மக்கள் நிறை பேருந்து நிறுத்தம்..   அதிகபட்ச அலங்கோலத்தில் வீசப்பட்ட புத்தகங்கள், துவைத்த துவைக்காத துணிகளின் அணிவகுப்பு கொண்ட விடுதி அறை..   என்று எங்கும் பிறப்பெடுக்கின்றன என் கவிதைகள்.. என் கண்கள் நோக்கும் உன் கண்கள் பார்க்கும் போது மட்டும் மௌனமே தவழ்கிறது சுற்றிலும்.. பேச […]

வேரற்ற மரம்

This entry is part 18 of 43 in the series 29 மே 2011

சொல்லாமல் செல்வதால் பெருகும் வலியை உனது இருபின்மையால் உணர்கிறேன். நிழல் போல வருவதாய் நீ வாக்களித்திருந்த வரிகள் எனது நாட்குறிப்பின் பக்கங்களில் வரிகள் மட்டுமே அருகிருந்து சொற்களை அர்த்தப்படுத்துகின்றன. எனது வாழ்க்கை வனத்தில் இது நட்புதிர்காலம்… வெறுமை பூத்த கிளைகள் மட்டும் காற்றின் ஆலாபனைக்கு அசைந்தபடி அகத்தே மண்டிய நினைவின் புகையாய் அவ்வப்போது வியாபிக்கிறாய் என்னை நமது நட்புறவின் குருதியை நிறமற்ற நீராய் விழிகளினின்று உகுக்கும்படி புன்னகை ஒட்டிய உதடுகளுடன் கைகோர்த்தபடி புகைப்படங்களில் மட்டும் நீ வேரற்ற […]

வட்டத்தில் புள்ளி

This entry is part 17 of 43 in the series 29 மே 2011

வட்டத்தில் சுற்றி வரும் புள்ளி போல- நம் வாழ்க்கை, மேல் போகும் கீழிறங்கும்- அழியாதிருக்கும்! கீழிறிந்து மேல் போகும் சுழற்சியிலே, விடாது உந்தப் பட்டால் மேலே போகும்! அது, அங்கேயே நிலைத்திருக்கும் சூக்குமம் தெரிந்தால் கீழிறிரங்கும் புள்ளிகள் இல்லாமல் போகும்! பழையப் புள்ளி பழையனவா, அன்றி புதிதான புள்ளித் தொடரா? புரிய வேண்டும்! அதில் புதிதாக தோன்றும் புள்ளி புதியது அல்ல! இருந்தவையே சுழற்சியிலே புதியனவாகும்! இங்கு இல்லாது ஒன்று தோன்றுவதில்லை! இருப்பதையே அறியாது நாம் தெளிவதுமில்லை! […]

அடங்கிய எழுத்துக்கள்

This entry is part 16 of 43 in the series 29 மே 2011

உரத்துக் குரலிட்ட பேனாக்களை வானரங்கள் உடைத்து மையை உறிஞ்ச மௌனித்த செய்திகள். யாருமில்லாப் பொழுதில் அலைகள் சப்பித் துப்பிய சிப்பிகள் கீறிப்போயின கவிதையின் தொங்கல்கள். மிஞ்சிய காகிதத்தில் தொடக்கங்கள் தொங்கல்களோடு இணைய இனி ஒருக்காலும் வரப்போவதில்லை அந்தப் பேனாக்கள் செய்திகளிலும்கூட!!! ஹேமா(சுவிஸ்)  

தக திமி தா

This entry is part 12 of 43 in the series 29 மே 2011

பொய்மைகள் திரை கட்டி உடல் மறைத்த கூடு சட்டமிட்ட மனமெனும் பெட்டியினுள் ஓர் உக்கிர நடனம் ஊழித்தாண்டவம் தீப்பொறி கிளப்ப உணர்வுகள் கொண்டு தீட்டிய கூரிய போர்வாள் சிறிதும் அயர்வின்றி சுழற்றப்பட இரத்தக்களரியானது நெஞ்சம் முழுவதும் காயங்கள் வெளித் தெரியாதிருக்க உலர்ந்து வறண்ட உதடுகளில் புன்னகை சாயம் அதிலும் தெறிக்கும் சிவப்பாய் குருதி வர்ணம் அனல்களில் ஆகுதி கொடுக்கப்பட சாம்பலானது பிண்டமெனும் மெய்

இருள் போர்வைகளின் முடிச்சுக்கள்

This entry is part 11 of 43 in the series 29 மே 2011

இருள் போர்வைகளின் முடிச்சுக்களிறுகி சிக்கலாகுகையில் சுவாசமோர் விசையில் மென்காற்றாகவோ புயல்மழையாகவோ ஏன் பெருமூச்சாகவும் இருத்தல் கூடும் .   ஒரு கயிற்றின் வழியில் இரு முனைகளாக வழிந்தோடுமவை வெவ்வேறு கோணங்கள் தீண்டி ஒரு மையப்புள்ளியில் ஒன்றுபட இரு எல்லைகளில் உருட்டப்பட்ட புள்ளிகளாக மீளவும் சிக்கல்கள் பிரிக்கப்படாமல் அவள் மற்றும் அவன் ….   -ஷம்மி முத்துவேல்  

மிச்சம் !

This entry is part 10 of 43 in the series 29 மே 2011

சந்தர்பங்களின் சாத்தியத்திற்கு உதவக்கூடுமென சேருமிடத்தை மாற்றியவாறு கணத்துக்கொண்டே போனது ஓர் பயணம் … எங்கும் இறங்க மனமின்றி இருப்பின் தடயங்கள் , இழந்த இரவுகளை எண்ணிக்கொண்டு கிளம்பும் போதெல்லாம் நினைவுகளை சுமந்து போகிற ஏதேனுமொரு திசையில் குறுக்கிடும் காகத்திற்கு தெரியாது எதிர்பார்புகளின் குவியலோடு அலையும் வாழ்வு பற்றி -கவிதா ரவீந்தரன் (kavitharaveendar@yahoo.co.in)