ஒரிகமி

ஒரிகமி

காகிதத்தில் கற்பனை மடிப்புகள் விரிந்து புதுப்புது உருவங்கள் பார்வையாளர் உள்ளத்தில் மிதக்கும். ஒரிகமி கலைஞனின் மெல்லிய விரலழுத்தத்தில் குதித்தெழுகின்றன குதிரைகளும், பறவைகளும். ஒரே தாளில் தோன்றுகின்ற வியத்தகு உருவங்களை உள்ளத்தில் கசங்காமல் பதித்துக் கொண்ட மக்களின் கரகோஷம் அரங்கைக் குலுக்கியது.  …
மனவழிச் சாலை

மனவழிச் சாலை

கவலைகள் அவ்வப்போது கடுகாகவும் கடுஞ்சீற்றத்துடனும் வரும்...   அதன் வருகையின் அடையாளமாய் மனதில் சிறு குழிகளும் பெருங்குண்டுகளுமாய் இருக்கும்...   எதிரே வருபவர்களெல்லாம் அதில் தடுக்கி விழலாம். குழிகளையும் சாலையையும் பொறுத்து காயங்களும் ஏற்படலாம்.   மிகச் சிலரே அதில் தண்ணீர்…

சதுரங்கம்

நாட்கள் நத்தை போல் நகர்கிறது கணக்குச் சூத்திரம் போல வாழ்க்கை வெகு சிக்கலாக இருக்கிறது தாழப் பறந்து கொண்டுள்ளதால் உயரே பறப்பவர்களின் எச்சம் என் மீது விழுகிறது சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டதைப் போல வாழ்க்கை சங்கிலிகளால் என்னைப் பிணைத்துள்ளது நினைத்தபடி…
ஊரில் மழையாமே?!

ஊரில் மழையாமே?!

மற்றொரு மழை நாளில்... மடித்துக் கட்டிய லுங்கியும் மடக்குக் குடையுமாய் தெருவில் நடந்த தினங்கள்...   கச்சலில் கட்டிய புத்தக மூட்டையும்.. "அடை மழை காரணமாக பள்ளி இன்று விடுமுறை"யென- தேனாய் இனித்த கரும்பலகையும்...   சற்றே ஓய்ந்த மழை வரைந்த…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி கவிதை-44 பாகம் -3)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ”ஆலயங்களுக்கும் மற்ற புனிதத் தளங்களுக்கும் நான் தொழச் செல்கையில் அங்கேயும் திருவாளர் பிதற்றுவாயன் கரத்தில் ஒளிவீசும் செங்கோல் ஏந்திச் சிரத்தில் கிரீடத்துடன் ஓர் ஆசனத்தில் அமர்ந்திருப்பான் ! …

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -3)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா         "எங்கு நீ இனிதாக வசிப்பாய் ?" என்று நான் வினவினேன். "அரண்மனை வசிப்பே சிறந்தது" என்று நீ அளித்தாய் பதில். "அங்கென்ன…

பிஞ்சுத் தூரிகை!

  அடுத்த வாரமாவது சுவருக்குச் சாயம் அடிக்கச் சொன்னாள் மனைவி.   வட்டங்களும் கோடுகளுமாய் மனிதர்கள் சதுரங்களும் செவ்வகங்களுமாய் கொடிகள் ஏனல் கோணலாய் ஊர்வலம்   இரண்டு சக்கர போலீஸ் காரும் காரைவிட பெருத்த விளக்குகளும்   விதவிதமான பந்துகளும் விரட்டும்…

விசையின் பரவல்

ஊடலின் தொடக்கம் இனிதே ஆரம்பமானது உன் சொல்லாலும் என் செயலாலும் . மனதின் கனமேற்றும் நிகழ்வுகள் எல்லையற்று நீள்கிறது . என் கண்களின் சாட்சியாகி நிற்கிறது உன் சொற்கள் . நீர்மம் குமிழாக உருவெடுக்க விசையின் பரவல் முந்தி சென்று சொல்லி விடுகின்றன…

அம்மாவின் நடிகைத் தோழி

மூலம் - இஸுரு சாமர சோமவீர (சிங்கள மொழியில்) தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை   அம்மா சொல்வாள் அந் நடிகையின் நடிப்பைப் பார்க்க நேரும் போதெல்லாம்   'பள்ளிக்கூடக் காலத்தில் உயிர்த் தோழிகள் நாம் அமர்ந்திருந்தோம் ஒரே வகுப்பில்…