அம்மாவிடம் கதைகள் கேட்பதென்றால் அலாதி விருப்பம். அந்த மாதிரி ஒரு அப+ர்வ சந்தர்ப்பம் எப்பொழுது வாய்க்கும் என்று காத்துக் கொண்டிருப்பான். வேறு யாரும் உடன் இருக்கக் கூடாது அப்போது. சொல்லப்படும் கதைகள் முழுவதும் இவனுக்காகவே. அத்தனையையும் இவனே கேட்டு மகிழ வேண்டும். மகிழ வேண்டுமா? அப்படியா சொன்னேன்…தவறு…தவறு. அம்மாவின் கதைகளில்தான் எங்கிருந்தது மகிழ்ச்சி? சந்தோஷமான வாழ்க்கையில் அங்கங்கே சோகமும், துக்கமும், இழையாடுவது உண்டு. ஆனால் வாழ்க்கையே சோகமென்றால்? கதையைச் சொல்லிக் கொண்டிருக்கையில் எங்காவது அம்மா சிரித்தாளா? எந்த […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “ஊழியம், உணவு, தங்குமிடம், உடுப்பு இவைதான் மனிதத் தேவைகள் – பைபிள் இல்லை.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara) “வறுமையைப் போக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனித இனம் வெறுக்கத் தக்கது.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara) “வறுமைப் பற்றி ஒருவர் போதிப்பதை விட்டுவிட்டு அதை ஒழிக்க முற்பட வேண்டும்.” […]
லலிதா, அலுப்போடு கைப்பையை தூக்கி மேஜையில் போட்டு, “உஸ், அப்பாடா, என்ன வெயில்” எனச் சொன்னவாறு சேரில் அமர்ந்தாள். பக்கத்து இருக்கையிலிருந்து கல்பனா, “என்ன, போன வேலையெல்லாம் முடிச்சாச்சா?” எனக் கேட்டாள். “ம், பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டிட்டேன்! பர்மிஷன் நேரம் முடியறத்துக்குள்ள ஆஃபீஸ் வரணுமேன்னு ஆட்டோ பிடிச்சு ஓடி வந்தேன், யாராச்சும் என்னைத் தேடினாங்களா?” என வினவினாள். “ஆட்டோவில் எப்படி ஓடி வந்தே?” என்று கிண்டலடித்த கல்பனா, ‘மானேஜர் இன்னிக்கு ஒரு கல்யாணத்துக்கு போயிருக்கார், இன்னும் […]
அந்த அகன்ற மரத்து நிழலில் உட்கார்ந்தவாறு மாலை வெயில் மறைகின்ற அழகிய காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த செல்விக்குக் கண்களில் நீர் இலேசாகத் துளிர்த்தது. எல்லாவற்றையும் விட்டுச் செல்ல வேண்டும் என்ற ஏக்கம்; தன் குடும்பம் தன்னைக் கைவிட்ட கொடுமை; எங்கே போகப் போகிறோம் என்பது தெரியாத எதிர்கால இருள். பயம்; சோகம்! கொஞ்ச தூரத்தில்தான் அவளுடைய இடைநிலைப் பள்ளி இருந்தது. அங்கே இன்றைக்கு அவள் வகுப்புக்கு தமிழாசிரியர் ட்யூஷன் வகுப்பு நடத்துகிறார். அந்த சாக்கில்தான் செல்வி […]
அன்றைக்கும் கையில் பேப்பர்களோடு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார் சுப்ரமணியன்.எஸ்.டி.டி.பூத்தைத் தேடிக்கண்டுபிடித்துப் பேசிவிட்டு எரிச்சலோடு”இதே பொழப்பாப் போச்சு” எத்தன தடவ தான் போன் பண்றது, சலித்துக்கொண்டே வந்தவர் செருப்பைக்கழட்டிப்போட்டு விட்டு , வீட்டுக்குள் வந்ததும் “சிவகாமி” என மனைவியை அழைத்தவாறே அருகில் கிடந்த சேரில் அமர்ந்தார்.பின்னர் காலரைப் பின்னுக்குத்தள்ளிவிட்டு “ஸ்..அப்பாடா..என்னா வெய்யில்..” என்றவரை “ என்ன இன்னிக்காவது அந்தக் கூரியர்காரன் ஏதாவது சொன்னானா? “எனக்கேட்டவாறு தண்ணீர் டம்ப்ளருடன் வந்தவளிடம் “ கிழிச்சானுங்க, திரும்ப திரும்ப கிளிப்பிள்ள சொல்ற […]
பூமியிலிருந்து சுமார் 12500 அடி உயரத்தில் யாத்ரீகர்களுக்காக நவீன வசதிகளுடன் அமைக்கப் பட்டிருந்த சிற்றுண்டி சாலையில் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என்னுடன் என் மனைவியும் மகளும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்…… கேதார்நாத்தின் உச்சிக்கு வந்தடைய கௌரிகுண்ட் என்ற ஸ்தலத்திலிருந்து 14 கிலோ மீட்டர் குட்டைக் குதிரையின் மேல் ஆடி அல்லாடி இரண்டு மணி நேரம் சவாரி செய்தாக வேண்டியிருந் தது. அந்த அனுபவ அவஸ்தையில் உடம்பும் மனசும் ஒரு வித்யா […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “நமது கொடுமைகளில் கோரமானது, குற்றங்களில் கொடூரமானது மானிட ஏழ்மை. மற்ற தேவை ஒவ்வொன்றையும் நாம் தியாகம் செய்து, நமக்கு முதற் கடமையாக இருக்க வேண்டியது மனிதர் ஏழ்மையை இல்லாமல் நீக்குவதே.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara) கொடுமைகளுக்கு எல்லாம் ஆணிவேர் பணத் திமிரா ? ஏழ்மை நீக்கப்படாமல் பார்த்துக் கொண்டிருப்பதுதான் நிஜக் குற்றமா ? […]
“கண்டிப்பா வந்துடறேன்…எனக்கு நீ சொல்லணுமாடி.. ஒகே… வெச்சுடறேன்” “என்ன திவ்யா… யார் போன்ல?” என்றபடி அவளருகே வந்து அமர்ந்தான் அவள் கணவன் ஆனந்த் “என் பிரெண்ட் மஞ்சுதாம்பா பேசினா… அவ பொண்ணுக்கு முதல் பர்த்டே அடுத்த வாரம் வருதாம்… அதுக்கு பார்ட்டி ஏற்பாடு பண்ணி இருக்காளாம்… என்னையெல்லாம் இன்வைட் பண்ண வேண்டியதே இல்ல வந்துடறேன்னு சொல்லிட்டு இருந்தேன்” என உற்சாகமாய் பேசிய திவ்யாவை யோசனையாய் பார்த்தான் ஆனந்த் அவன் பார்வையை புரிந்து கொண்டவள் […]
புதியமாதவி, மும்பை. தேர்தல் முடிவுகள் வந்த நாள்.. மறக்க முடியாத நாளாக இருந்தது.முந்தின நாள்: இரவில் தூக்கம் வரவில்லை.வீனஸ் சேனலில் வேலைக்குச் சேர்ந்தப் பின் நண்பர்கள் வட்டம் அதிகமாகிப்போனதுஒருவகையில் எரிச்சலாகவே இருந்தது.எலெக்ஷன் ரிசல்ட் விடிந்தால் காலை 10 மணிக்கெல்லாம் தெரிந்துவிடப் போகிறது.இருந்தாலும் ஏன் தான் இந்த மாதிரி எல்லாம் கேள்விக் கேட்டு தொந்தரவு செய்கிறார்களோ தெரியவில்லை. அரசியல் கட்சியில் இருப்பவர்களும் தேர்தலில் போட்டி இடும் வேட்பாளர்களும்கேட்டால் ஏதொ அதற்கு காரணம் இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால்சொந்தக்காரர்கள் முதல் கல்லூரியில் […]
”அம்மா தர்மம்…..”- குளிர்ச்சியான மார்கழி மாதக்குளிரின் தாக்கத்தில் நடுங்கிய பிச்சைக்காரனின் குரல். குரலின் எதிரொலி போல்தான் இசக்கி அம்மாளின் வருகையும் இருந்தது. ஒரு பெரிய தட்டு நிறைய சோற்றைக்கொண்டு வந்தாள். அவனின் தட்டு நிறையக் குவித்தாள். தட்டு கொள்ளாது பாதி கீழே விழுந்தது. வேறொரு மரவையில் கொண்டுவந்த சுண்டைக்காய்த் தீயல் ‘அவர்களுக்குத் தென்னந்தோப்பு உண்டு’ எனச் சாட்சி கூறும் வகையில், அவள் மரவையை விட்டுச் சோற்றிற்குச் செல்லக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. தீயலில் எண்ணெய் ஏராளமாகத்தான் மிதந்தது. பார்த்ததுமே […]