இது மருமக்கள் சாம்ராஜ்யம்

This entry is part 14 of 42 in the series 22 மே 2011

”அம்மா தர்மம்…..”- குளிர்ச்சியான மார்கழி மாதக்குளிரின் தாக்கத்தில் நடுங்கிய பிச்சைக்காரனின் குரல். குரலின் எதிரொலி போல்தான் இசக்கி அம்மாளின் வருகையும் இருந்தது. ஒரு பெரிய தட்டு நிறைய சோற்றைக்கொண்டு வந்தாள். அவனின் தட்டு நிறையக் குவித்தாள். தட்டு கொள்ளாது பாதி கீழே விழுந்தது. வேறொரு மரவையில் கொண்டுவந்த சுண்டைக்காய்த் தீயல் ‘அவர்களுக்குத் தென்னந்தோப்பு உண்டு’ எனச் சாட்சி கூறும் வகையில், அவள் மரவையை விட்டுச் சோற்றிற்குச் செல்லக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. தீயலில் எண்ணெய் ஏராளமாகத்தான் மிதந்தது. பார்த்ததுமே […]

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11

This entry is part 2 of 48 in the series 15 மே 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா     “குமரிப் பெண்ணே ! நீ இந்தக் குழப்ப வீட்டைச் சேர்ந்தவள் இல்லை ! வெடிச் சத்தம் மீண்டும் கேட்குகிறது ! நாங்கள்தான் விளக்கைச் சுற்றித் தீயில் விழப் போகும் விட்டில்கள் ! வேறு வழியில்லை எமக்கு ! ஓடிப் போய் நீ குகைக்குள் ஒளிந்து கொள் !” ஜார்ஜ் பெர்னாட் ஷா (ஹெக்டர், நெஞ்சை முறிக்கும் […]

அன்புள்ள ஆசிரியருக்கு

This entry is part 1 of 48 in the series 15 மே 2011

  அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். எனக்கு உங்களைக் கண்டால் பொறாமையாக இருக்கிறது. ஆச்சரியமாகவும் இருக்கிறது. நானும், கடந்த ஒரு வருஷமாக, உங்கள் தமிழ் மாத இலக்கிய இதழைப் படித்து வருகிறேன். எந்த ஒரு செயலையும், உடனுக்குடன் பரிசீலித்து முடிவு கட்டுவது என்பது என் வழக்கத்துக்கு விரோதமானது. ‘கிவ் தெம் எ லாங் ரோப்’ என்பது எனக்கு மிகவும் பிடித்த வாசகம். எதற்காக இதையெல்லாம் கதைக்கிறான் என்று உங்களுக்குத் தோன்றலாம். பொறுங்கள், விஷயத்துக்கு வருகிறேன். முதலில் உங்கள் மீது […]