உஷாதீபன் இப்படி நடக்கும் என்று தேவராஜ் எதிர்பார்க்கவில்லை. நண்பர்களுக்கு உடனே இந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்று அவன் மனம் பரபரத்தது. சட்டுப் புட்டென்று ராகினிக்கு அவர்கள் வீட்டில் ஒரு கல்யாணத்தைப் பண்ணிவிடுவார்கள் என்றுதான் எதிர்பார்த்திருந்தான். ஆனால் கேள்விப்படுவதென்னவோ முற்றிலும் எதிர்பாராத ஒன்றாக இருக்கிறது. யாரை எப்பொழுது எப்படி மடக்குவாள் என்று யாராலுமே கூற முடியாது. மடக்குகிறாளா, மடங்குகிறார்களா தெரியவில்லைதான். இத்தனை நாள் இவளைப் பற்றியே நினைக்க வைத்துவிட்டாள். எந்த நேரமும் தன் நினைவில் இருந்திருக்கிறாள். படுக்கையில் […]
* எங்கே வந்திருக்கிறோம் என்று புரியவில்லை. இருட்டு மூடியிருந்தாலும் பகலா இரவா என்ற அடுத்த கேள்விக்கும் குயிலியிடம் பதில் இல்லை. ஒரு சௌகரியத்துக்காகக் கற்பித்துக்கொண்ட காலக் கணக்கு எங்கோ நின்று இயக்கம் நிலைத்து விட்டது. இறங்க வேண்டாம் காலப் படகு பழுது நோக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று சுவர் சற்று வெளிச்சத்தோடு அறிவித்து அதே தகவலை இயந்திரக் குரலில் சகஜமான குரலில் பரத்துகின்றது. இருட்டில் மருத்துவர் நீலர் ஏ பெண்களா என்னை விட்டுவிடுங்கள், நான் போகிறேன் என்று […]
. ஆ. மீனாட்சி சுந்தரமூர்த்தி. . கோடை வெயில் தகிக்கும் மாதமிது. பள்ளிகளுக்கு விடுமுறை ,பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம். பணி காரணமாக அயலூரில் இருப்பவர்கள் பெற்றவர்களோடு , உற்றவர்களோடு இருக்க சொந்த ஊருக்கு வருவார்கள். அப்படிதான் வேணியும் லக்னோவிலிருந்து ஊருக்கு […]
ஸிந்துஜா காசி ஐயாவின் வீட்டை அடைந்த போது மணி எட்டாகி விட்டது. அவரைப் பார்த்து, வந்த காரியம் பங்கமெதுவுமில்லாமல் நடந்து விட்டால், வீட்டுக்குப் போய் அம்மாவைப் பார்த்து விட்டு கிரவுண்டுக்கு ஓட வேண்டும். ஒன்பது மணிக்குள் அங்கு நிற்காவிட்டால் அவன் இடத்தைக் கபளீகரம் செய்யக் காத்திருக்கும் முத்துசாமியை கேப்டன் எடுத்துக் கொண்டு விடுவான். மறுபடியும் சான்ஸ் கிடைக்க கேப்டனின் காலில் எவ்வளவு தடவை விழ வேண்டும் என்று அந்தக் கேப்டனுக்கே தெரியாது.அவன் ஆல்ரவுண்டராக நன்றாக விளையாடுவதால் கேப்டனாகி விட்டான். காசிக்கு ரொம்ப […]
ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி 2 பாகம் -1 [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய ராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது] மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது] காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது] ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் [வயது 25] சிசாரோ : மோனிகாவின் தந்தை. வெனிஸ் செனட்டர் [60 வயது] எமிலியோ : புருனோவின் மனைவி. மாண்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர். பயாங்கா : காஸ்ஸியோவின் கள்ளக் காதலி. மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ், சாம்ராஜ்ய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள். நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு இடம் : சைப்பிரஸ் தீவில் ஒரு துறைமுகக் கரை ஓரம் ஒரு தெரு நேரம் : பகல் வேளை பங்கெடுப்போர் : சைப்பிரஸ் கவர்னர், மாண்டேனோ, மற்றும் இரண்டு படைவீர்கள்,காஸ்ஸியோ, மோனிகா, தோழியர், எமிலியோ, புருனோ, ஷைலக். [தளபதி ஒத்தல்லோ காவல் படை சூழ தூரத்தில் வருகிறான்.] [கூட வந்த அறிவிப்பாளன் பியூகிள் ஊதிக் கூறுகிறான்] அறிவிப்பாளி; சைப்பிரஸ் பொது மக்களே ! துருக்கிப் படகுகள் அனைத்தும் புயலில் முறிந்தன. தப்பிய சில படகுகள் திருப்பிப் பாராமல் சென்றன. இந்த வெற்றியை நாம் ஆடிப்பாடி, மதுபானம் குடித்துக் கொண்டாடுவோம். அத்துடன் தளபதி ஒத்தல்லோ திருமண […]
வழுக்குப் பாறைக் குகைகள் முன்னே இந்தப் பெண்கள் நின்றபோது மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது. வெள்ளமெனப் பெருகிய மழைநீர் குகையின் வாயிலில் பெரிய பாறையை உருட்டிப் போய் அடைத்திருந்தது. குகைத் தொகுப்பில் மழை நீர் புகுந்து தேங்கி நிற்பது போல சுற்று வட்டார கிராமங்களுக்கு தொல்லை உண்டு பண்ணும் சங்கதி வேறேதுமிலலை. நீர்க் கசிவில் இழைந்து வரும் விஷப் பிராணிகள் வீடுகளுக்குள் புகுந்து கடித்தும் கொடுக்கு கொண்டு கொட்டியும் துன்பம் தரும். தேள்களை இழிந்த விஷப் […]
கோமான் ஷைலக் & வில்லன் புருனோ ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி 1 பாகம் -6 [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய ராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது] மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது] காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது] ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் [வயது 25] சிசாரோ : மோனிகாவின் தந்தை. வெனிஸ் செனட்டர் [60 வயது] எமிலியோ : புருனோவின் மனைவி. மாண்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர். பயாங்கா : காஸ்ஸியோவின் கள்ளக் காதலி. மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ், சாம்ராஜ்ய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள். நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு இடம் : சைப்பிரஸ் தீவில் ஒரு துறைமுகக் கரை ஓரம் நேரம் : பகல் வேளை பங்கெடுப்போர் : சைப்பிரஸ் கவர்னர், மாண்டேனோ, மற்றும் இரண்டு படைவீர்கள்,காஸ்ஸியோ, மோனிகா, தோழியர், எமிலியோ, புருனோ, ஷைலக். [ஒத்தல்லோ காவல் படை சூழ தூரத்தில் வருகிறான்.] புருனோ: [ஷைலக்கை நோக்கி] மக்கள் சொல்வார். காதல் நோயில் வெந்து போனவன் பிறகு செம்மை […]
ஸிந்துஜா கமர்ஷியல் ஸ்ட்ரீட்டில் பகத்ராமிலிருந்து இனிப்பும் காரமுமாக இரண்டு பைகளை வாங்கிக் கொண்டு தெருவில் கால் வைத்த போது ‘ஏய் குரு, நீ எங்கே இந்தப் பக்கம்?” என்ற குரலைக் கேட்டு அருண் திரும்பிப்பார்த்தான். நரசிம். அவன் கையிலும் இரண்டு பைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அருண் பதிலளிப்பதற்கு முன்பே நரசிம் “எங்கே நீ இவ்வளவு தூரம்?” என்று கேட்டான். “நகைக்காரத் தெருவிலே அம்மாவோட வேலை கொஞ்சம் இருந்தது. அவள் அலைய வாண்டாமேன்னு நா வந்தேன். சரி இவ்வளவு தூரம் வந்தது வந்தோம், பகத்ராம்லே அம்மாக்குப் […]
ஏமப் பெருந்துயில் மையத்தில் மொத்தம் எட்டு பேழைகள் மின்சாரக் குளிரை உயிர்த் தேனாகக் கொண்டு கிட்டத்தட்ட இறப்பு நீக்கி உறைந்து கிடந்தன. எட்டில் ஒன்று மட்டும் பாதி தேளுடல் கொண்ட மாற்றுடல் பெண். இடுப்புக்கு மேல் மனுஷி உடல் வனப்பாக மலர்ந்திருந்தது. கீழே சிவப்பு உக்ரமாக உயிர் பறிக்கும் செந்தேளுடலோடு கால்கள் சிறு மயிர் பூத்து மூடித் தளர்ந்து கிடந்தன. கண்ணாடியும் தேறலியமுமாக*** நீண்டிருந்த பெட்டிக்குள் தேள்ப்பெண் உடலின் உறுப்புகள் ஓய்வெடுத்தபடி அவசியமான அளவு மட்டும் இயங்கின. […]
ஸிந்துஜா ஹால் ஒரே களேபரமாக இருந்தது. அப்படி ஒரு பேச்சும், சிரிப்புமாகச்சத்தம். இன்று காலைதான் சேது துபாயிலிருந்து வந்தான். வரும் போதேஇந்த இரைச்சலையும் கூட்டிக் கொண்டு வந்து விட்டான். அவன் யானையாகவும் வீடு வெங்கலக்கடையுமாகவும் மாறி விட்ட தருணம் என்று கௌசி நினைத்தாள். ஹால் பக்கம் போக விடாமல் அவளைச்சமையல் உள் கட்டிப் போட்டிருந்தது. சேதுவைப் பார்க்க வந்திருந்த கௌசியின் சொந்தக்காரர்கள், அவள் கணவன் சாயிராமின் உறவு ஜனம் என்கிற கும்பலுக்குக் காப்பி டிபன் கடை முடிந்தது. […]