தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கதைகள்

கதைகள்

மெஹரூன்

ஏ.நஸ்புள்ளாஹ் ​அந்த ஊரின் வடக்கு முனையில், மர்யம் மலைத்தொடரின் பனிக்குளிர் காற்று தொட்டுச் செல்லும் ஒரு பழைமையான வீட்டில் பாபா ஜான் ஹுசைன் தாத்தா  ஹுசைன் தனது மர நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரது எழுபது…

நேசம்

அநாமிகா கோவிட் சமயத்தில் வேலை போய்விட்டது. கொரோனவே எதிர்பாராத பேரதிர்ச்சி யாயிருந்தது. அதில் இது வேறு. கையில் ஏதோ தொகை கொடுத்தார்கள். அதை வைத்துக்கொண்டு சில மாதங்களை ஓட்ட முடிந்தது. வங்கி சேமிப்பு என்று…

வெறிச்சாலை அல்லது பாலைவனம்

ஏ.நஸ்புள்ளாஹ் அவர் கண்களைத் திறந்தபோது, எங்கும் மணல் மட்டுமே. எந்த மரமும் இல்லை எந்த சத்தமும் இல்லை காற்று வீசினாலும், அது கூட ஒரு இறந்த இசையைப் போல இருந்தது. “நான் எங்கே வந்துவிட்டேன்?”…

 அன்றொருநாள்…..

  அநாமிகா சில புகைப்படங்களைப் பார்க்கும்போது ஏற்படும் பரிதவிப்பு தாங்கமுடியாதது. ஒரு சிறு குழந்தை அம்மணமாக ஓடிவரும் அந்த போரின் அவலத்தைக் காட்டும் படம். நல்லவேளை அப்போதெல்லாம் காணொளிகள் இந்த அளவுக்குக் கிடையாது. ஆனாலும்…

கடற்கரை

ஏ.நஸ்புள்ளாஹ் இரவு கடலின் அலைகள் சத்தமாக வந்துவிட்டுப் போய்க் கொண்டே இருந்தன. அந்தக் கரையின் அருகே அவர் நின்றார். மணலில் காலடிகள் விழுந்தவுடனே அவை மறைந்து போகின்றன. ஆனால் அவர் மீண்டும் திரும்பிப் பார்த்தபோது,…

பெரியப்பாவின் நாட்குறிப்பேடுகள்

_ அநாமிகா இரண்டு பழைய சூட்கேஸுகள் நிறைய இருந்தன பெரியப்பாவின் நாட்குறிப்பேடுகள்.  கணவன் - மனைவிக்கிடையே இடம்பெறும் சாதாரண பேச்சுவழக்கிலான உரையாட லாய் விரியும் விளம்பரம் திடீரென “நல்ல நறுமணம் இல்லே!” என்று அந்த…

பாச்சான் பலி 

ஆர் சீனிவாசன்  வாழ்நாள் முழுவதும் இறையைத் தேடி கடைசியில் காலத்திற்கே இரையாகிறோம். ஆழியின் இருளில், காற்றில்லா வெறுமையில், வெய்யோனின் கதிர் நுழையா காடுகளில், மனதின் ஆழத்தில், தொன்மங்களின் மாயங்களில் , கருப்பு - வெளுப்பு…

சந்திரமுக சகமனுஷி

1 _ அநாமிகா  நீண்ட நேரமாக அந்த நடைவழி சுவர் ஒரமாகவே நின்றுகொண்டிருந்தாள். பெண் என்றும் சொல்லமுடியாத பெண்மணி என்றும் சொல்ல முடியாத 30 வயதின் விளிம்பைத் தொட்டிருப்பவளாகத்தோன்றியது, கதையில், கவிதையில் ,நிலா முகம், என்று வாசிக்கநேரும்போதெல்லாம் மனதில்அறிவுபூர்வ, தர்க்கபூர்வ சிரிப்பாய் ஒன்று தோன்றும். அதெப்படி அத்தனை திருத்தமான வட்டமாய் ஒருமுகம் இருக்க முடியும்? அதுவும், நிலவின் ’இரண்டறக் கலந்த’ அம்சமான கறையும் இருக்க வேண்டுமே- அதுவும் அழகா என்ன....’  அறிவு என்பது எல்லாவற்றின் சகலவிதமான சாத்தியப்பாடுகளுக்கும் தன்னை திறந்துவைத்திருப்பது.இறுக மூடிக்கொண்ட நிலையில் ’இதுதான், இது மட்டும்தான் இங்கே சாத்தியம்; சாத்தியமாகும்;சாத்தியமாக வேண்டும்’ என்று மண்டையின் உள்ளெங்கும் கனமேறி அதன் விளைவாய் இறுதியில்கவிழ்ந்தே யாகவேண்டிருப்பதா அறிவு.... ”ஒரு சேர், இல்ல, ஸ்டுல் தரவா உட்காந்துக்க?” சட்டென்று முகத்தில் நெகிழ்வு ததும்ப என்னை நோக்கித் திரும்பி புன்சிரித்தாள். நிலவின் கறை போல்இடது கன்னத்தில் தேமல் படலம் இருந்தது போல் தோன்றியது. நடைவழியின் இந்த முனையில்இருந்த எங்கள் வீட்டில் இருந்து அந்த முனைக்கு அருகில் இருந்த அவளை பாதி நிஜ உருவாகவும்பாதி நிழல் உருவாகவும்தான் காண முடிந்தது அவள் புன்சிரித்தபோது வரிசைப்பற்கள் ஜொலித்தன. A THING OF BEAUTY IS A JOY FOR EVER’ என்ற வரி இருந்தாற் போலிருந்து ஞாபகம் வந்தது.  ”பரவாயில்ல, வேண்டாம்மா”  ”ரொம்ப நேரமா நிக்கிறீங்களே....”  ”பரவாயில்லீங்கம்மா”, என்று மீண்டும் அதே புன்சிரிப்போடு கனிவாய் மறுத்து மறுபுறம் திரும்பி,கால்மாற்றி நின்றுகொண்டாள்.  அந்தப் பக்கமாக வந்து செக்யூரிட்டி சிவநாதன் மெல்லிய குரலில் என்னிடம் கூறினார்: “வேலையிலிருக்கையில சித்தாள் உட்காரக்கூடாதுமா - மேஸ்திரி கோவிச்சுக்கவாரு”  ’அதற்காக எத்தனை நேரம் இப்படி கையில் சிமெண்ட் சட்டியோடு கால் கடுக்கநின்றுகொண்டிருப்பது மாதவிலக்கு நாட்களிலுமா...? அந்தி சாய்ந்து வீடு திரும்பிய பின்கணவருக்கும், குழந்தைகளுக்கும், குடும்பத்தைச் சேர்ந்த வேறு உறுப்பினர்கள் இருப்பின்அவர்களுக்குமாக சுடச்சுட சமைத்துப்போட்டு.... இரவில் கணவன் தினமும் உடலுறவுக்குக்கட்டாயப்படுத்துவானோ.... சே,…

எங்கிருக்கிறேன்?

Dr V G மாலதி மயக்கமா, தூக்கமா, மிதப்பது போல லேசா லேசா என்னை உயர்த்தி கொண்டே போகும் இந்த காற்று கடைசியில் எங்கு கொண்டு செல்லும்? நான் எந்த இடத்துக்கு போக விழைகிறேன் உச்சிப்பிள்ளையார் கோயில் நடையா?…

நடக்காததன் மெய்

ரவி அல்லது பேசும் தூரத்தில் நடப்பவர்களின் முகம் அறிய முடியாத அளவிற்கு பனி கொட்டிக்கொண்டிருந்தது. வழக்கமாக நடைப்பயிற்சிக்கு வருகிறவர்களில் சிலரைக் காணவில்லை. பலர் தலையில் தொப்பியும் முகத்தில் கவசமும் அணிந்திருந்தனர். இரயில் நிலையத்தில் நெல்…