வெளியே வானம்

மற்றுமொரு இரவு உறக்கத்தை வரவழைக்க முஸ்தீபுகளில் ஈடுபட வேண்டியுள்ளது மது புட்டிகளின் சியர்ஸ் சத்தங்களைத் தவிர இரவு அமைதியாக இருந்தது அன்று பகலில் சந்தித்தவர்களில் சில நபர்களின் முகங்களே ஞாபகத்தில் இருந்தது படுக்கையை பகிர்ந்து கொள்ள பணத்தை நீட்ட வேண்டியுள்ளது எதையாவது…

அதீதம்

அதிகாலையிலேயே மழை ஆரம்பித்துவிட்டது காலையில் செய்வதற்கு ஒன்றுமில்லை சாப்பிடுவதைத் தவிர விடுவிடுவென ஓடிப்போய் கதவைத் திறந்தேன் நினைத்தது போல் நடந்துவிட்டது நாளிதழ் மழைநீரில் தொப்பலாக நனைந்துவிட்டது புத்தக அலமாரியைத் திறந்தால் சுவரெல்லாம் ஓதம்காத்துப் போய் புத்தகத்தின் அட்டை நமுத்துப் போயிருந்தது கதவெல்லாம்…

முன்னறிவிப்பு

  இரைச்சலில்லை வருடிச் செல்லும் காற்று மண்ணைத் தின்னும் புழுவாக காலநதியில் கால் நனைத்துக் கொண்டிருந்தது மனம் நேற்றைக்கும் இன்றைக்கும் வித்தியாசம் இருப்பதால் தான் வாழ முடிகிறது இரைக்கு ஆசைப்பட்ட மீன் உலையில் கொதிப்பது போல இன்பத்துக்கு ஏங்கும் உள்ளத்தால் மீண்டும்…

ஆதி

எதேச்சையாக எதிர்ப்பட்டவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன் எங்கெனத் தெரியவில்லை அவரும் கடந்து சென்றுவிட்டார் இனி ஞாபகம் வந்தும் பயனில்லை காற்று அதன் போக்கில் போகிறது மனதை அதைப் போல் கட்டவிழ்த்து விடமுடியுமா இந்த மழை வேறு நேரங்கெட்ட நேரத்திற்கு வந்து தொலைக்கிறது குடையை…

கூடு

வெயில் சற்றே தணியத் தொடங்கியிருந்தது. வானம் மேகக் கூட்டங்கள் இல்லாமல் நீலவண்ணமாக இருந்தது. பள்ளிக் குழந்தைகள் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். தேநீர் கடையில் கூட்டம் மொய்க்கத் தொடங்கியிருந்தது.கலையரசன் பேருந்து நிறுத்தத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். திருவாரூர் செல்லும் பேருந்து வந்தது.அவ்வளவு…

குரூரம்

எப்படிச் சொல்வது இழிவான காரியத்திற்குச் சாட்சியாக நான் இருந்துவிட்டேனென்று கோழைத்தனத்தால் கைகட்டி நின்றுவிட்டேனென்று அச்சத்தால் உடல் வெலவெலத்து வேர்த்துவிட்டதென்று அடிமை போல் காலணிகளை துடைத்தேனென்று மனசாட்சிக்கு விரோதமாய் நடந்து கொண்டேனென்று பணம் என் கண்களை மறைத்துவிட்டதென்று அபலையின் கதறலை கேட்டதாக காட்டிக்கொள்ளாமல்…

சிறகின்றி பற

கனவுகளே காயம்பட்ட நெஞ்சத்தை வருடிக் கொடுக்கும் மயிற் பீலிகளே வேஷத்துக்கு சில நாழிகை நேரம் விடுதலை கொடுக்க வைக்கும் வடிகால்களே செலவின்றி தேவலோகத்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் இன்பத் தேன் ஊற்றுகளே இறக்கையின்றி பறக்க கற்றுக் கொடுக்கும் உனது மாயாஜால தந்திரங்களே…

வாசல்

எப்படியாவது தன் மகன் இஞ்சினியரிங் பட்டம் வாங்க வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்தார் சுப்பையன்.ஆனால் அவரது மகன் சுந்தரோ வேறு மார்க்கத்தை பின்பற்றப்போவதை மனதில் வைத்துக் கொண்டு படிப்பை தொடர மாட்டேன் என பிடிவாதமாக இருந்தான்.+2 முடித்துவிட்டு பையனை வீட்டில் வைச்சிருந்தா ஏன்,…

உபாதை

  ஒலிபெருக்கியில் ஒப்பாரி சத்தம் உறக்கத்தைத் துரத்தியது நேரத்தைக் கூட்டியது தாகமெடுத்தது அருகில் சென்ற போதுதான் தெரிந்தது கானல் நீரென்று கதவு திறந்திருந்தது உள்ளே எட்டிப் பார்த்தேன் ஈர விறகால் அடுப்பு புகைந்தது வானத்தின் உச்சியில் பறக்கும் கழுகின் நிழல் பூமியில்…

ப மதியழகன் கவிதைகள்

மோட்ச தேவதை   கிணற்று நீரில் விழுந்த தனது பிம்பத்தை எட்டிப் பார்த்தது குழந்தை வானவில்லை விட அம்மாவின் சேலை வண்ணம் மிகவும் பிடித்திருந்தது அதற்கு தன்னுடன் சோற்றுக் கவளத்துக்கு போட்டியிடும் நிலாவுக்கு காய் விட்டது குழந்தை லாலிபாப் வாங்கிக் கொடுத்தால்…