நதிகளில் நீந்தும் நகரங்கள்:-

தொங்கும் தோட்டங்கள்., மிதக்கும் உல்லாசக் கப்பல்கள்., நதிகளில் நீந்தும் நகரங்கள் இவற்றில் சேகரமாகிறது ஆசை. புகைப்படங்களில்., திரைப்படங்களில் தங்கநிறத்தில் தகதகக்கும் கப்பல்களும். பசிய., கனிய தோட்டங்களும் தண்ணீர்த்தீயில் ஜொலிக்கும் நகரங்களையும் காண சேர்கிறது விழைவு, வேண்டுதல் முடிச்சைப் போல எடுத்துவைக்கும் பணம்…

பிறந்தநாள் பொம்மைகள்..:-

பிறந்தநாள் குழந்தைக்கு அணிவகுத்து வருகின்றன கரடி பொம்மைகள்.. கலர் சாக்குகளில் பொட்டலமாய் முடியிட்ட முடிச்சைப் பிடித்து கைபோன திசையெல்லாம் அசைக்கிறது குழந்தை. பிய்த்து உதிரும் பெயர் போக மிச்சமாய் இருக்கும் பொம்மைகளில் தொற்றி இருக்கும் அட்டையின் சில பெயர்கள் குழந்தையின் அம்மாவின்…

சுவீகாரம்

இரட்டைப்புள்ளிக் கோலங்களாய் ஆரம்பிக்கிறது., ஒரு அம்மா அப்பாவின் வாழ்க்கை. குழந்தைப் புள்ளிகளைப் பெருக்கிக் கொண்டே போகிறார்கள் ஊரளவு. பேரக்குழந்தைகளும் கொள்ளுப் பேரக்குழந்தைகளுமாய் புள்ளிகள் விரிகின்றன. எள்ளுப் பேரன்களின் வீரியக் குறைச்சலால்., எள் தெளித்தபடி வர.. சோற்றைத் தேடும் காக்கைகளாகின்றனர் முன்னோர்கள். அள்ளிச்சிதறிய…

நீரிலிருந்து உப்புத்திரவமான பயணத்தில்..:-

நீராய் ஏறுகிறீர்கள் ஒருவருக்குள். மனதில் அவர் அருந்தியதும் நிரம்பிய ரத்தச் சகதியில் அழுந்தத் தயாராகுங்கள். ஆரிக்கிள் வெண்ட்ரிக்கிள் தடவி ஆர்வத்துடன் ஓடத்துவங்குகிறீர்கள். உங்கள் உரையாடல் ஆக்சிஜனைப் போல நிரம்புகிறது. ஓட ஓட அழுக்கடைகிறீர்கள். உணவுச் சத்துக் கொடுத்து உப்புச் சக்கையைப் பிரித்து…

அவரைக்கொடிகள் இலவமாய்

இறுக்கங்களுடன் பயணித்து வந்தேன். எப்படி இறுக்கம் தூர்ப்பதென அறியாமல். வினைகளை அற்று வீழ விரும்பினேன். வகிர்ந்து வகிர்ந்து வார்த்தைகளைத் தூவினாய். அதைப்பிடித்துக் கொடியாக வளர்ந்தேன். அவரை கொடிபிடித்து மேகம் துளைத்துப் பாதை அமைத்ததாய் இன்னொரு உலகம் இழுத்துச் சென்றாய் வானவில்லைப் பற்றி…

வாய்ப்பு:-

என்னுடைய வாய்ப்பு அவளுக்கு வழங்கப்பட்டது நானே காரணமாயிருந்தேன் அதன் ஒவ்வொரு அசைவுக்கும். அவளை சிலாகித்தேன் அவளின் ஏக்கங்களை விவரித்தபடி. காற்றில் கண்டம் விட்டுக் கண்டம் செல்லும் புரவிப்பெண்ணாக அவள் உணரும் தருணங்களை.. ரேகைகளும் பாகைகளும் தொடாத அவளது ஆழிப்பேரலையான அனுபவத்தை விவரித்தபடி.…

கவிதைகள். தேனம்மைலெக்ஷ்மணன்

ஓடுகளாய்.  ஒரு சந்திப்புக்குப் பின்னான நம்பிக்கைகள் பொய்க்காதிருந்திருக்கலாம். தூசு தட்டித் தேடி எடுக்கப்பட்ட கோப்புகளில் இருந்து பெய்யும் எண்ணத் தூறல்களில் நனையாது இருந்து இருக்கலாம். எங்கோ அகதியாய் விட்டு வந்த நிலக்கோப்புகளை பராமரித்துப் பொடியாய் அடுக்காதிருந்திருக்கலாம். பழையனவற்றில் நனைவதும், மூழ்குவதும் தவிர்க்கயியலா…

என் கைரேகை படிந்த கல். தகிதா பதிப்பகத்தின் மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு

தகிதா பதிப்பகத்தின் மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு இது. யாழி என்ற கிரிதரனின் எழுத்துக்களைப் படித்து வியப்படைந்து போனேன். மிகச் சில வரிகளில் பெரும் அர்த்தங்கள் செறிந்து மிக அருமையாய் இருந்தது. நல்ல நூல்களை அடையாள படுத்திய தகிதாவுக்கும் நன்றிகள். விலை ரூபாய்…

ராணி., பெண்ணாதிக்கம் இரு கவிதைகள்.

ராணி.. ************************** சேணம் பிடித்து பாயும் குதிரையின் பிடறி சிலிர்க்க தோல் பட்டியில் கால் மாட்டி எவ்வுகிறேன்.., முன்பின்னாக ஆடும் மரபொம்மைக் குதிரையில் கூட இல்லை.. திருவிழா ., தேரோட்டம்., புரவி எடுப்பு.. அணிவகுப்பு முடித்து அமைதியாய் உறைந்து அசைவு மறந்த…

என்னைச் சுற்றிப் பெண்கள்: நூல் அறிமுகம்

ஆண்கள் சார்ந்த உலகில் ஒரு பெண் பிரதமரும்., முதல்வரும் எவ்வளவு பிரச்சனைகளை., எள்ளல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு சம உரிமை என்று பேசினாலும் கூட நம் இந்தியக் குடும்ப உறவு முறைகளில் வெளிப்படாத சிக்கல்கள் ஏராளம். தன் வாழ்வில் எதிர்நீச்சல்கள் போட்டு…