பிம்பத்தின் மீதான ரசனை.:-

இணைந்திருந்த போதும் ஒரு தனிமையின் துயரத்தைத் தருவதாய் இருந்தது அது. புன்னகை முகம் காட்டி ஒரு பெண் திரும்பிச் செல்லும்போது அவள் பின் உடலை ரசிக்கத் துவங்குகிறாய். எதிர்பாராமல் லௌட் ஸ்பீக்கரில் அலறும் பாடலைப் போல நாராசமாயிருக்கிறது அது. இல்லாத பியானோவின்…

ஆன்மாவின் உடைகள்..:_

வெள்ளுடை தேவதைகளையும் செவ்வுடை சாமிகளையும் மஞ்சளுடை மாட்சிமைகளையும் பச்சை உடை பகைமைகளையும் படிமங்களாய்ப் புதைத்தவற்றை வர்ணாசிர தர்மமாய் வெளியேற்றும் ப்ரயத்னத்தில்.. ப்ரக்ஞையோடு போராடித் தோற்கிறேன்.. விளையாட்டையும் வினையாக்கி வெடி வெடித்துத் தீர்க்கிறேன்.. எப்போது உணர்வேன் வண்ணங்களை.., அழுக்கேறாத ஆன்மாவின் உடைகளாய்..

மேலதிகாரிகள்

உறங்கத் தாமதமாகும் ஒவ்வொரு இரவும் சுமந்து வருகிறது உழைப்பின் களைப்பை அலுவலகம் உறிஞ்சிச் சுவைத்த நேரத்தை பார்களில் அமர்ந்து பீராக உறிஞ்சியபடி அதிக வேலை பற்றியும் அதிகப்படியாயோ குறைந்தோ கிடைத்த போனஸ் பற்றியும் கடுகடுத்த மேலதிகாரியை கிண்டலடித்தபடியும் சக ஊழியனை ஜால்ராக்காரனாகவும்…

முதுகில் பதிந்த முகம்

பால்கனியில் தொற்றியபடி கண்மறையும் வரை கையாட்டி உள்வந்து படுக்கை விரிப்புகளை உதறிச் செருகும்கணம் இரவு ஊடலில் திரும்பிப் படுக்க முதுகில் பதிந்த முகம் மீசையொடு குறுகுறுக்க வண்டியில் செல்லும் உன் முதுகில் என் மூக்குத்தியின் கீறல் சற்றே காந்தலோடு.

5 குறுங்கவிதைகள்

ஒளியூட்டப் போகிறோமா எரியூட்டப் போகிறோமா என அறிவதில்லை பற்றவைக்கப்படும் தீக்குச்சிகள்.. ************************************************** புழுவைப் போல உள்நுழைந்து பத்து மாத உறக்கம்.. கொடி வழி உணவு கூட்டுக்குள்... இறக்கைகளைப் போல கை கால்கள் முளைத்ததும் உந்திப் பறந்தது  கூடை விட்டு .. குழந்தையாய்..…

ஒன்றுமறியாத பூனைக்குட்டி..:-

ஷாப்பிங் மால்களில் முயல்குட்டிகளும் பூனைக்குட்டிகளும் கடந்த போது அவன் கண்கள் அவைபோல் துள்ளின. கூட வரும் மனைவி பார்க்கும்போது கீழ்விடுவதும் பின் ஏந்திக்கொள்வதுமாக நீண்டன அவன் கண்கள் குறுகலான கடையில் இருந்த காலண்டர் சாமியின் ஆயுதம் அவனை மிரட்டியது . கண்களை…

அலையும் வெய்யில்:-

பார்க் பெஞ்சுகளில் சூடு ஏறி அமர்ந்திருந்தது. மரங்கள் அயர்ந்து அசைவற்று நின்றிருந்தன. ஒற்றைப்படையாய்ப் பூக்கள் பூத்திருந்தன. கொரியன் புல் துண்டுகள் பதிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. டெரகோட்டா குதிரை சாயம் தெறிக்கப் பாய்ந்தது. இலக்கற்ற பட்டாம்பூச்சி செடிசெடியாய்ப் பறந்தது. குழாய்களில் வழிந்த நீரை சூரியன்…

சௌந்தர்யப்பகை

குத்தீட்டி கண்களில் சுமந்தலைந்து நாகம் யார் விழியில் விஷம் பாய்ச்சலாமென. தன்னினத்தில் ஒன்றுடன் பார்க்கக்கூடப் பிடிக்காமல் முன்ஜென்மப் பகையாகிறது சம்பந்தமற்ற சச்சரவுகளில்.. லாவா உக்கிரத்துடன் வார்த்தைக் கண்ணிகளை அங்கங்கே புதைத்து மாட்டும் கால்களுக்காக காத்து பயணப்பாதைகள் பழக்கமற்று தாறுமாறாய்த் துள்ளியோடும் குறுமுயல்கள்…

ரகசிய சுனாமி

என்னுள்ளே உறைந்து என்னுடன் இறந்துவிடும் ரகசியங்கள் பனிக்கட்டிகளாய்.. பென்குவின்கள் வழுக்கும் பாறையில் விளையாடி மீன் பிடித்துண்ணும்.. சங்குகளுக்குள்ளும் சிப்பிகளுக்குள்ளும் நுழைந்து மென்தசைகள் சுவைத்து ஆக்டோபஸ்களும் ஜெல்லி மீன்களும் இறுகப்பிடித்துறிஞ்ச கடலோடியாய் அலைகளுள் புணர்ச்சிக்குப் பின்னான தளர்ந்த அயர்ச்சியில் கரையோர நண்டுகள் மண்கிளறி…

சொர்க்கவாசி

கனவுகள் மேலிமைக்குள்ளிருந்து கீழிமைவழி கசிந்தன. புத்தக வாசத்தோடே பலகனவுகளும். அச்சிலிடப்பட்ட சிறுபத்ரிக்கையும் ஆளையடித்துத் திரிசங்காக்குகிறது இன்னும் பேர்காணும் பேரின்பம் வேண்டி. பெரிய விதையாயிருந்தும் கிளைப்பது சின்னச்செடி தலை சுற்றிப் பார்க்கிறது சிறு விதை விருட்சங்களை. வீரியம் அடக்கின செடிகளுக்கு வெடித்தபின் வாய்க்கிறது…