author

நினைவுகளின் சுவட்டில் – 88

This entry is part 12 of 41 in the series 10 ஜூன் 2012

வங்காளிகளுக்கு மிகவும் பிடித்தது ஹில்ஸா மாச் அது புர்லாவில் கிடைப்பதில்லை. அதை யாராவது கல்கத்தாவிலிருந்து வந்தால் வாங்கி வருவார்கள். அப்படி அபூர்வமாக வருவதை புர்லாவிலிருக்கும் மற்ற வங்காளிகளுடன் யாரும் பகிர்ந்து கொள்வார்களா என்ன? மிருணால் சொன்னான்,.’ என் தங்கை வரவிருக்கிறாள். அப்போது அவளிடம் கட்டாயம் ஹில்ஸா மாச் வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அப்போ உன்னைக் கூப்பிடுவேன். கட்டாயம் வரணும்,” என்று சொல்லியிருக்கிறான். முதலில் நான் மீன் சாப்பிட ஆரம்பித்து, பின் எல்லா மீன் வகைகளையும் ருசித்து அவற்றின் […]

திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்

This entry is part 10 of 33 in the series 27 மே 2012

நூறாண்டு விழா கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார் இன்றைய திராவிட இயக்க கட்சிகளில் ஒன்றின் தலைவர். இககட்சிகளில் பிரதானமானதும், திராவிட என்ற பெயருக்கு உரிமை கோரும்  கட்சிகளில்  மூத்ததுக்கு , முக்கிய  வாரிசாக தன்னைக் காண்பவரும், தமிழ் நாடும் அவ்வாறே அங்கீகரிக்கும் அதிர்ஷ்டம் பெற்றவரும் அவர் தான். இப்படியெல்லாம் சொல்வதற்குக் காரணம் அவரது சிந்தனைகளோ செயல்களோ இவற்றோடு உறவு கொள்ளாதவை. சொல்லப் போனால், திராவிட என்னும் அடை மொழிதான் தொடர்ந்து வருகின்றதே அல்லாது, தொடக்கம் முதலே இதன் வரலாற்றில் […]

நினைவுகளின் சுவட்டில் – (87)

This entry is part 3 of 45 in the series 26 பிப்ரவரி 2012

இல்லஸ்ட்ரேட்டட் வீகலி ஆஃப் இந்தியா எனக்குப் பரிச்சயம் ஆகி நான் படிக்கத் தொடங்கியபோது சி.ஆர்.மண்டி என்பவர் அதன் ஆசிரியராக இருந்தார். பொதுவான அரசியல் சமூகம் பற்றிய கட்டுரைகளும் அது சம்பந்தமான படங்கள் நிறைந்தும் அதில் இருந்தன. அது போக, இந்தியாவில் அப்போது தெரியவந்த ஓவியர்களின் ஓவியங்களூம் அவ்வப்போது முழுப்பக்க அளவில் அதில் வந்தன. அது மாத்திரமல்ல.இன்னம் இரண்டு விஷயங்கள் வீக்லியை ஒரு பகுதி மக்களின் அபிமான பத்திரிகையாகவும் ஆக்கின. ஒன்று அதில் அந்தக் காலத்து ஆனந்த விகடனில் […]

அ. முத்துலிங்கம் – ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல்

This entry is part 2 of 45 in the series 26 பிப்ரவரி 2012

ஈழத் தமிழ்க்குரல் என்றுமே ஒரு வேதனையும் போராட்டமும் கொந்தளிக்கும் குரல் தான். என்றுமே. அதுவும் உரத்த குரலாகத் தான் இருந்து வந்துள்ளது. அப்படித்தான் இருப்பதும் சாத்தியம். அது வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து வெளிக்கிளர்வது. வேறு எப்படியாகவும் அது இருக்க முடியாது. இன்றும் சரி, இலங்கை சுதந்திரம் பெற்று, சேனனாயக தமிழருக்கு குடியுரிமை மறுக்கத் தொடங்கி, பின் வந்த பண்டாரநாயக சிங்களத்திற்கு முதலிடம் கொடுக்கத் தொடங்கிம், பின் அடுத்தடுத்து வந்த தமிழ் இனத்தையே குறி வைத்த அடக்கு முறை அடுத்தடுத்து […]

நினைவுகளின் சுவட்டில் – 86

This entry is part 3 of 31 in the series 19 பிப்ரவரி 2012

நான் Illustrated Weekly of India வுடன் பரிச்சயம் கொண்டிருந்த காலத்தில் அதற்கு C.R.Mandy என்பவர் ஆசிரியராக இருந்தார். அதன் பெயருக்கு ஏற்பவே எந்தக் கட்டுரையானாலும் நிறைய படங்கள் உடன் பிரசுரமாகி இருக்கும். படங்கள் இல்லாத பக்கமோ கட்டுரையோ அதில் பார்க்கமுடியாது. நான் வாங்கத் தொடங்கிய போது அது 12 அணாவுக்கு விற்று வந்தது. 12 அணா என்பது முக்கால் ரூபாய். படம் என்றதும் ஓவியங்களின் கலர் பதிவுகளையும் முக்கிய மாகச் சொல்ல வேண்டும். நான் 1950 […]

நினைவுகளின் சுவட்டில் – (85)

This entry is part 8 of 40 in the series 12 பிப்ரவரி 2012

புர்லாவுக்கு வந்த பிறகு (1951) தான் தினசரி பத்திரிகை படிப்பது என்ற பழக்கம் ஏற்பட்டது. அதாவது ஆங்கில தினசரிப் பத்திரிக்கை. தினசரிப் பத்திரிக்கை படிக்கும் பழக்கம் கும்பகோணத்திலேயே, மகாமகக் குளத்தெருவில் குடியிருந்து படித்த காலத்தில் ஆரம்பித்தது என்றாலும் அது பக்கத்துத் தெருவில் இருந்த திராவிட கழக ரீடிங் ரூமுக்கு பத்திரிக்கைகள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டதிலிருந்து தொடங்கியது. அது திராவிட கழகப் பத்திரிகைகளுக்கிடையே கிடந்த விடுதலையையும் படிக்கத் தொடங்கியதிலிருந்து ஏற்பட்ட பழக்கம். திராவிட கழக படிப்பகத்தில் அப்போது வந்து […]

நினைவுகளின் சுவட்டில் – (84)

This entry is part 15 of 31 in the series 5 பிப்ரவரி 2012

ஸ்டாலின் சம்பந்தப்பட்ட The Great Purges – பற்றி எழுதிக்கொண்டு வரும்போது கம்யூனிஸக் கொள்கைகளால் கவரப்பட்டு பின்னர் ஸ்டாலின் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளிலும், ஸ்டாலினின் கோடூர யதேச்சாதிகாரத்திலும் வெறுப்புற்று வெளியேறியவர்கள் எழுதிய The God that Failed புத்தகத்தைப் பற்றிச் சொல்லி வந்தேன். அதில் சில பெயர்கள் என் மறதியில் விட்டுப் போயின. அதன் பின் எனக்கு ஒரே ஒரு பெயர்தான் நினைவுக்கு வந்தது. ஆர்தர் கெஸ்லர் என்னும் ஹங்கரியர் தான் மறந்து போனது. அவர் […]

பறவைகள் உலகின் கவித்வமும் அழகும்

This entry is part 2 of 42 in the series 29 ஜனவரி 2012

வாழ்க்கையின் அந்திம நாட்களைக் கழிக்க சென்னை வந்தாயிற்று. வீட்டின் முகப்பில் உள்ள மூன்று புறமும் காற்றுக்கு வழிவிட்டுத் திறந்து ஆனால் கம்பி கிராதிகளால் அடைபட்டிருக்கும் வாசலை நோக்கிய இடம் தான் நான் விருப்பத்துடன் பகல் நேரம் முழுதையும் செலவிடும் இடம். வீட்டின் முன் இருக்கும் வெளியிடத்தில் பவளமல்லி, செம்பருத்தி, மரங்கள். அந்தி நேரத்தில் பூத்துக் குலுங்கும் செம்பருத்தி மறுநாள் காலையை வசீகரமாக்கும். பவளமல்லி மரம் பூத்து தரையெல்லாம் கொட்டிக் கிடக்கும். வெண்ணிற இதழ்களும் செந்நிறக் காம்புகளும் கொட்டிக்கிடக்கும் […]

ஒரு நாள் மாலை அளவளாவல் (2)

This entry is part 13 of 30 in the series 22 ஜனவரி 2012

ராஜே: நீங்கள் படைப்பிலக்கியத்தில் ஏன் ஈடுபடவில்லை? இதே தானே அதுவும். யாரோ எழுதியதைப் பார்த்துவிட்டு ,அந்த சந்தோஷத்தை, அனுபவத்தை வெளியில் சொல்கிற உங்களால்….. வெ.சா: எழுதினது மாத்திரம் இல்லை. நடக்கிறது எதுவுமே அது எனக்கு சந்தோஷத்தை இல்லை ஏதோ தாக்கத்தைத் தந்தால், அதைப்பற்றி சொல்லணும் என்று தோன்றினால் சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால், யாரும் கேட்டால் சொல் கிறேன். அவ்வளவு தான். ராஜே: உங்களை யாரும் சிறுகதை எழுதுங்க என்று கேட்கவில்லையா? நாங்கள் கேட்கிறோம் ஒரு சிறு […]

ஒரு நாள் மாலை அளவளாவல் – 1

This entry is part 16 of 30 in the series 15 ஜனவரி 2012

கடந்த 30.4.2011 அன்று வெங்கட் சாமிநாதன்: வாதங்களும் விவாதங்களும் என்ற் புத்தக வெளியீட்டை ஒட்டி சென்னை வந்திருந்த வெங்கட் சாமிநாதனை ஒரு நாள் மாலை கே.எஸ் சுப்பிரமணியம் வீட்டில் சந்தித்து அளவளாவியதில் ஒரு பின் மாலை கழிந்தது. கலந்து கொண்டவர்கள் திலீப் குமார், எம்.ராஜேந்திரன், கே. எஸ். சுப்பிரமணியம், எஸ் சாமிநாதன், பின் வெ.சா வின் நெடு நாளைய நண்பர் துரை ராஜ். அந்த அளவளாவலின் ஒரு பகுதியைக் கீழெ காணலாம். திலீப் குமார்: சாமிநாதன், நேற்று […]