என் நிலை

    உங்களின் சமூகக் கட்டமைப்புள் நான் கட்டுப்படவில்லை என்ற கோபம் உங்களுக்கு.. கட்டமைப்புள் கட்டுப்படாத பெருமை எனக்கு... நீங்கள் சரியென நினைப்பவை அனைத்தும் அபத்த ரூபத்திலழுத்தும் என்னை... என் வழியில் நீங்கள் கடந்து போகலாம் ஆனால் என்னை தள்ளிவிட்டுப் போகவோ அல்லது…

பொறுமையின் வளைகொம்பு

பொறுமைக் கொம்பின் நுனிவரையேறி வளைத்துப் பிடித்து வைத்திருக்கிறேன் விட்டுவிடுவேனோ என்ற பெரும் பயத்தில் மனது துடிக்கிறது படபடத்து விட்டுவிட்டேனென்றால் வளைந்த கொம்பு முழு வீரியத்துடன் எம்பி நிமிரும் அதன் தாக்கம் சாமன்யமாய் இருக்காது.. விடக் கூடாதென்ற வைராக்கியம் வளைத்துப் பிடித்தபடியே இருக்கிறது…

என்னுலகம்

- பத்மநாபபுரம் அரவிந்தன் - பன்னீர்க் குடத்துள் மிதக்கும் சிசுவின் ஏகாந்த நிலைபோல என் மனதுள் விரிந்து சுருங்கிச் சுழலும் சலனங்கள்.. சலனங்கள் சங்கமித்து உருக்கொண்டு வெளிவரும் என் வார்த்தைகள் புரியவில்லையென்று சொல்லித் திரியும் நீ பலமுறை கேட்டிருக்கிறாய் நான் எங்கிருக்கிறேன் என்றோ,…

பூனைகளின் மரணம்

- பத்மநாபபுரம் அரவிந்தன் - யாரேனும் கண்டதுண்டோ .. பூனைகளின் இயற்கையான மரணத்தை? வாகனங்களில் அடிபட்டோ , நாய்களால் கடிபட்டோ இரை பிடிக்கத் தாவுகையில் தவறிக் கிணற்றுள் விழுந்தோ .. விபத்து சார்ந்த மரணங்களையன்றி பூனைகளின் இயற்கையான மரணம் மனித மனதைப்…

கவிதைகள்

தொடர்பறுதல் ஏகாந்த இரவொன்றில் வான்பார்த்து மாடியில் படுத்தபோது தென்பட்ட நட்சத்திரங்கள் ஒவ்வொன்றின் இடையேயும் விரிந்துக் கிடக்கிறது ஏகப்பட்டத் தொலைவு எனை விட்டுத் தொடர்பறுந்துப் போனவர்கள் போல.. ஒன்றாய்ப் படித்து, சுற்றிய நண்பர்கள் ... நெருக்கமாய்ப் பழகிய தொடர் கடிதத் தோழிகள் பக்கத்து…

இறந்து கிடக்கும் ஊர்

பெருங் கோட்டைச் சுவர் தாண்டி உள் நுழையத் தேரோடும் தார் சாலையின் இருமருங்கும் புது வீடுகள்.. முப்பது ஆண்டுகளுக்கு முன்பான ஊர் நெஞ்சுள் விரிகிறது.. நிரம்பித் தழும்பும் பெருமாகுளம் இக்கரைக்கும் அக்கரைக்கும் நீந்திப் போகும் சிறுவர் கூட்டம்.. குளம் களிப்படைந்துப் போயிருந்த…

ஓர் இறக்கை காகம்

முட்டை விரிந்து வெளிவரும் போதே ஒற்றை இறக்கை இல்லாமல் இருந்தது அக்காகக் குஞ்சுக்கு ... சக முட்டைகள் விரிந்து அத்தனைக் குஞ்சுகளும் இரட்டை சிறகடிக்க இக்குஞ்சு மட்டும் ஒற்றை சிறகடித்து எதுவும் புரியாமல் மறுபக்கம் பார்த்தது .. சிறகு இருக்கும் இடத்தில்…

சிலை

  அக் கிராமத்தின் சிற்றோடைக் கரையோரம் கால் முட்டிப் பாகம்வரை செஞ்சேற்றினுள் அமிழ்ந்து.. தேகமெங்கும் சகதித் தீற்றுடன் மல்லாக்கக் கிடந்தது அச்சிலை... கண்களிலும் உதட்டிலும் புன்னகைப் பூவிரிக்க கச்சை கட்டிய கூர் முலையும், வடிவேயான இடையுடனும் .. யாரையோ எதிர் நோக்கிக் காத்திருக்கும் பாவனையில் ... இடக்கை  நாடி தாங்க வலக்கை இடையில் வைத்து காத்திருக்கும் அச்சிலையின் கை விரல்கள் சிலவற்றை காணவில்லை.. உடைந்தவை உதிர்ந்திருக்கலாம்....   அற்புதமான அச்சிலை எக்காலம் செய்ததென்றோ எப்படியங்கு வந்ததென்றோ யாருக்கும் தெரியவில்லை... வயதான ஒருவர் சொன்னார் ... தன் சிறு பிராயத்தில் கரையோரம் நின்றிருந்து.. காலப் போக்கிலது நிற்க முடியாமல்ப் படுத்ததென்று... யாரோ துப்பிய வெற்றிலை எச்சில் உறை ரத்தம் போல்  தலைக் கிரீடத்தில்...   சிதைந்துக்…

ராசிப் பிரசவங்கள்

நாள் கிழமைப் பார்த்து டாக்டருக்குச் சொல்லிவிட்டால் கோள் ராசி பயமில்லை....டாக்டரின் கத்திக்குள் நட்சத்திரங்கள் ஒளிந்திருக்கும் ... மிகச் சிறந்த ராசியதில், சுத்த நட்சத்திரத்தில் அற்புதமான நாளன்று - அறுவை முறை கலையோடு அக் குழந்தை அவதரிக்கும் .. குழந்தை பிறக்கும் நேரம்…

இரு கவிதைகள்

  அகதிக்  காகம்                                           - பத்மநாபபுரம் அரவிந்தன் -   நீண்டதோர் கடற்  பயணத்தின் மூன்றாம் நாள் அதிகாலை கண்ணில்ப் பட்டது முன்புறக் கொடிமர உச்சியில் அமர்ந்திருந்த அக்காகம் ..   சில நூறு மைல்கள் கரையே இல்லாப் பெருங் கடல் நடுவே எப்படி வந்ததோ, கண்டம் கடக்கும் பறவைகள் பலவும் ஓய்வெடுக்க வந்திருந்து மீண்டும் போகும்.. காகங்கள் பொதுவாக  இத்தனை தூரம் பார்ப்பதே இல்லை.. இக்காகம் வழி தவறிப் பெருங் காற்றில் அடித்துவரப் பட்டிருக்கலாம்..    தொலை பயணக் கப்பல்கள்  ஓவ்வொன்றாய்  அமர்ந்தமர்ந்து வந்திருக்கலாம்.. எம்பிப் பறக்க எத்தனித்து பெருங் காற்றின் வேக வீச்சில் தடுமாறித் தத்தளித்து மீண்டுமது கப்பல் தளத்தினில் வந்தமரும்   தட்டில் அரிசி, கடலை, மாமிசத் துண்டுகள்  கிண்ணத்தில் தண்ணீரும் கொண்டுவந்து தளத்தில் வைத்து தள்ளி நின்றுப் பார்த்திருந்தேன்..  …