author

தாய் மனசு

This entry is part 8 of 38 in the series 10 ஜூலை 2011

“அம்மா அவசரமா ஒரு முன்னூறு ரூபா வேண்டியிருக்கு. வர்ற மாச சம்பளத்துல புடிச்சுக்குங்க.” “எதுக்கு முன்னூறு. பிடிக்கதுக்கு அங்க என்ன மிச்சமிருக்கு. மொத்தமா வாங்குனது, நடுவுல வாங்குனது எல்லாம் போக இந்த முன்னூறும்னா என்னத்த கைக்கு வரும்?” கோதை மறுக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் ‘பளிச்’ என்று கேட்டு விட்ட கமலத்துக்கு சங்கடமாய் போயிற்று. “என்னம்மா செய்யறது? பொண்ணுக்கு வர்ற வாரம் பொறந்தநாள் வருது. புதுசு வாங்கணும்னு கண்ணக் கசக்கிட்டு நிக்கு. ஸ்கூல்ல, அக்கம்பக்கத்து சிநேகிதிங்ககிட்டல்லாம் வேற […]

கடன் அன்பை வளர்க்கும்

This entry is part 25 of 51 in the series 3 ஜூலை 2011

‘வேறு எந்தக் கடனும் இப்போது இல்லை.’ புதுக் கடனுக்கு விண்ணப்பிக்க வந்த இடத்தில் வங்கி மேலாளர் கேட்கும் முன்னரே சொன்னான். முந்தைய கடன்களை காலத்தே அடைத்ததற்கான நற்சான்றிதழ்களை பெருமையுடன் முன் வைத்தான். சிணுங்கியது அலைபேசி ‘அப்பா எனக்கு நீ பத்து ரூவா தரணும்’ அறிவித்தாள் அன்பு மகள்.. முன் தினம் கடற்கரையில் கடலை வாங்க சில்லறை இல்லாத போது தன் குட்டிப் பையைக் குலுக்கித்தேடி  எடுத்துத்தந்த இரு ஐந்து ரூபாய் நாணயங்களை நினைவூட்டி. *** -ராமலக்ஷ்மி