author

கடிதம்

This entry is part 31 of 33 in the series 11 நவம்பர் 2012

மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களூக்கு வணக்கம் குளிர் அதிகமானதில் கொஞ்சம் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் தொடர் அனுப்ப முடியாததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றேன். அடுத்துவாரம் வரும். இனி 6 வயது முதல் 21 வரை உள்ள காலத்தில் கல்வி, அவர்கள் வாழும் சூழல், ஊடகத்தாக்கங்கள் என்பதை எழுத இருக்கின்றேன், எனக்கு இதில் பல பயிற்சிகள் கிடைத்தன. பயனுள்ள ஆலோசனைகள் கூற இருக்கின்றேன. ஆம் அரசுவுக்கும்தான். ஒத்துழைப்புதரும் திண்ணைக்கு நன்றி சீதாலட்சுமி

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -35

This entry is part 10 of 31 in the series 4 நவம்பர் 2012

  அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை   கணக்கு ஆம். இப்பொழுது ஒரு சின்னக் கணக்கு. 1மணி = 60 நிமிடங்கள் 24 மணி =1440 நிமிடங்கள் இப்படியே கணக்கு போட்டு 60 வருடங்கள் வாழ்ந்தால் ஏறத்தாழ 31 மில்லியன் நிமிடங்களுக்கு மேல் வருகின்றது இதில் எத்தனை நிமிடங்கள் பிறருக்கு உபயோகமாக நாம் வாழ்கின்றோம் என்று ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். இத்தனை வருடங்கள் கணக்குக் கூட வேண்டாம். ஒரு நாள் மட்டும் […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –34

This entry is part 3 of 34 in the series 28அக்டோபர் 2012

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர். வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றிகள் கிடைக்கும் என்பதில்லை வரும் தோல்விகளைக் கண்டால் துவண்டுவிடக் கூடாது என் வாழ்க்கைப் பயணத்தில் வெற்றிகளும் தோல்விகளும் எதிர் கொண்டிருக்கின்றேன். வெற்றி கிடைத்த பொழுது தன்னிலை மறந்ததில்லை. எடுத்துவைக்கும் அடிகளை எச்சரிக்கையுடன் கவனச் சிதறல்களின்றி எடுத்துவைப்பேன். தவறுகளும் செய்வதுண்டு. அதனைப் படிப்பினையாக எடுத்துக் கொண்டு என்னைத் திருத்திக் கொள்வேன். இப்பகுதியில் நான் எழுதப் போகும் விஷயங்கள் இப்பொழுதே என் மனத்தை வருத்துகின்றது. ஆனால் என் […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –33

This entry is part 4 of 21 in the series 21 அக்டோபர் 2012

  சீதாலட்சுமி பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை.   அர்த்தநாரீஸ்வரர் அம்மையும் அப்பனும் ஓர் உருவாய் தரும் காட்சி Positive and negative  இரண்டும் ஒன்று கலந்தால் சக்தி… உருவமாய்க் காட்ட இரு பாகங்களாய்க் காட்சி. இல்லறத்தில் இணை கோடுகளாக இருத்தல் கூடாது. ஆனந்தமும் அமைதியும் பெற ஒன்று கலந்து ஓர் புள்ளியாய் மாறவேண்டும். வாழ்வியலுக்கு விதிகள் வகுத்த பொழுது “கற்பு” புகுத்தினான். அதுகூட வாழ்க்கையில் ஒன்றியவளுக்கு மட்டும் கற்பு நிலை வலியுறுத்தப்பட்டது. […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –32

This entry is part 18 of 23 in the series 14 அக்டோபர் 2012

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர்.     மனம் விட்டுப் பேசுகின்றேன் இது உளவியல் பகுதி. இனிய இல்லறத்திற்கு வழிகாட்டும் பகுதி. அந்தரங்கம் புனிதமானது. அது அர்த்தமற்றதாகிவிடாமல் பாதுகாக்க மனம் திறந்த பேச்சு தவறில்லை. நமது இலக்கியங்களில் அகப்பாடல்கள் என்று தனித்து வந்தாலும் போர்ப்பரணி பாடும் பொழுது கூட ஓர் கடை திறப்பு முன்னிறுத்துகின்றோம். வாழ்வியல் வரலாற்றில் அகம்பற்றிய அலசல் இன்றியமையாதது. நம்மை ஆட்டிப் படைக்கும் சில பிரச்சனைகளையாவது ரண சிகிச்சை செய்து […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –31

This entry is part 6 of 23 in the series 7 அக்டோபர் 2012

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு இயற்கையான இயல்புகளும் இடையில் மனிதனே விதித்த சில விதிகளூம் ஒன்றிணைந்து இயங்குவது வாழ்வியல் பழையன கழிதலும் புதியன புகுதலும் ஏற்புடைத்தே என்ற இலக்கணக்கோடும் வரைந்து கொண்டோம். மனிதன் உணர்வுகளால் ஆன ஓர் பிண்டம். யானையை அடக்க முடிந்தவனுக்கு அவன் மனத்தை தனக்குள் ஆளுமைப் படுத்துவது கடினமான செயலாக இருக்கின்றது. மனிதனின் அமைதிக்கு அறியாமை தேவையா அல்லது அறிவு சிறந்ததா? அறிவினால் ஒவ்வொன்றையும் கூறுபோட்டு பார்த்துக் கொண்டே போகையில், […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –30

This entry is part 22 of 36 in the series 30 செப்டம்பர் 2012

  குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின்   ஒரு பெண்ணின் கதை அவள் ஓர் அழகான விதவை அவளுக்கு ஒரு மகன் மட்டும் உண்டு. அரசில் பணி கிடைத்ததால் மகனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். அவள் அழகும் தனிமையும் பலருக்கு சபலத்தை ஏற்படுத்தியது. அதிலும் சிலர் வேட்டை நாயைப் போல் சுற்றிச் சுற்றி வந்தனர். அவள் கண்ணியமாக வாழ்ந்தும் வீண்பழி சுமத்தி அவளை வேதனைப் படுத்தினர். அவளுடைய நேர் மேலதிகாரி ஓர் பெண். நிலைமையைப் […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -29

This entry is part 18 of 41 in the series 23 செப்டம்பர் 2012

சீதாலட்சுமி எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு.   புலம்பெயர்ந்து செல்வோரரின் குடியிருப்புகள் உலகெங்கினும் பெருகிக் கொண்டிருக்கின்றது தாராவி பழமையான குடியிருப்புகளில் ஒன்று. அங்கும் ஆரம்ப காலங்களில் பல இடங்களிலிருந்து வந்த போதினும் நாளடைவில் தமிழர்கள் பெரும்பான்மையினராயினர். துரையுடன் தாராவிக்குள் நுழையும் முன்னரே அதன் சுற்றுப்புறத்தையும், உள்ளே நுழையவிட்டு அதன் அமைப்புகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய களப்பணியில் முதலில் பார்வையில் பட்டவைகளையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும். நிலைமையை மதிப்பீடு செய்ய அது முக்கியம்.. சென்னையில் […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -28

This entry is part 16 of 31 in the series 16 செப்டம்பர் 2012

சீதாலட்சுமி தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை   நினைவுகள் அனைத்தும் சுகமாக இருக்குமென்பதில்லை. சுமையான நினைவுகளும் உண்டு என் பயணத்தில் மலர்த்தோட்டங்களும் உண்டு. குமுறும் எரிமலைகளும் இருக்கும். எளிதில் உணர்ச்சி வயப்படுவேன். இது என்னிடமுள்ள குறைகளில் ஒன்று. வெளிப்படையான பேச்சு விவேகமல்ல. இதுவும் என் குறைதான். என்னிடமிருக்கும் குறைகளை அவ்வப்பொழுது நினைத்துப் பார்ப்பதுடன் திருத்திக் கொள்ளவும் முயற்சிப்பேன். மனிதன் ஓர் கலவைதானே. ஒன்றில் மட்டும் என்றும் நான் உறுதியானவள். என்னால் முடிந்த உதவிகளைச் […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 26

This entry is part 4 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

எண்பொருள வாகச்செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு.   ஒரு பெண்ணின் பயணம் ஆம் , எனது பயணம் முதுமையில் கூண்டுப் பறவையாக ஒடுங்கியிருக்கும் பொழுது நினைத்துப் பார்க்கின்றேன். எனக்கே வியப்பாக இருக்கின்றது. எனக்குப் பல பெயர்கள் உண்டு. வீட்டிலேயும் நாட்டிலேயும் கூறும் பெயர்கள். அவைகளில் ஒன்று காட்டாறு. அடங்காமல் ஓடும் வெள்ளமும் ஓரிடத்தில் அடங்கித் தேங்கித்தானே ஆக வேண்டும். பிறந்தது பட்டணத்தில், வளர்ந்தது பட்டிக்காட்டில் பயணமோ பல்லாயிரக்கணக்கான இடங்கள் பார்த்த காட்சிகள், கிடைத்த அனுபவங்கள் நினைவுச் […]