சுவீகாரம்

பொத்தி பொத்தி வளர்த்தாள் ஒன்று தறுதலையாகும் இன்னொன்று தமிழ் வளர்க்கும் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டாள் அவளுக்கு வேண்டுமென்று ஒரு கவளை சோற்றையாவது தட்டில் எடுத்து வைத்ததில்லை நாங்கள் வளர வளர சுமையை பகிராமல் மேலும் பாரமானோம் அவளுக்கு இரத்தத் திமிரில்…

பேரழகி

உயிர் பிரியும் இறுதி வினாடியில் நினைத்துப் பார்க்கிறேன் வாழ்ந்திருக்கலாமே என்று விடை பெறும் தருணத்தில் தவறவிட்டு விட்டேன் வழியனுப்பி விட்டு திரும்பி இருக்கலாம் மதுப் புட்டியில் மயங்கி விழுந்தேன் புதுப் புது கவிதைளோடு பிறகு எழுந்தேன் போதைியில் அமிழ்ந்தால் தான் எழுதுகோலில்…

கவிதைகள்

உளி   அவர் பயன்படுத்திய சூரல் நாற்காலி அனாதையாய் கிடந்தது அவர் மணி பார்த்த கடிகாரம் இன்றும் நிற்காமல் சுழன்று கொண்டிருந்தது பத்திரிகை தலையங்கங்களில் பரபரப்புக்கு ஒன்றும் பஞ்சமில்லை காலையில் சூரியன் உதிப்பதும் மாலையில் மறைவதிலிருந்து எந்த மாற்றமும் ஏற்படவில்லை ஆஷ்ட்ரேவில்…

மறுபக்கம்

    வானத்தின் கைகள் யாரைத் தழுவ மோகம் கொண்டு அலைகிறது முடவனின் கால்களும் குருடனின் கண்களும் ஊனன் நாடியாக வேண்டும் பிறர் தயவை எந்நாளும் சிநேகிதியிடம் நேரத்தை பகிரும் போது வியர்த்து ஆடை நனைந்து விடுகிறது விபரீதங்கள் நடந்த பின்னரே…

மீள்பதிவு

    கிரணங்கள் ஊடுருவிப் பாய்கிறது மனிதனின் நகல் நிழல்களைத் தொடர்கிறது பசி கொண்ட காளைகள் வைக்கோல் போரை சுமக்கின்றன உச்சி வெயில் பாதைகளை மறந்து நிஸ்சிந்தையாய் தோண்டித் துழாவி இலக்கியம் ஒரு கடைச்சரக்கு கொள்வாரின்றி நிலத்துக்கு சுமையாய் கவிதையில் சந்தங்களையும், தாளங்களையும்…

வெற்றிக் கோப்பை

    நீங்கள் கைப்பற்றலாம் விலங்குகள் இல்லா கானகத்தை உங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டலாம் தாகத்திற்கு சிறுநீரைப் பருகும் தேசத்தை உங்கள் தீர்மானத்துக்கு தலையாட்டலாம் இறையாண்மையை அடகு வைத்து பூம்பூம்மாட்டினைப் போல் உறக்கத்தில் கனவுகளுக்கு தடை போடலாம் சிறைக்கு உள்ளே மனதை விலங்கிட்டு…

எழுத்து

கைவிலங்கை உடைத்தெறிந்தால் சமூகம் அவனை பைத்தியமென சிறை வைக்கிறது விதி வெண்கலப் பாத்திரத்தைக் கூட வீட்டில் இருக்கவிடாது எத்தனை இரவுகள் நீ அருகிலிருந்தும் நான் விலிகி இருந்தேன் மனைவியை மதிக்காமல் உடைமையாக்க முற்பட்டது மனப்பிறழ்வின் ஆரம்பம் மெல்லிய லெட்சுமணக் கோட்டை தாண்டுவதற்கு…

விழுது

ஆலமரத்தின் வேர்ப்பகுதி நீர்நிலையில் மூழ்கி இருந்தன அதன் விழுதுகள் கூட அதனை கைவிட்டுவிட்டன விருட்சம் தனக்குக் கீழே எதையும் வளரவிடாது புளிய மரத்துப் பேயைப் பற்றி நிறைய இக்கட்டி கதை சொல்வாள் பொரிஉருண்டை அஞ்சம்மாள் குச்சியை நட்டு வைத்தால் கூட வேர்…

கவிதைகள்

இடப்பெயர்ச்சி கண்கள் கூசுவதிலிருந்து தப்பித்தேன் குளிர்க்கண்ணாடிகள் மூலம் வன்முறைகள் நிரம்பிய உலகில் இரக்கம் பறவையின் இறகுகளாய் உடலை மென்மையாய் வருடியது கரங்களை நனைத்த தண்ணீர் குருதியைவிட அடர்த்தியாய் இருந்தது பீழை தான் வாழ்வு சுமக்கும் பாரத்தை கைத்தாங்கலாக இறக்கி வைப்பார் யாருமில்லை…

அறுவடை

கனவுக்கும் நனவுக்கும் இடையே இருந்தேன் காலக் கணக்குகள் தப்பாகாது வசிப்பது ஏ.சி அறையிலென்றால் இறந்த பின் அரியணையில் உட்கார வைத்து சாமரம் வீசுவோர் உண்டோ விதிக்கு கை விலங்கு போட்டுவிட்டேன் என்று நுனி மரத்தில் உட்கார்ந்து அடி மரத்தை வெட்டுவோர் உண்டோ…