நான் ஒரு பிராமணன்?

ஆம். நானும் ஒரு பிராமணன் தான். உச்சிக்குடுமி வைத்திருக்கவில்லை. பஞ்சக்கச்சம் உடுத்த வில்லை. பூணூல் போடவில்லை. கோத்திரம் இல்லாத ஒரு கோத்திரம் எனக்கு உண்டு. கோவில்களில் யாகம் நடத்தி அதி ருத்ர ஹோமங்களுக்காக‌ ஸ்ரீ ருத்ரம் சமகம் சொல்லி பூர்ண ஆகுதிக்கு…

காதலர் தினம்

    ஈடன் தோட்டத்தின் மிச்ச சொச்சம். வணிகப்பாம்பும் சைத்தான்கள் காட்டும் ப்ளாஸ்டிக் ஆப்பிளும் பதினாறுகளில் பாய்ச்சுகின்றன‌ தேனாறும் பாலாறும். வாய்க்கால் வரப்புப்புல்லின் பனித்துளியில் கண்ணாத்தாவின் விழி வர்ணம் அந்த முனியனின் நரம்பு புடைத்தலில் யாழ் மீட்டியது. ஒரு பேருந்தில் எச்சில்…
புழுக்களும் மனிதர்களும்

புழுக்களும் மனிதர்களும்

  காந்தித்தாத்தா என்ற சொல் முள்ளுமுனையில் கூட‌ மூணு குளம் வெட்டும். மூணு குளமுமே பாழ் என்றாலும் வெட்டிய இடம் எல்லாம் அவர் ரத்தமும் வேர்வையும் தான். சுதந்திரத்தை வாங்க‌ அடிமைத்தனத்தை பண்டமாற்றம் செய்யச்சொன்னார். அப்படி மாற்றப்பட்டதை விடவும் மாட்டிக்கிடந்ததே நமக்கு…
தியானம் என்பது….

தியானம் என்பது….

தியானம் என்பது மூச்சுகளில் தக்கிளி நூற்றல். காற்றை சோறு சமைத்து குழம்பு தாளித்து சாப்பிடுதல். ஆக்ஸிஜனின் "வேலன்ஸி-பாண்ட்" மோல்யூக்யூலர் ஸ்ட்ரக்ச்சர் என்று வேண்டுமானால் நுறையீரலுக்குள் புகுந்து பாடம் எடுக்கலாம். பாடம் படிக்கலாம். உங்களை மயிரிழையாக்கி உங்கள் மூக்கின் வழியே சுருட்டி நுழைத்துப்பாருங்கள்.…

இதோ ஒரு “ஸெல்ஃபி”

இதோ ஒரு "ஸெல்ஃபி" ==============================================ருத்ரா யார் இந்த மானிடப்புழு? நெளிந்து கொண்டிருந்தாலும் நெளிந்த தடம் எல்லாம் மின்னல் உமிழ்வுகள். ஆயிரம் கைகள். ஆயிரம் கண்கள்..தலைகள். ஆயிரம் ஓசை எழுப்பும் ஆயிரம் நயாகராக்களை கடைவாயில் ஒழுக விடும் கடையனுக்கும் கடையவன். ஒளியாக‌ ஒலியாக‌…
ஓலை நறுக்கில் ஒரு புத்தாண்டு

ஓலை நறுக்கில் ஒரு புத்தாண்டு

  கல் பொருதிறங்கும் மல்லல் யாறு புல் தடவி பூக்கள் வருடி நறவம் துரூஉய் பல்லிணர்ப் பரவி வள்ளி படர்ந்த வளமண் பொள்ளி புடை யுடுத்த மன்றுகள் ஆக்கி வேங்கை படுத்த வேங்கை வெரூஉய் பெயரும் காட்சியும் மலியும். அற்றை வானின்…

சினிமாவுக்கு ஒரு “இனிமா”

ருத்ரா இளம்புயல் ஒன்று கோலிவுட்டுக்குள் தரையிறங்கி இருக்கிறது. குறும்படங்களை குறும்படங்களாகவே எடுத்துக்கொண்டிருந்தவர்கள் அதை கொஞ்சம் பட்ஜெட்டால் பலூன் ஊதி குறுநெடும்படமாக்க எடுத்து குவிக்கிறார்கள். மொத்த அண்டாவில் கதை அவியல் வேகிறது. சில மிளகாயை கடிக்கும். சில ஜிகர்தண்டாவில் சாம்பார் வைக்கும். சில…

பெண்ணே

=ருத்ரா இந்திய சரித்திரம் இன்னும் இமை திறக்கவில்லை. அறிவு நூல்கள் ஆயிரம்..ஆயிரம்.. ஆனாலும் உன் வளையல் சத்தங்களுக்கும் மல்லிகைப் பூ குண்டு வெடிப்புகளுக்கும் மாங்கல்ய மாஞ்சாக்களின் கண்ணாடித்தூள் அறுப்புக்காயங்களுக்கும் இங்கே எழுதாத இதிகாசங்கள் எத்தனையோ? எத்தனையோ? பிறப்பு எனும் பிரபஞ்ச வாசலில்…

ஆறு

==ருத்ரா மழை நீர் பருக‌ ஆறுகள் எனும் பாம்புகளே இங்கு வாய்கள். அதன் வாலில் உப்புக்கரித்த வேர்வை கடல் ஆனது. சூரியனால் மீண்டும் மீண்டும் கடையப்படுவதால் தான் கடல் ஆனதோ? அமுதமே மீண்டும் இங்கு ஆறு. ஆற்று மங்கைகள் மணல் எனும்…

அந்த சூரியனை நனைக்க முடியாது (ஜெயகாந்தன் எழுத்துக்கள்)

எழுத்துக்கள் வெறும் நிப்புகளின் வடுக்கள் அல்ல! அவை ஒவ்வொன்றும் கடி எறும்புகள் ஆனபோது தான் தமிழ் இலக்கியம் தூக்கம் கலைத்தது. புதிய யுகம் காண‌ தூக்கம் கலைத்த அவருக்கு தூக்கம் ஏது? தூங்கி விட்டார் என்ற செய்தியில் செய்திகள் ஏதும் இல்லை.…