தானாய் நிரம்பும் கிணற்றடி ..அய்யப்பமாதவனின் சிறுகதைத் தொகுதி எனது பார்வையில்

சுயகம்பீரத்தோடு ஆரம்பிக்கும் இந்தத் தொகுதி சுய எள்ள,சுய விமர்சனம் எல்லாம் கலந்து செல்கிறது. ஏதோ ஒன்றைத் தேடுதல், கிடைத்ததை வைத்து திருப்தி அடைதல் என்ற மத்தியதர மனப்பான்மை பல கதைகளில் காணக் கிடைக்கிறது. மொத்தம் பத்துக் கதைகள். எல்லாமே பொதுவாக மனம்…
திருமதி சௌந்தரநாயகி வைரவன்  சிங்கப்பூரில் தமிழ் தமிழர் .

திருமதி சௌந்தரநாயகி வைரவன் சிங்கப்பூரில் தமிழ் தமிழர் .

சீனர் தமிழர் மலேய மக்கள் ஒற்றுமையாக அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர். என்று ஒரு படத்தில் ரஜனிகாந்த் பாடுவார். அது உண்மை எனச் சொல்கிறார் திருமதி சௌந்தரநாயகி வைரவன் தன்னுடைய சிங்கப்பூரில் தமிழ், தமிழர் என்ற தன்னுடைய புத்தகத்தில். 2010 ஏப்ரலில்…

மதிலுகள் ஒரு பார்வை

மீளமுடியாத ஒரு சிறைக்குள் நாமெல்லாம் மாட்டிக் கொண்டிருப்பது போல ஒரு கனவுச் சித்திரத்தை அங்கங்கே உண்டுபண்ணுகிறது மதிலுகள். பெண்ணின் வாசனை கூட ஒரு மதில்தான். மீளமுடியாத மதில். அது காதலியின் வாசனையாய் இருக்கலாம். அல்லது மனைவியின் ஏன் அம்மாவினதும் கூட. இந்த…

பத்மஜா நாராயணன் : மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்

கவிதாவஸ்தை வந்து எழுதும் கவிஞர்கள் மத்தியில் கவிதைகளை சுகமாகப் படிக்க முடிவது பத்மஜாவின் எழுத்துக்களில்தான். வலைப்பதிவர்களில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்க கவிஞர் பத்மஜா. தனிமையும் அன்பும் பரிவும் நிரப்ப இயலாத வெற்றிடங்களும் நிரம்பிக் கிடக்கும் கவிதைகளில் மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் இப்போதெல்லாம் பாதைகள்…

முனுசாமி பாலசுப்ரமணியனின் ஐந்து நூல்கள்.. ஒரு பார்வை .

புதுவையைச் சேர்ந்த பொறியாளர் பாலசுப்ரமணியம் 5 நூல்கள் வெளியிட்டுள்ளார். தன் பிள்ளைகள் இளம்பரிதி, அன்பன் ஆகியோரின் பெயரை இணைத்து பரிதியன்பன் என்ற புனைபெயரில் எழுதியுள்ளார். புதுவை அரசால் இவரது புத்தகங்கள் விருதுகள் பெற்றுள்ளன. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவிற்குப் பிறகு நான்…

ஸ்ரீ கிருஷ்ண ஆலனஹள்ளியின் வனக்கோயில் (தமிழில் ராஜேஸ்வரி கோதண்டம்.) நூல் பார்வை

மொழிபெயர்ப்பு நூல்களின் தேவை அதிகமான காலகட்டம் இது. ஒவ்வொரு மொழிபெயர்ப்பு நூலும் தான் சார்ந்த மண்ணின் மணத்தையும். தன்  மொழி வளத்தையும் சுமந்து வந்து நமக்கு அந்த மண்ணை நுகரச் செய்யும் அழகான முயற்சி.அந்த முயற்சியில் மிகச் சிறப்பாகச் சாதித்துவரும் திருமதி…

மனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம். ஷாரு ரெங்கனேகர். தமிழில் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன். நூல் பார்வை

மனைவி சொல்லே மந்திரம்னு சிலர் இருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அவங்களுக்கும் மேனேஜ்மெண்ட்டுக்கும் என்ன சம்பந்தம் என சிலர் கேட்கலாம். வீட்டை பொறுப்பா நிர்வகிக்கிற தன்னோட மனைவிகிட்ட இருந்து தன் அலுவலக மேலாண்மை நிர்வாகத்தைக் கத்துக்கலாம்னு சொல்றார் இந்தக் கட்டுரை ஆசிரியர் ஷாரு…

ஆற்றைக் கடப்போம். ! ஆற்றலோடு கடப்போம். !! ( அம்பையின் ஆற்றைக் கடத்தல் வெளி ரங்கராஜனின் நாடகம் .. எனது பார்வையில்

விதிக்கப்பட்டதை எல்லாம் ஏற்று வாழ்ந்து சென்ற சீதையில் குரலாய் ஒலிக்கிறது ஆற்றைக்கடத்தல். அம்பை எழுதிய ஆற்றைக் கடத்தலை வெளி ரங்கராஜன் நாடக ரூபமாக பார்த்தபோது மனம் கூம்பியது, கொந்தளித்தது, வெம்பியது, வெந்தணலானது. காலம் காலமாகப் பல ரகசியங்களைத் தாங்கி ஓடிக் கொண்டிருக்கும்…

மெய்ப்பொருள், கனவு, குலவை, அகநாழிகை ,கணையாழி, துளிர், வணிகக் கதிர். — சிற்றிதழ்கள் ஒரு பார்வை

இலக்கியச் சிற்றிதழ்கள் பல வருகின்றன. அவற்றுள் மெய்ப்பொருள், கனவு, குலவை, காலம், அகநாழிகை, கணையாழி போன்றவையும் விஞ்ஞான இதழாக துளிரும், வணிகம் சம்பந்தமாக வணிகக் கதிரும் சிறப்பாக இருக்கின்றன. மாதம் ஒரு முறை வெளியாகும் ”துளிர்” இதழ் குழந்தைகளுக்கான விஞ்ஞானத்தகவல்களைத் தருகிறது.…

பூவரசி காலாண்டிதழ். எனது பார்வையில்.

புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் இலக்கியத்தையும் தங்களோடு எடுத்துச் சென்று புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். புலம் பெயர்தலில் என்ன நன்மையோ, தீமையோ ஆனால் நிறைய பெண் படைப்பாளிகளையும் அது உருவாக்கி இருக்கிறது. தங்களோடு எடுத்து வர முடியாத தாய் மண்ணை தொட்டுணர விரும்பும் ஆசை…