என்ன  வாழ்க்கைடா  இது?!

This entry is part 6 of 6 in the series 30 ஜூன் 2024

சோம. அழகு             எந்தவொரு மனநிலையிலும் அதற்கு ஏற்ற (அல்லது ஏற்பில்லாத) எவ்வுணர்வையும் பூசிக்கொண்டு எந்தத் தொனியிலும் கூற முடிகிற ஒரு வாக்கியம் இது. ரொம்பவே வெட்டியாக இருந்த அந்த சுபதினத்தன்று ஒரு நொடி சந்திரமுகியாக (ஜோதிகாவைச் சொன்னேன்!) மாறி கண்ணாடி முன் நின்று ஒவ்வொரு தினுசாகச் சொல்லிப் பரிசோதித்த பின்பே எழுதுகிறேன். இன்பம், துன்பம், சோகம், விரக்தி, கோபம், சினம், துயரம், பயம், கவலை, ஏமாற்றம், பரிவு, எரிச்சல், சலிப்பு, அலட்சியம், வெறுப்பு, வியப்பு என […]

படித்தோம் சொல்கின்றோம் :

This entry is part 5 of 6 in the series 30 ஜூன் 2024

 சி. மகேந்திரன் எழுதிய ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம் ! படித்தோம் சொல்கின்றோம் :  சி. மகேந்திரன் எழுதிய ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம் ! நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்,  நதி செய்த குற்றம்  என்ன…? !                                                                      முருகபூபதி  “ வண்ணத்துப்பூச்சியின் மரணசாசனம் என்பது நதிகளின் மரண சாசனம். நதியின் உருவமாக , படபடத்து சிறகசைக்கும் வண்ணத்துப்பூச்சிகள், பெரும் துயருடன் என் மனதில் குடியேறின. இதன் விளைவுதான் வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம். இயற்கைக்கு மரணம் […]

வண்டின் இனிய கீதம்

This entry is part 4 of 6 in the series 30 ஜூன் 2024

வெங்கடேசன் நாராயணசாமி [ஶ்ரீம.பா. 10.47.11] ஒரு தேன் வண்டைக் கண்ட கோபிகை, கண்ணனுடன் இணையும் சிந்தனையில் தன்னையே தேற்றிக்கொள்ள, தாமோதரனின் தூதாக அதையெண்ணி கற்பனை செய்து கூறலானாள்: [ஶ்ரீம.பா. 10.47.12] கோபிகை கூறுகிறாள்: தேனீ! அக்கபடனின் நண்ப! நப்பின்னை கொங்கைகள் நசுக்கிய மார்பு மலரின் குங்குமக்கறை உன் மீசையில் எப்படி? தொடாதே எமது பாதங்களை! வணங்குவதுபோல் பாசாங்கு செய்யும் உன் நொண்டிச் சமாதானம் தேவையில்லை எமக்கு! சொல்லாமல் சொல்கிறாயா எமது போட்டிக் காதலிகளோடு அவ்வனமாலீ ஆடும் பல் […]

கவிதைகள்

This entry is part 3 of 6 in the series 30 ஜூன் 2024

ஜி. ஏ. கௌதம் நினைவிருக்கிறதா ? முன்னால் காதலியைமீண்டும் காதலிக்கும் ஒருவனின்கவிதையொன்றை எழுதும் முன்என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்… நினைவிருக்கிறதா !? நீ காதலிக்கப்பட்டமுதல் தருணம் ! அவள் கண்கள்முழுதும் நிறைத்தகாதலின் பூரணம் கண்டுநீ மகிழ்ந்த தருணம் ! கண்சிமிட்டாமல் பார்த்தபடிமடியிலிருந்து இதழுக்குநத்தையாக நகர்ந்துஉன் காதலைமுத்தத்தில் சொன்ன விதம் ! யாருமற்ற  உன் வாழ்வின் பாதைஅவள் பாதங்களில் முடியும்ரகசியம் அறிந்த அந்த இரவு ! அவள் கல்லூரியின்மரங்கள் அடர்ந்த பாதையில்சிந்திய மலர்கள்உங்கள் பாதங்களை ஏந்திக்கொள்ளஅவள் கரங்களை இறுகப்பற்றியபடிஅவளுடன் நடந்த […]

மோகமுள்

This entry is part 2 of 6 in the series 30 ஜூன் 2024

   தி.ஜா.வின் மனதிலே  குடமுருட்டி ஆற்றங்கரை  வாழை,பலா,மா தோட்டங்கள்  சத்திரம், பிள்ளையார் கோவில். வலப்பக்கம்  அக்ரஹாரம்  இடப்பக்கம் வேளாளர் தெரு  மேற்கே காவிரி  கிழக்கே அரிசன தெரு  இத்தனை அழகோடு  கீழவிடயல்  அவரோட மனதினிலே  அழியாக்கோலங்கள்.  நதியோடு விளையாடி  ராகங்கள் பலபாடி  மோகமுள் படைத்துவிட்டார். காலமெனும் நதியினிலே  காவியப்படகில் ஏற்றிவிட்டார்.  காதலையும், காமத்தையும்  கணக்கோடு கலந்துவிட்டார்.  இனிவரும் தலைமுறைக்கும் மோகதீப தரிசனத்தை காலவெளியில் கலந்துவிட்டார்.  ஜெயானந்தன்.

என் தாய் நீ

This entry is part 1 of 6 in the series 30 ஜூன் 2024

               ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி                                                                 .                 வேப்ப மரத்துக் குயில் கூவியது. அலாரமே தேவையில்லை. இதையாவது நிறுத்தி விட்டுத் தூக்கத்தைத் தொடரலாம் ஆனால் இந்த பொல்லாத பூங்குயிலை ஒன்றும் செய்ய முடியாது. சரியாக ஐந்து மணிக்கெல்லாம்  கச்சேரியை ஆரம்பித்துவிடும். யாராவது கேட்கிறார்களா, இரசிக்கிறார்களா என்றெல்லாம் பார்ப்பதில்லை.ஆளில்லாத டீக்கடையில் டீ ஆற்றுபவர் போல என்று சொல்லலாமா? ரஞ்சனிக்கு என்னவோ அது தன்னை எழுப்புவதற்கே நாள் தவறாமல் வருவதாக எண்ணம். எந்தபக்கமும் திரும்ப முடியாதபடி ஆளுக்கொரு காலைத் தூக்கிப் போட்டுக்கொண்டு ஆளுக்கொரு கையைப் […]