[எஸ்ஸார்சியின் ”ஞானவாபி” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து] எஸ்ஸார்சியின் சிறுகதைகளைப் படிக்கும்போது நம்முடன் நெருங்கிய தொடர்புடையவர்களின் நினைவுகள் தோன்றும். அவரது கதைகள் அவரின் அன்றாட வாழ்வோடு, தொடர்பு கொண்டவை. அந்த அனுபவங்கள் சாதாரண மனிதர்கள் எல்லாருக்கும் உண்டு. வீட்டிற்கு வாடகைக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு முன்பணமும் தந்துவிட்டுக் கொரானோ வந்ததால் வராதவர், வீட்டை விற்பனை செய்ய வரும் தரகரின் மறுபக்கம், வீட்டுப் பூட்டைத் திறக்க வந்த பாய் வேலை செய்யாததால் காசு வாங்க மறுப்பது, குடித்தனம் வருபவரின் தொல்லைகள், […]
“ கருப்புக் கண் “ என்று அந்த போலீஸ்காரர் தியாகராஜனைப் பார்த்துச் சொன்னார் .அவர் வழக்கமான சீருடை அணிந்து இருக்கவில்லை .நன்கு சலவை செய்யப்பட்ட வெள்ளை சட்டையில் நீல பூக்கள் இருந்தன .அவரின் தலை கேசம் காவல் துறை சார்ந்த மனிதரின் அலங்காரமாக இல்லாமல் புதிதாக இருந்தது. இன்றைய கல்லூரி மாணவர்கள் போட்டுக்கொள்ளும் தலைக்கேச வேஷம் போல் இருந்தது. அந்த அறைக்கு வந்து செல்பவர்களில் பாதிப்பேர் இப்படித்தான் காவல்துறை உடுப்பு இல்லாமல் இருந்தார்கள். பலர் வெள்ளை சட்டையில் இருந்தார்கள். அவனை அடித்தவர்கள் யாரென்று அடையாளம் காண முடியாதபடி பலர் வந்து […]
ஆர் வத்ஸலா நீ வருவாய் என தெரியும் நீ கிளம்பி போய் ஆண்டுகள் ஆகி விட்டன அதற்கு கணக்கு வைத்துக் கொள்ளும் பழக்கம் எனக்கில்லை நான் எப்போதும் போல் பணி புரிகிறேன் சமைக்கிறேன் சாப்பிடுகிறேன் தூங்குகிறேன் பெரும்பாலான இரவுகள் சில சமயம் அவற்றில் நீ கூட வருகிறாய் அதே சுருட்டை முடியும் புன்னகை நிறைந்த முகமுமாய் பேசத் தான் நேரம் இருப்பதில்லை விடிந்து விடுகிறது நீ வருவாய் எனத் தெரியும் சாவதற்கு முன் வந்தால் நல்லது கொஞ்சம் […]
ஆர் வத்ஸலா நேற்று என் தோழி இறந்து போனாள் படுக்கவில்லை தூக்கத்தில் போய்விட்டாள் அழுது ஓய்ந்து விட்டேன் சமாதானப் படுத்திக் கொண்டேன் படுக்காமல் போய் சேர்ந்தாள் புண்ணியவதி இல்லாவிட்டால் கஷ்டப்பட்டிருப்பாள் புருஷன் பாம்புக்கும் பழுதைக்கும் நடுவில் அவளுக்கு ஏகமாக புடவை நகை வாங்குவான் தன்னிஷ்டத்திற்கு அவள் ஆசைப் பட்டதை வாங்க மாட்டான் அவளுக்கு உடல் நலம் கெட்டால் புகழ் பெற்ற மருத்துவர் வைத்தியம் ஆனால் அவள் தான் சமைக்க வேண்டும் அவனுக்கு பிடித்த மாதிரி அவள் நொண்டி […]
ஆர். வத்ஸலா என்னை உதறி விட்டு போய் விட்டாய் வெகு தூரம் அது உன் உரிமையென ஏற்றுக் கொண்டாலும் துடித்தோய ஓராண்டாயிற்று உதறிய காரணம் கூறப் படாததால் இதுவோ அல்ல அதுவோ எனக் குடைந்து குதறப்பட்ட மனப்புண் ஆற மேலும் ஆறு மாதம் இப்பொழுது புண்ணில்லை வலியில்லை வலியிலும் உன் மேல் கோபமில்லை ஒரே ஒரு ஆசை ஒரே ஒரு முறை யாராவது ஒருவர் உன்னை உதறி செல்ல வேண்டும் காரணம் கூறாமல் ஒரே ஒரு கணம் […]
இலக்கியப்பூக்கள் 277 வணக்கம்,இவ்வாரம் (வெள்ளிக்கிழமை/14/04/2023) லண்டன் நேரம் இரவு 8.15 இற்கு (இரவு 8.00 மணி பிரதான செய்திக்குப் பின்னர்) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் (http://ilctamil.com) இலக்கியப்பூக்கள் இதழ் 277 ஒலிபரப்பாகும்.நிகழ்வில், கவிஞர்.இந்திரன் இராஜேந்திரன். (கவிதை:கள்ளிப்பூக்கள்…நன்றி:முகநூல்), கவிஞர்.வண்ணதாசன் (கவிதை:முகம் கூடத் தொலைந்திருந்தது…நன்றி:முகநூல்), எழுத்தாளர்.சோலச்சி (கதை:பென்சில் நன்றி:பாக்யா இதழ்/இனிய நந்தவனம் பதிப்பகம்/சிறுகதை.கொம்), எழுத்தாளர்.கமலினி கதிர் (சுவிஸ்), எழுத்தாளர்.வேல் அமுதன்(இலங்கை) (குறுங்கதை:தாய்ப்பாசம் நன்றி:செங்கதிர் இதழ்-மட்டக்களப்பு), சுப்பிரமணியம்.குணேஸ்வரன்(துவாரகன் -இலங்கை), திருமதி.மாதவி […]
ஒன்று கவிதை எழுதுங்கள் அல்லது கலுவத்தில் மருந்து அரையுங்கள். இது மருத்துவன் நீலன் தருமனிடம் மற்ற கவிஞர்களும் மருத்துவர்களும் சொன்னது. சரியாகச் சொன்னால் மருத்துவர் நீலர் தருமரிடம். எனினும் அவர் வெகு காலமாக நீலன் வைத்தியராக உள்ளார். அழைக்க ஏதோ ஒரு பெயர். அதற்குமேல் என்ன வேண்டும்? அவரை அவரது மோசமான கவிதைகளுக்காக மற்ற மருத்துவர்கள் கொண்டாடினார்கள். உள்நாக்கில் அடக்கிக் கரையக் கரைய எச்சில் விழுங்க வேண்டிய மூலிகையைத் தவறுதலாக நாசித் துவாரங்களில் பிழிந்து மூக்கில் […]
ஆர். வத்ஸலா நீ என்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை கங்கை போல் என் மேல் பொழிந்து என் மனதை குளிர்வித்து வழிந்தது உன் பாசம் எனக்கு உன் மேலும் உனக்கு என் மேலும் காதல் இல்லை என்று யாருக்கும் சொல்லித் தெரிவிக்க வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டதில்லை என்றுமே நீ எனக்கு மேம் என் மனைவிக்கு அக்கா மகளுக்கு ‘ஃப்ரெண்ட் ஆண்டி’ அவர்களால் மட்டும் உன்னை எப்படி இயல்பாக ஏற்றுக் கொள்ள முடிந்தது? என் மனம் ஏன் திக்குமுக்காடியது? […]
பேரன்புடைய ஊடக நண்பருக்கு,நம் பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளி தமிழ்வழிப் பள்ளியாக இயங்கி வருவது தாங்கள் அறிந்ததே. இவ்வாண்டு பள்ளியின் 29 ஆம் ஆண்டு விழா வரும் ஞாயிறு தி.பி.2048 மேழம் 03 (16.04.2022) மாலை 5 மணி முதல் கொண்டாட உள்ளோம். இவ்விழாவினை இனிதாக்க உலகறியச் செய்ய தங்களைச் சிறப்பாக அழைக்கிறோம் வாருங்கள். இடம் : பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளி, குன்றத்தூர்.https://goo.gl/maps/2Ebvs9Y8b8HD7tgW8 பள்ளி சமூக ஊடகப் பக்கம் https://www.facebook.com/paaventharthamizhpalli
வில்லன் புருனோ, மோனிகா & ஒத்தல்லோ [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ அங்கம் -2 காட்சி -1 பாகம் : 3 ++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது] மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது] காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது] ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் [வயது 25] சிசாரோ : மோனிகாவின் தந்தை. வெனிஸ் செனட்டர் [60 வயது] எமிலியோ : புருனோவின் மனைவி. மாண்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர். பயாங்கா : காஸ்ஸியோவின் கள்ளக் காதலி. மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ், சாம்ராஜ்ய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள். நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு இடம் : சைப்பிரஸ் தீவில் ஒரு துறைமுகக் கரை ஓரம் நேரம் : பகல் வேளை பங்கெடுப்போர் : சைப்பிரஸ் கவர்னர், மாண்டேனோ, மற்றும் இரண்டு படைவீர்கள்,காஸ்ஸியோ, மோனிகா, தோழியர், எமிலியோ, புருனோ, ஷைலக். [ஒத்தல்லோ காவல் படை சூழ தூரத்தில் வருகிறான்.] புருனோ: [ மோனிகாவைப் பார்த்து] எந்த ஓர் அழகிய மாது கர்வ மின்றி, எதை எப்போது எங்கே சொல்ல வேண்டும் என்று அறிந்தவளோ, சபையில் உரக்கப் […]