அக்னிப்பிரவேசம்-31

This entry is part 33 of 0 in the series 21 ஏப்ரல் 2013

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com செக்ரடேரியட்டில் முதலமைச்சருக்கு முன்னால் உட்கார்ந்திருந்தாள் பாரதிதேவி. சுமார் நாற்பத்தைந்து நிமிடங்களாக அவர்களுடைய சர்ச்சை நீடித்துக் கொண்டிருந்தது. “மாநில அரசு எல்லைக்கு உட்பட்டு ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறேன். பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு பரிகாரம் காண்ப்தற்கு அது உதவியாய் இருக்கும். அதன் அதிகாரிக்கு ஜட்ஜ் ஹோதா இருக்கும். இதெல்லாம் நான் வரப் போகும் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு செய்யவில்லை. எத்தனையோ அனாதைகளையும், துரதிர்ஷ்டசாலிகளையும் […]

டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 3

This entry is part 32 of 0 in the series 21 ஏப்ரல் 2013

ஓ ……நீங்களா….இப்பத்தான் உங்கள நெனைச்சேன்…….உங்களுக்கு ஆயுசு நூறு கேட்டேளா..! என்னவாக்கும் விஷயம்? சித்ரா சுதாரித்துக் கொண்டு பேச ஆரம்பிக்கிறாள். அதொண்ணுமில்லை….உங்கட குட்டி கௌரிக்கு வேறெங்கிலும் வரன் பார்த்து முடிச்சுக்கோங்கோ . எங்க கார்த்திக், நேக்கு இந்தப் பொண் சரிப்பட்டு வராதுன்னு சொல்லிட்டான். அவனோட இஷ்டம் எதுவோ அது தான் எங்களோட இஷ்டமும்..நீங்க என்ன சொல்றேள்..? எதுவும் இப்போ நம்ம கையில இல்லையாக்கும்.இது எல்லாம் ஈஸ்வரன் கிருபை….நம்ம குட்டியள் இஷ்டம் தானே நமக்கு முக்கியம். அதான் நானே உங்க […]

வேர் மறந்த தளிர்கள் – 1

This entry is part 31 of 0 in the series 21 ஏப்ரல் 2013

1 அம்பிகை “பார்த்திபா ……! பார்த்திபா…..!’’ “என்னம்மா……?” “படுக்கைய விட்டு எழுந்திரிக்காம…..இன்னும் நீ என்ன செய்யுற?” அம்மா அம்பிகை அதட்டுகிறார். “அம்மா…..!” சிணுங்குகிறான். “சின்னப்பிள்ளையா நீ….?’’ “அம்மா….சாயாங் இல்ல…. கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேம்மா….பிளீஸ்!” “நீ கொஞ்சினது போதும்……! தினம்….உன்னை எழுப்புறதே எனக்குப் பெரும் பாடாப் போவுது…!” “ஏம்மா….கோவிச்சிக்கிறீங்க….? நான்தானே உங்களுக்கு ஒரே பிள்ளை?” “அதெல்லாம் இருக்கட்டும்….!.இன்றைக்குத் திங்கட்கிழமை தெரியுதா உனக்கு!” “எனக்குத் தெரியும்மா….!” “தெரிஞ்சிக்கிட்டா….இன்னும் படுக்கையை விட்டு எழாம இருக்கே…?” “அம்மா….ஆபிஸ் எட்டு மணிக்குத்தாமா!” “பார்த்திபா…..இப்பவே மணி […]