நான் திரும்பிப் போவேன்

This entry is part 8 of 8 in the series 21 ஏப்ரல் 2024

ஹிந்தியில் : உதய் பிரகாஷ்தமிழில் : வசந்ததீபன் ஆவணியில் மேகங்கள் திரும்பிப் போவதைப் போலவெயில் திரும்பிப் போவதைப் போல ஆடியில்பனித்துளி திரும்பிப் போகிறது அந்த மாதிரி விண்வெளியில் அமைதிஇருள் திரும்பிப் போகிறது ஏதாவது தலைமறைவு வாழ்க்கை ( அஞ்ஞாத வாசம் ) யில் தனது துக்கமடைந்த உடலைபோர்வையில் மறைத்துகொஞ்சம் போல மகிழ்ச்சியும் சிட்டிகை நிறைய ஆறுதலின் பேராசையிலும் எல்லாவற்றை மறைத்து வந்திருந்ததுவிபச்சாரி போல திரும்பிப் போகிறது திரும்ப தனது குகையில் பயம் கொண்டுமரங்கள் திரும்பிப் போகின்றன விதைகளில் […]

குலதெய்வம்

This entry is part 7 of 8 in the series 21 ஏப்ரல் 2024

                                வளவ. துரையன்  இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு இரவில் வருகையில் சிறு சலசலப்பும் சில்லென்று அடிமனத்தில் அச்சமூட்டும். அதுவும் கட்டைப்புளிய மரம் நெருங்க நெருங்க அதில் ஊசலாடிய கம்சலா உள்மனத்தில் உட்கார்ந்து கொள்வாள். அங்கிருக்கும் சுமைதாங்கிக்கல் அந்த இருட்டில் ஆறு பேர் நிற்பதாகத் தோன்றும். பகலெல்லாம் அதனடியில் பழம்பொறுக்கிச் சீட்டாடும் பாவிகள் எங்குதான் போனார்கள் என்று என்மனம் ஏசும். நடையை வேகமாகப் போட நான் நினைத்தாலும் கால்கள் பின்னலிடும். இத்தனைக்கும் புளியமரம் பக்கத்திலிருக்கும் வேப்பமரம்தான் எங்கள் குலதெய்வம்.

கனடாவில் செல்வி அதிசாவின் சலங்கைப்பூசை

This entry is part 6 of 8 in the series 21 ஏப்ரல் 2024

குரு அரவிந்தன் செல்வி அதிசாவின் சலங்கைப்பூசை சித்திரை மாதம் 6ம் திகதி சனிக்கிழமை கனடா, மார்க்கத்தில் அமைந்துள்ள கலைக்கோவில் மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. சலங்கைப்பூசை என்று சொல்வதைவிட, எமது இளைய தலைமுறையினருக்கு எமது பாரம்பரிய கலைகளை அறிமுகம் செய்யும் ஒரு நிகழ்வாகவே இது இருந்தது.  “வளரும் பயிரை முளையிலே தெரியும்” என்பதற் கிணங்க  அகவை எட்டு நிரம்பிய அதிசா தனது மூன்று வயதில் இருந்து கலைக்கோவில் நடன ஆசிரியை நாட்டியக் கலாநிதி ஸ்ரீமதி வனிதா குகேந்திரனிடம் […]

ரொறன்ரோவில் நூல்களின் சங்கமம்

This entry is part 4 of 8 in the series 21 ஏப்ரல் 2024

குரு அரவிந்தன் கனடாவில் கடந்த 30 வருடங்களாக இயங்கி வரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை ‘நூல்களின் சங்கமம்’ என்ற புத்தகக் கண்காட்சி ஒன்று 635 மிடில்பீல்ட் வீதியில் உள்ள கனடா இந்து ஐயப்பன் ஆலய அரங்கில் நடைபெற இருக்கின்றது. இந்த நிகழ்வில் கட்டணம் எதுவுமின்றி இலவசமாகப் பார்வையாளர்கள் கலந்து கொள்ளமுடியும். காலை 10 மணிக்குத் தொடங்கி மலை 5 மணிவரையும் இந்தக் கண்காட்சி நடைபெற இருக்கின்றது. […]

பூவாய்ச் சிரித்தாள்

This entry is part 3 of 8 in the series 21 ஏப்ரல் 2024

        மீனாட்சி சுந்தரமூர்த்தி                                             விடிகாலை நான்கு மணிக்கு அந்தச் சிறிய இரயில் நிலையம்  விளக்கின்  ஒளியில் நிரம்பிக் கொண்டிருந்தது. ஏழுமலை  வில் வண்டியை வேப்ப மரத்தடியில் நிறுத்திவிட்டு, கையிலிருந்த சாட்டையை வண்டியின் பக்கவாட்டில் செருகி வைத்துவிட்டு உள்ளே சென்று நடைமேடையில் காத்திருந்தான். மைசூர் வண்டி உள்ளே நுழைந்து வேகம் குறைத்து நின்றது, வாயிலில் நின்றிருந்த ஆறுமுகம் கைகாட்டினார். ஏழுமலை ஓடிச்சென்று பெட்டி, சாமான்களை இறக்கினான். ஆறுமுகம் மகள் கயலை இறக்கிவிட்டார். கல்யாணி ஒன்றரை வயது மேகலாவைத் தூக்கிக் […]

வெ.அனந்த நாராயணன் நூல்கள்

This entry is part 2 of 8 in the series 21 ஏப்ரல் 2024

This is Venkat Anantha Narayanan aka வெ.அனந்த நாராயணன் aka டெக்ஸன். Some of my poems and essays have appeared on Thinnai before. But, it has been many years since I sent anything to Thinnai for publication. I have lived in Atlanta for the last 10 years and am finally thinking of retiring soon.  As part of […]

ஜோதிர்லதா கிரிஜா

This entry is part 5 of 8 in the series 21 ஏப்ரல் 2024

ஆர்வி ஆசிரியராய் இருந்த கண்ணன் சிறுவர் இதழில் எழுதத் தொடங்கி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் எழுத்துலகில் செயல் பட்டவர் ஜோதிர்லதா கிரிஜா.  திண்ணை இதழில் தொடர்ந்து பங்களிப்பு செய்தவர். பெண்களின் பார்வையைப் பிரதிபலித்து தம் கருத்துகளை புனைவாகவும், கட்டுரைகளாகவும் முன்வைத்தவர். அவர் எம்போன்றோர் நினைவில் வாழ்ந்திருப்பார்.