அரிசங்கர் அவளுடனான எனது நினைவுகள் சைனைடு குப்பிகளாக என் மூலையின் பல இடங்களில் சொருகப்பட்டிருந்தன. ஏதோ ஒரு சூழ்நிலையில் ஏதோ விசையின் இயக்கத்தினால் அந்தக் குப்பி உடைந்து அந்த நினைவுகள் என் உடல் முழுவதும் பரவி என் இயக்கத்தையே அது நிறுத்திவிடுகிறது. வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அது தெரியாது. அந்தச் சமயங்களில் நானும் உங்களைப் போன்றே இருப்பேன். பேசினால் பேசுவேன். கேட்டால் பதில் சொல்லுவேன். நகைச்சுவை சொன்னால் சிரிப்பேன். அனைத்துமே செய்வேன். ஆனால் அப்போது நான் நானாக […]
டெல்பின் அ) ஆ! மை கருத்து விட்டது. ஆ ) சந்தித்தேன் பெரிய இழப்பு எனக்கு இ) பிம்பம் மறைந்து விட்டது நிழல் தொடர்கின்றது . ஈ ) ரசித்துக் கொண்டிருக்கிறேன் , ஓடிக் கொண்டிருக்கிறது . உ) மூடிய திரைக்குள் நாடக ஒத்திகை . ஊ) காய்ந்த சருகு பொட்டு வைத்துக் கொண்டது. எ) சிறிய பரிமாணத்தின் பெரிய வளர்ச்சி. ஏ ) சின்னத் துளிகளின் அபாயத் தழுவல்.
வணக்கம் மே 1 , 2018 உமறுப் புலவர் மையம் 2 பிட்டி சாலை சிங்கப்பூர் 209954 மாலை 5:30 மணி மக்கள் கவிஞர் மன்றத்தின் 14ம் ஆண்டு காலை இலக்கிய விழாவுக்கு தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம் தங்களது வருகையை எதிர் நோக்கும் செயலாளர் மக்கள் கவிஞர் மன்றம்
சுயாந்தன் கவிதைகள் படித்து நீண்ட நாட்களாகிவிட்டது. கவிதைகள் எழுதிப் பல மாதங்கள் ஆகிவிட்டது. கவிதை எழுதுவதே தீண்டாமை போலப் பார்க்கப்படுகிறது என்பதால் கவிதை எழுதுவது பற்றி எனக்குள் இருந்த இயலுமை கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போய்விட்டது என்றே சொல்லுவேன். ஒரு காலத்தில் கவிதை எழுதிக்கொண்டிருந்த நான்கூடத் தீண்டாமையில் இருந்து மீண்டு வந்துவிட்டேன் என்று புழகாங்கிதமடைந்ததுண்டு. ஆனால் உண்மையில் தீண்டாமையை முற்றாக ஒழிக்க முடிவதில்லைத்தானே. வெறும் வார்த்தைகள்தானே. அதுபோலத்தான் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மோசமான கவிதை எழுதும் கவிஞனையும் […]