இசை என்றவுடன் நம்முடைய கர்னாடக இசை, அல்லது நாட்டுப்புற இசை மற்றும் திரை இசை நம் மனதில் தோன்றி மறைவது இயற்கை. இசையை நாம் விடியோ விளையாட்டுடனோ, விளம்பரத்துடனோ சேர்ந்து சிந்திப்பதில்லை. ஆனால், உலகில் விடியோ விளையாட்டுக்கள், சினிமா, பாரம்பரிய இசையை விட அதிகமாகப் பயன்படுத்துகிறது. $1 –க்கு நாம் வாங்கும் சைனா பொமையும் வாசிப்பது பீத்தோவன். ஸிந்தஸைசர்கள், சினிமா இசையில் 40 ஆண்டுகளாக பயன்படுத்தப் படுகிறது. AWS கடந்த 25 ஆண்டுகளாக பல இசையமைப்பாளர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த […]
ராஜன் டிமானிடைசேஷன் என்னும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைச் சென்ற வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி பாரதப் பிரதமர் மோதி திடீரென்று அறிவித்தார். இந்தியாவையே கலக்கிய, உலகத்தையே அசரச் செய்த அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு வருடம் முடிந்து விட்டது. பிரதமர் மோதி இதைத் தன் கட்சிக்காகவோ அல்லது தன் சுயநலனுக்காகவோ எடுக்கவில்லை. முழுக்க முழுக்க இந்தியாவின் ஒட்டுமொத்த நலன் கருதியும் நாட்டில் நிலவி வரும் கள்ளப் பொருளாதாரம், கள்ளப் பணம், கறுப்புப் பணம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் […]
என்னுடைய இளவயதில் சினிமாவில் சேர்ந்து பெரிய இயக்குனராக வரவேண்டும் என்கிற கனவு இருந்தது. இன்றைக்கும் பல தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அந்தக் கனவு இருக்கிறது என்றாலும் பெரும்பாலோர் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளவில்லை. பிறநாட்டுத் திரைப்படங்களைக் காப்பியடித்து எடுப்பதில் இருக்கிற ஆர்வம் சொந்தக் கற்பனையில் இல்லை என்பதுதான் நிதர்சனம். காரணம் புத்தக வாசிப்பும், உலக நடப்பில் ஆர்வமின்மையும், சொந்தக் கலாச்சார மேன்மை குறித்த அறிவும் இல்லாமல் போனதுதான் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்ராயம். தமிழக கலாச்சாரத்தை, அதன் இயல்பு […]
பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு தலைப்பாகை கட்டி தாடி வைத்திருக்கும் இந்திய சீக்கியர்களுக்கும், இரானியர்களுக்கும், ஆப்கானிகளுக்கும், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் வித்தியாசம் தெரியாது. தலைப்பாகை கட்டி தாடி வளர்த்தவனெல்லாம் இஸ்லாமியத் தீவிரவாதி என்பது அமெரிக்கப் பொதுபுத்தி. எல்லோரும் அப்படி என்று நான் சொல்லவில்லை. வித்தியாசம் தெரிந்தவர்கள் குறைவு என்பதுதான் நான் சொல்ல வருவது. அமெரிக்க பொதுமக்கள் மட்டும் அப்படியில்லை. காவல்துறை அதிகாரிகள், விமான நிலைய சிப்பந்திகள் எனப் பலருக்கும் இந்தப் பிரச்சினை உண்டு. அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட செப்டம்பர் 11-க்குப் […]
ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ’ஒரேயொரு வார்த்தையை மட்டும் துணைக்கு அழைத்துக்கொண்டுபோகலாம்; ஒரு நிமிடத்திற்குள் அந்தச் சொல்லைத் தெரிவுசெய்து தெரியப்படுத்திவிட வேண்டும்’ என்ற நிபந்தனையோடு _ அந்தரவெளியிலிருந்த தீவு ஒன்றிற்கான இலவசப் பயணச்சீட்டு் ஒன்று அலைபேசிவழியே நீட்டப்பட்டது. எவரிடமும் கேட்கவில்லை; எந்தப் போட்டியிலும் கலந்துகொள்ளவுமில்லை. என்று யாரிடம் சொன்னாலும் உனக்கே தெரியாமல் நீ கேட்டிருப்பாய் என்றோ உறக்கத்தில் நீ அந்தப் போட்டியில் கலந்துகொண்டிருப்பாய் என்றோ அத்தனை உறுதியாக அவர்கள் சொல்வதில் உதறலெடுத்துவிடும் சித்தங்கலங்கிவிட்டதோ என்று. கலங்கிக்குழம்பித்தெளிந்துமினுங்கி சொற்கள் சூழ்ந்துகொண்டன: […]