சிட்டுக்குருவிகளால் உன்னை முத்தமிட்டேன்.

This entry is part 25 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

செர்க்கான் எஞின் ஒருவரை ஒருவர் உதடுகளில் முத்தமிட்டுக்கொள்கிறோம் காதலை அடித்து தள்ளாடிக்கொண்டு சுவர்கள் மட்டுமே நம் காமத்திற்கு இடையூறு ஈரமான எழுத்துக்களில் உன் வாய் ஆரம்பிக்கிறது. சிவப்பு பட்டாம் பூச்சி உன் முகத்தில் அமர்கிறது பார் கண்ணே, சிட்டுக்குருவிகள் என் நெஞ்சக்கூட்டில் படபடக்கின்றன உன் கனவுகளின் மெலிந்த இடங்களிலிருந்து சிட்டுக்குருவிகளால் முத்தமிட்டேன். உன் மார்பகங்கள் இரண்டு பூங்கொத்துக்கள் திடீரென என் வாயெனும் வானத்தில் பூக்கின்றன பின் உன் மார்பகங்கள் சிந்தனையிலாழ்ந்த ஆறுகள். என் வாயெனும் கடலில் ஓடுகின்றன […]

பாலஸ்தீன் என்ற நாடோ மொழியோ பண்பாடோ என்றுமே இருந்ததில்லை.

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

                                                                                                          டேவிட் பென் குரியன்   சமீபத்திய வரலாற்றில் பாலஸ்தீன் என்று அழைக்கப் படுவது இன்றைய இஸ்ரேல் ஜோர்டான் பகுதிகளாகும். 1517 முதல் 1917 வரையில் இந்தப் பகுதி ஆட்டமன் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாய் இருந்தது. முதல்  உலகப் போரின் முடிவில் ஆட்டமன் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது. அதன் பின்பு பிறந்த நவீன காலத் துருக்கி ;பாலஸ்தீனத்தை பிரிட்டிஷ் வசம் ஒப்படைத்தது. இது லாசன் ஒப்பந்தம் எனப்படும். 1917-ல் பிரிட்டன் பால்பூர் திட்டம் என்ற ஒன்றை அறிவித்து […]

மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 4 – அக்கா மகாதேவி

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

ஆண்டாளைப் போலவே ஆண்டவனையே தன் கணவனாக காதலனாக தலைவனாக வரித்துக் கொண்டவர் கர்நாடக மண்ணில் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீர சைவ பக்தி இயக்கத்தின் முக்கியமானவரான அக்கா மகாதேவி.     அம்மா, கேள் …நான் அவரை நேசிக்கின்றேன், அவர் இந்த உலகில் உள்ளவர்களில் அவருக்கு மட்டுமே, பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை, ஜாதியும் இல்லை பேதமும் இல்லை. எங்கும் நிறைந்தவர், உருவமற்றவர், மாறாதவர் கற்பனைக்கெட்டாத அழகின் திருவுருவம் அவர்., இந்த உலகில் எல்லாமே அழிந்துவிடும் […]

ஒரு பரிணாமம்

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

  காத்து காத்து கல் மீது உட்கார்ந்தேன். எப்போது வருவாய்? காலம் நீண்டது. சுருண்டது. நெளிந்தது வளைந்தது.. பாம்பை பார்த்தவனுக்கு கயிறு கூட பாம்பு தான். பாம்பையே பார்த்தறியாதவனுக்கு பாம்பை கயிறு என்று கையில் எடுப்பான். நீ எத்தனையோ முறை என்னிடம் பேசியிருக்கிறாய். கண்களை வீசியிருக்கிறாய். அந்த ஒரு பார்வையில் வந்த ஒரு சொல் இப்போது வரை காத்திருப்பு எனும் மலைப்பாம்பாய் என் உடல் சுற்றிக்கொண்டிருக்கிறது. அது முறுக்கினாலும் இன்பம். திருக்கினாலும் இன்பம். நீ விழுங்கும் வரை […]

சிட்னியில் சங்கத் தமிழ் மாநாடு – அக்டோபர் 11 , 12 – 2014

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

சிட்னியில் நடக்கவிருக்கும் சங்கத் தமிழ் மாநாட்டிற்கான விவரம். அன்புடன், அன்பு ஜெயா www.anbujaya.com http://tamilpandal.blogspot.com.au/

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 15

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ்   படங்கள் : 57, 58, 59, 60​   ​இணைக்கப்பட்டுள்ளன.     ​+++++++++++++++​ 4 Attachments

நூல் மதிப்புரை – அழிந்த ஜமீன்களும் – அழியாத கல்வெட்டுக்களும் ஆய்வு நூல்

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

வைகை அனிஷ் நீண்ட நெடிய பாரம்பரிய பண்பாட்டை கொண்டது தமிழ் மரபு. அதை ஆய்வு நோக்கில் பயணிக்கிறது. ~~அழிந்த ஜமீன்களும்-அழியாத கல்வெட்டுக்களும்~~. பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரங்கள், நீர்நிலைகள், நாணயங்கள், செப்பேடுகள், போர்முறைகள், இறந்த ஊர்களின் நினைவைப் போற்றும் நடுகற்கள், அவர்களின் பெயர்களும் பெருமைகளும் பேசுகிறது இந்நூல். திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சார்ந்த ஆய்வை நூலாசிரியர் மேற்கொண்டு பல அறிய செய்திகளையும் ஆதாரங்களையும், கல்வெட்டுக்கள் கொண்ட புகைப்படங்களும் இதில் தெளிவாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார். பொதுவாக […]

சுருதி லயம்

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

    ”நன்னா யோசனை பண்ணி சொல்லும்மா சுருதி. உண்மையிலேயே நோக்கு என்னைப் புடிக்கலையா. நம்மளோட காதலுக்கு ஆயுசு இவ்ளோதானா? என்ன ஆகிப்போச்சின்னு இப்படி கடந்து துடிச்சிண்டிருக்கே. நானும் உனக்குப் புடிச்சா மாதிரி இருக்கணும்னுதான் முயற்சி பண்றேன். ஆனா என்னமோ தெரியல, இந்த மனசு ஒரு நிலைக்கு வரமாட்டீங்குது. எவ்வளவோ கட்டுப்பாடா இருக்கணும்னுதான் நினைக்கிறேன். ஆனா என்னோட தொழில் என்னை அப்படி இருக்க உடமாட்டீங்குதுடி. புரிஞ்சிக்கோம்மா.. இனிமேல் சத்தியமா குடிச்சுட்டு வரமாட்டேன் .. இந்த ஒரு தரம் […]

தமயந்தியம்மாள் இல்லம், 6, பிச்சாடனார் தெரு

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

  தமயந்தியம்மாள் இல்லம் நான்கு தலைமுறையினைப் பார்த்துவிட்டது. இல்லம் என்றால் முழு வீடும் இல்லை, பின்னால் இருக்கும் ஓடு வேய்ந்த சமையல் அறையும், அதை ஒட்டியிருக்கும் தளம் போட்ட பூஜை அறையும் மட்டும். அவை இரண்டும் தான் தியாகராஜனின் தாத்தா காலத்தில் இருந்தன. இப்போதைய சாப்பிடும் அறை அப்போது கூடமாக இருந்தது. தியாகராஜனின் அப்பா தன் காலத்தில் அதனுடன் புது கூடம் ஒன்றை இணைக்க, முன்னது கூடம் என்ற பட்டத்தை இழந்து அறையாகிப் போனது. அந்த அறையில் […]

மும்பைக்கு ஓட்டம்

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

ஆங்கில மூலம் -சலில் சதுர் வேதி -தமிழில் -எஸ்ஸார்சி ராஜு பையன் தான் அந்த மாநகரம் மும்பையுக்கு ஓடிவிடலாம் எனத்திட்டம் போட்டான்.மும்பை எங்கிருக்கிறது அது எத்தனை தூரம் என்பதெல்லாம் அவன் அறிந்திருக்கவில்லை.அவன் தெரிந்து கொண்டிருப்பது எல்லாம் இதுதான்.ஒருவன் தலை எழுத்து மாற்றப்பட வேண்டுமென்றால் அவன் மும்பையிக்குப்போய்விடவேண்டும் என்பது மட்டுமே. ஜைபூர் வழியாகத்தான் மும்பையிக்குப் போகவேண்டும் என்பது தெரியும். அவன் நண்பன் அவனிடம் சொன்னதுதானே. அவன் சகோதரிகள் நான்கு வயது குடியாவும் ஒன்பது வயது கோகியும் அவனுடன் மும்பையிக்கு […]