குணங்குடி மஸ்தான் சாகிபின் கண்ணே ரஹ்மானே….

This entry is part 46 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

பக்கீர் களின் தாயிரா இசைப்பாடல்களில் குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல்களும் இடம் பெறுகிறது. இதில் கண்ணே ரஹ்மானே என முடியும் கண்ணிவகைப்பாடல்களும் இரக்கத் துணிந்து கொண்டேனே மற்றும் ந ாயனே நாயனே என வரும் பாடல்களும் ,நிராமயக் கண்ணிப்பாடல்களும் உள்ளடங்கும். ஏகப்பெருவெளியில் இருட்கடலில் கம்பமற்ற காகம் அதுவானேன் கண்ணே ரஹ்மானே.. ……. ஊனெடுத்த நாள்முதலாய் உபயோகமற்ற நான் கானில் நிலவானேன் கண்ணே ரஹ்மானே… …… வேட்டைப் பெரிதென்றே வெறிநாயைக் கைப்பிடித்துக் காட்டில் புகலாமோ கண்ணே ரஹ்மானே.. ……… […]

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 45

This entry is part 45 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

   இந்த வாரம் स्म (sma) என்ற இறந்தகால தொடர்வினை பற்றித் தெரிந்துகொள்வோம். वर्तमानक्रियापदेन सह ’ स्म ’ इत्येतत् यदा युक्तं भवति तदा भूतकालार्थः दृश्यते।तात्कालिकभूतकालार्थे एतादृशः प्रयोगः विशेषतः क्रियते। (vartamānakriyāpadena saha sma ityetat yadā yuktaṁ bhavati tadā bhūtakālārthaḥ dṛśyate |tātkālikabhūtakālārthe etādṛśaḥ prayogaḥ viśeṣataḥ kriyate |) நிகழ்கால வினைச்சொல்லுடன் ’ स्म ‘ (sma) என்ற சொல் சேரும்போது இறந்தகாலத்தில் நடந்ததை புலப்படுத்துகிறது. குறிப்பாக […]

முனனணியின் பின்னணிகள் – 2 டபிள்யூ. சாமர்செட் மாம் 1930

This entry is part 43 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் 2011 >>> அப்படியாய் இருக்கிறது லோகம். நாம் வீட்டில் இல்லாத சமயம். யாரோ தொலைபேசியில் கூப்பிடுகிறார்கள். ”சார் இருக்காரா?” – ”இல்லையே, வெள்ல போயிருக்கார்…” – ”அடடா, திரும்பி வந்தால் உடன்னே எனக்குப் பேசச்சொல்றீங்களா?” என்னத்த முக்கியமான விஷயம், அநேகமாய் அவருக்குத்தான் அது அதிமுக்கியமானது, நமக்கல்ல, என்று பிற்பாடு தெரியவரும். நம்மைப் பாராட்டி எவனாவது பரிசளித்தாலோ, எவனாவது நமக்கு உபகாரம் செய்தாலோ, அவன் மனசாரச் செய்கிறான் என்பதில்லை… பல்கடித்து பொருமலை மறைத்து பொறுமை […]

பஞ்சதந்திரம் தொடர் 6 – தந்திலன் என்ற வியாபாரி

This entry is part 42 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

தந்திலன் என்ற வியாபாரி   மண்ணுலகில் இருக்கும் வர்த்தமானம் என்ற நகரத்தில் தந்திலன் என்ற வியாபாரி ஒருவன் வசித்து வந்தான் அவனே எல்லா ஊர்களுக்கும் அதிகாரி. நகர அலுவல்களையும், ராஜ்ய காரியங்களையும் அவன் பார்த்து வந்த காலத்தில் எல்லா மக்களும் திருப்தியோடிருந்தனர். அதிகமாகச் சொல்வானேன்? அவனைப் போல் கெட்டிக்காரனை யாரும் கேட்டதுமில்லை, பார்த்ததுமில்லை. விவேகம் நிறைந்த ஒரு பழமொழி கூறுவதுபோல்:   அரசனுக்கு நன்மை செய்பவன் மக்களின் வெறுப்பைப் பெறுகிறான்; மக்களுக்கு நன்மை செய்பவனை அரசன் கைவிடுகிறான். […]

மரத்துப்போன விசும்பல்கள்

This entry is part 41 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

காட்டிலிருந்து வெட்டிக்கொண்டுவரப்பட்ட மரம் காத்துக்கொண்டிருந்தது தன் கதை தன் மேலேயே அவனால் எழுதப்படும் என்று. வெட்டுப்படுதலும் ,பின் துளிர்த்தலும், மழை வேண்டிக்காத்திருப்பதும் வேண்டாத இலைகளைக்களைவதும் அழையா விருந்தாளிகளைத்தாங்கி நிற்பதும், அண்டி வரும் எவருக்கும், யாரெனத்தெரியாமல் நிழல் தருவதுமான மரத்தின் நினைவுகள் மறக்கடிக்கப்பட்டு எழுதுபவனின் அவமானங்களும் மகிழ்வும்,சோகமும் அப்பிக்கொண்டன எழுத்தாக அதன் மேல். மரமும் அதைக்கொஞ்சம் வாசிக்க முயன்று பின் தன்னைத்தானே தேற்றிக்கொண்டது ஏதோ ஒரு வகையில் அவை தன் கதையை ஒத்திருப்பதாக.

நேரம்

This entry is part 40 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

எனக்கு நேரம் சரியில்லை எனக்கணித்த ஜோதிடகளுக்கு நான் நன்றியே சொல்வேன் நேரம் சரியில்லை எனும்பொழுதெல்லாம் நான் கடவுளாகிவிடுகிறேன் ரொம்ப நல்லநேரம் எனும்பொழுதெல்லாம் நான் இயந்திரமாகிவிடுகிறேன் எது நல்லநேரம் என்று குழப்பமாய் உள்ளது கடவுளாய் இருப்பதைவிட இயந்திரமாய் இருப்பதையே மனித மனம் விரும்புவதாலோ. =முத்துசுரேஷ் குமார்

ஜென் ஒரு புரிதல் பகுதி 8

This entry is part 39 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

ஒரு காலத்தில் இலக்கிய உலகில் ‘உ’ மட்டுமே முக்கியமாயிருந்தது. உருவம்-உள்ளடக்கம். ஆனால் இப்போது ‘ஊ’ தான் முக்கியமானது. ஊடகம். அதிலும் சினிமா என்னும் ஊடகம் எல்லோரது கவனத்தையும் தேவையைக் காட்டிலும் பன்மடங்கு ஈர்க்கிறது. அப்படி சினிமா பற்றி பேச எல்லோருக்குமே ஒரு காரணம் இருக்கிறது. எழுத்து அல்லது அச்சு ஊடகத்தின் ஒப்பற்ற தனிச்சிறப்புகளை நன்கறிந்த எழுத்தாளர்களுக்கே நல்ல சினிமாவைக் காப்பாற்ற எனவும் வணிக சினிமாவை விமர்சிக்க எனவும் சினிமா மீது கவனம் மிகுந்து விட்டது. ஏனையோர் பற்றிக் […]

நிலாக்காதலன்

This entry is part 38 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

நிலாக்காதலனே நீயும் என்போல் உன் காதலியாம் பூமியை சுற்றி சுற்றி வருகிறாய் அவளை எண்ணி எண்ணி இளைக்கிறாய் அவளோ என் காதலி போன்று பணக்கார சூ¡¢யனை விரும்பி அவன்பின் வருடக்கனக்காய் சுற்றுகிறாள் மனம் தளர்ந்துவிடதே என்னைப்போல் முதிர்கன்னியானயுடன் அவர்களுக்கு நம்மை விட்டால் யார் இருக்கிறார்கள் பா. திருசெந்தில் நாதன்

இயற்கை

This entry is part 37 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

விளக்குகளிளால் மட்டுமே வெளிச்சம் பெரும் குடிசையில் நிலவு மட்டுமே நீண்ட ஒளியால் சமத்துவம் பேசிவிட்டு போகிறது மாடிவீட்டை கடந்து வரும் என் கால்களிலிருந்து என் கண்களுக்கு அ. இராஜ்திலக்