எஸ்.சங்கரநாராயணன் அத்தனை பெரிய கழுகை அவள், சுசிலா பார்த்தது இல்லை. நல்லா ஆள் உயரம் இருந்தது அது. நகவெட்டி வைத்து வெட்டி யெறிய வேண்டும் போல அத்தனை பெரிய நீண்ட உட்சுருண்ட, கண்ணாடித் துண்டு போன்ற பளபள நகங்கள். ஒரு மாதிரி கருப்பும் சாம்பலுமான நிறம். சற்று முதிர்வான சிறகுகள் பழுப்பு தந்திருக்கக் கூடும். ஒடுங்கிய தலைக்குக் கீழ் ஜாடி போல பருமன். அதன் அலகு தனி எடுப்பாய் நீட்டி முன்பக்கம் வளைந்திருந்தது. மூக்கு நுனியே நகம் […]
பின்னூட்டங்கள்