மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. நீண்ட காலத்துக்கு முன்பு நான் நினைத்த பாடல் மீண்டும் என் மனதுக்குள் வந்தது ! எழுத வேண்டினேன் அதனை ! எங்கு நீ திரிந்தாய் ? எந்தப் புயல் தூக்கிச் சென்றது ? எங்கிருந்து ஈர்த்தாய் எல்லா வற்றையும் இழந்து ஏகிச் சென்ற ஒரு பூவின் நறுமணத்தை ? இப்போது நம்பிக்கை இழந்து விட்ட எந்த இனிய கானத்தை […]
எஸ். சிவகுமார் “தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு; இன்னிக்காவது புது ரூபா நோட்டு வாங்கிண்டு வாடா, மறந்துடாதே ! “ எனப் பூஜை அறையிலிருந்தே குரல் கொடுத்தார் அனந்தகிருஷ்ணன். வேலைக்குக் கிளம்பும்போது அப்பா இப்படி நினைவுபடுத்தக் கத்தியது வேணுவுக்கு எரிச்சலாயிருந்தது; “ம்… நான் வரேன்” என்றுக் கோபமாகக் கிளம்பினான். ஒவ்வொரு வருடமும் தீபாவளி சமயத்தில் அவருக்குப் புது ரூபாய் நோட்டு வேண்டும். வங்கிக்குச் சென்று அவருடைய நண்பர் ராகவனிடம் கேட்டுப் புது ரூபாய் நோட்டு ஒரு […]
கடினமான காரியங்களுள் ஒன்று படிப்பபது. இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே பலரும் விரும்புகிறார்கள். முற்றிலும் தப்பித்துக்கொள்ள முடியாதபடி நவீன மனிதனின் வாழ்க்கை அமைந்துவிட்டது.. எனவே சிலவற்றைப் படித்தும் வேறு சிலவற்றைப் படிக்காமலும் விட மனிதன் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் எழுதுகிறவர்களுக்குப் பெரிய நஷ்டம். நாவல் படிக்கிறவர்கள் கவிதை படிப்பதை விட்டு விடுகிறார்கள். கவிதை படிபவர்கள் நாவல் படிப்பதாகத் தெரியவில்லை. பலர் பழைய இலக்கியங்களை முற்றிலும் தவிர்த்து விடுகிறார்கள். தமிழாசிரியர்கள் நவீன இலக்கியங்களைப் படிப்பதில்லை. படிப்பவர்கள் அதைக் கேலி […]
சிவகுமார். ”சோ” வென்று கேலியுடனும் குதூகலத்துடனும், நடப்பில் உள்ள ஆட்சி பற்றிய எள்ளலும், நையாண்டியும் சேர்த்துக் கொடுத்த, சோவின் “முகமது-பின்-துக்ளக்” ஒரு விதம். தி மெட்ராஸ் ப்ளேயர்ஸ் வடிவமைத்திருந்த “துக்ளக்” இன்னொரு விதம். இரண்டுமே 14ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்தவனின் சாகசக் கதையேதான். இவன் 26 ஆண்டுகள் ஆட்சியில் அம்ர்ந்திருந்தான். மேலே சொன்ன இரண்டாவது படைப்பின் முடிவில், அந்த மன்னன் மீது ஒரு பரிதாபமே உண்டாகின்றது. பத்ம பூஷண் (நாடகாசிரியர்) கிரீஷ் கார்னாடை நாம் நிறைய தமிழ்படங்களில் […]
ராஜகஹத்தில் மூங்கில் வனத்தில் பிட்சுணிகளும் அனைத்து பிட்சுகளும் குழுமியிருந்தனர். ஆனந்தனும் புத்தரும் இரண்டாம் வரிசையில் பிட்சுக்களுடன் அமர்ந்திருந்தனர். மூத்த பிட்சு ஒருவர் எழுந்தார் “இன்று தீட்சை பெறவிருக்கும் ராகுலன் சங்கத்தின் முன் சபதமேற்பார்” என்று அறிவித்தார். காவி உடை தரித்த ராகுலன் அனைவரின் முன் வந்து இரு கைகளையும் கூப்பி வணங்கிய நிலையில் “புத்தம் சரணம் கச்சாமி தர்மம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி” என்று மூன்று முறை மொழிந்தார். பெரியவர் “ராகுலரே.தங்களுக்குத் தாம் ஏற்க […]
1 யூசுப் ராவுத்தர் ரஜித் 40 ஆண்டுகளாய் அடைகாத்த ஆசை இதோ ஜூலை 12ல் நிறைவேறப் போகிறது. முகம்மது நபி (ஸல்) பிறந்த மண், குர்ஆன் அருளப்பட்ட மண், அல்லாஹ்வால் அடையாளம் காட்டப்பட்டு முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்டு, நபி இப்ராஹிம் (அலை) அவர்களால் மறுநிர்மானம் செய்யப்பட்டு பிறகு முகமது நபி (ஹல்) அவர்களால் புனிதமாக்கப்பட்டு, ஆண்டாண்டு லட்சோப லட்சம் ஹஜ் பயணிகள் தரிசிக்கும் வகையில் பொது உடமை யாக்கப்பட்ட அந்த கஃபா இருக்கும் […]
சிறுகதை (இஸ்லாமிய சமுகத்தின் பின்னணியில்) யூசுப் ராவுத்தர் ரஜித் (சதக்கா என்றால் தான தர்மம். அல்லாஹ்வின் பெயரால் வழங்கப்படும் இந்த தான தர்மங்கள் நெருப்பை நீர் அணைப்பதுபோல் நம் பாவங்களை அழித்துவிடும் வல்லமை பெற்றது – நபிகள் நாயகம் (ஸல்)) மூன்றாம் மாடியிரலிருந்து தன் கால்குலேட்டரைத் தவறவிட்டுவிட்டு அப்படியே நின்றார் கதிஜா. கதிஜா ஒரு ஓ நிலை மாணவி. தமிழாசிரியர் கிரிஜா பார்த்துக் கொண்டே இருந்துவிட்டுக் கேட்டார். ‘உன் கால்குலேட்டர் உடைந்துவிட்டது. யார் தலையிலாவது விழுந்து உடைந்திருந்தால் […]
“தாமரை மணாளன்” எனும் புனைபெயரில் எழுதிக்கொண்டிருந்த ஓர் அருமையான எழுத்தாளர் இருந்தார். அவரைப் பற்றி இந்த்த தலைமுறையினரில் எத்தனை பேருக்க்குத் தெரியும்? தெரியவில்லை. (படிப்பது குறைந்துகொண்டு வருவதாய்ச் சொல்லப்படும் இந்நாளில் தற்போதைய எழுத்தாளர்களைப் பற்றியே அநேகருக்குத் தெரியவில்லை என்கிறார்கள். அப்படி இருக்க, சிலஆண்டுகளுக்கு முன் காலமாகிவிட்ட தாமரை மணாளனைப் பற்றி அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறதாம்?) அற்புதமான அந்த எழுத்தாளர் பற்றி மற்ற எழுத்தாளர்களே பேசாத நிலையில் பிறரைப் பற்றி என்ன சொல்ல! 1968 இன் இறுதி […]
டாக்டர் ஜி.ஜான்சன் இரவு பத்து மணி .தொலைப்பேசி ஒலித்தது. ” டாக்டர்! நான் அமுதா பேசுகிறேன்.” ” சொல் அமுதா.” ‘ ” டாக்டர் , ஒரு எமெர்ஜென்சி .உடன் கேசுவல்ட்டி வாருங்கள். ” குரலில் பதட்டம் தொனித்தது . முன்பே தயார் நிலையில் இருந்த நான் மருத்துவமனை நோக்கி விரைந்தேன். அது சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் ஸ்வீடிஷ் மிஷன் மருத்துவமனை.அங்கு அனைத்து ஊழியர்களின் இல்லங்களும் வளாகத்தினுள்ளேயே இருந்தன. பங்களா வீடுகளில் டாக்டர்கள் வசித்தனர். நடந்து செல்லும் […]
டாக்டர் ஜி.ஜான்சன் நமது கல்லீரல் ( LIVER ) இரத்தத்தை சுத்திகரிக்கும் ஒரு சல்லடை போன்று செயல்படுகிறது. சிறுகுடலிலிருந்து உரியப்படும் உணவின் சத்துகள் இரத்தம் வழியாக கல்லீரலுக்குள் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கல்லீரல் அவற்றைப் பிரித்து உடலுக்குத் தேவையான இரசாயனப் பொருள்களாக மாற்றுகிறது.இதுபோன்றே நஞ்சுகளையும் உடைத்து அவற்றை கழிவுப் பொருட்களாக்கி சிறுநீரகம் வழியாக வெளியேற்றவும் உதவுகிறது. உடலின் இரத்தம் கல்லீரல் வழியாகக் கட்டாயம் செல்ல வேண்டியுள்ளதால் அதில் பயணம் செய்யும் புற்றுநோய் செல்கள் மிக எளிதாக அங்கு […]