மூலம் : கலீல் ஜிப்ரான் தமிழாக்கம் : புதுவை ஞானம் பின்னர் செல்மா தனது தலையை உயர்த்தி சுன்னின் மலைமுகடு வானத்தை வருடும் தொடு வானை நோக்கிச் சொன்னாள் ,” நேற்று நீங்கள் எனக்கு ஒரு சகோதரனைப் போல இருந்தீர்கள் யாருடன் நான் வளர்ந்தேனோ, யாருடன் நான் வாழ்ந்தேனோ , யார் அருகில் அமைதியாக எனது தந்தையாரின் பராமரிப்பில் இருந்தேனோ அந்த சகோதரனைப்போல் இருந்தீர்கள் . இப்போது விசித்திரமானதும் சகோதர பாசத்தைவிட இனிமையானதுமான ஒன்றினை உணருகிறேன். ஒரு […]
புதுவை. வெகு தூரத்தில் ….கார்த்தி, லாவண்யா ….கல்யாணி இவர்களின் பிரச்சனைப் புயல் மையம் கொண்டதை அறியாத கௌரி, வசந்தியின் கைகளை ஆதரவாகப் பற்றியபடி கரையைக் கடந்து அங்கு நின்றிருந்த ஆட்டோவில் ஏறியபடியே சுரத்தே இல்லாதா குரலில் ‘விருகம்பாக்கம் போப்பா’…என்றவள் ம்ம்ம்ம்…வசந்தி நீயும் .ஏறிக்கோ ….முதல்ல எங்க வீட்டுக்குப் போகலாம்….என்றதும் வசந்தியும் ஏறிக்கொள்ள ,ஆட்டோ விர்ரென்று கிளம்பி கௌரியின் வீடு நோக்கி வேகம் பிடித்தது . தாங்க்ஸ் மேடம்…..வசந்தியின் குரலில் நன்றியின் எதிரொலி. ம்ம்ம்…..பரவால்ல…..இப்ப ஒண்ணும் பேசாதே என்று […]
ஹாங்காங் வெளியில் ஆட்கள் நடக்கும் சத்தம் கேட்ட வண்ணம், மெங் சியாங் யு நி;ன்றிருந்தாள். அவர்கள் பேரரசரின் ஆட்கள் என்பது அவள் அறிந்ததே. பல மாதங்களாக சீனப் பெருஞ்சுவர் கட்டத் தேவையான ஆட்களைப் பல இடங்களிலிருந்தும் அழைத்துச் செல்லவே அவர்கள் அப்படி அலைந்து கொண்டு இருந்தார்கள். ஒவ்வொரு வீட்டுக் கதவையும் அவர்கள் தட்டாமல் செல்லவில்லை. டொங்! டொங்! கதவு இடிபடும் சத்தம் கேட்கும் போதெல்லாம், மெங் பெரிதும் கவலைப்படுவாள். எந்தக் குடும்பத்தினர் அவர்களிடம் அகப்பட்டார்களோ என்று எண்ணிக் […]
-தாரமங்கலம் வளவன் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம். சாலை விரிவு படுத்துவதற்கான காண்டிராக்ட் யாருக்கு என்ற முடிவு அறிவிக்கப்படுவதாக இருந்தது. காண்டிராக்டர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். மருதமுத்தும் அதில் ஒருவர். முகத்தை அடிக்கடி தோளில் இருந்த துண்டை எடுத்து துடைத்து கொண்டார். ஒவ்வொரு காண்டிராக்டரும் தன்னால் எவ்வளவு தொகையில் அந்த வேலையை செய்து முடிக்க முடியும் என்று டெண்டர் கூப்பிட்டிருந்த தொகை ஒவ்வொன்றாகப் படிக்கப் பட்டது. கையிலிருந்த ஒரு காகிதத்தில் மற்றவர்களின் தொகைகளை குறித்துக் கொண்டிருந்தார் மருதமுத்து. இப்படி அவர் […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 18. உலகின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சைசெய்த ஏழை… என்னங்க தலையப் பிடிச்சுக்கிட்டே வர்ரீங்க…..என்னங்க பேசாம ஒக்காந்துட்டீங்க… என்ன குழப்பமாப் பாக்குறீங்க…. குழம்பாதீங்க… போனவாரம் கேட்ட கேள்விக்கு உரிய பதில நானே சொல்லிர்ரேன்… அவருதாங்க ஹமில்டன் நாகி. ஆமாங்க அவருதான் உலகின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை […]
கப்பல் சலசலத்து மிதந்து கொண்டிருந்தது. உப்புக்கரித்தக் காற்று அவன் முகத்தில் அடித்துப்போனது.முகம் கோணலாகியிருந்த்து. “அந்தத் தீவோட பேர் என்ன…” “பேரே இல்லை…” “பேரே இல்லையா…” “பேரே இல்லாமல் இது மாதிரி நிறைய இருக்கு” “மனுஷங்களாவது இருப்பாங்களா” “ஆதிவாசிகளைப் பத்திக் கேக்கறையா… வாய்ப்பிருக்கலாம்” “துறவிகள்…” “சாமியார்க வந்து சேர்ர எடம்கற எண்ணத்திலெ கேக்கறையா.” “எங்காச்சும் போய் சேரணும்…” விக்னேஷிற்கு விழிப்பு வந்தது. அவன் கண்முன் கிள்ளான் பகுதி என்று காட்டுகிற விதமாய் பெயர் பலகை இருந்தது. கனவில் இதென்ன […]
ஒரு படப்பிடிப்பு அரங்கம். நாயகன் சண்டையிடும் காட்சி. படப்பிடிப்புக் குழுவினர் தயாராய் இருக்கின்றனர். காட்சி சற்றே ஆபத்தானது என்பதால் கதாநாயகனுக்கு பதிலாக ஸ்டண்ட் நடிகர் அழைக்கப்பட்டார். இயக்குநர் காட்சியைப் பற்றி ஸ்டண்ட் கலைஞர்களின் ஒருங்கிணைப்பாளரிடம் விவரித்தார். “நாயகன் வில்லன் நடிகருடன் சண்டையிட்டுக் கொண்டே பதினைந்தடி உயரத்திலிருந்து கீழே விழ வேண்டும், அதுவும் பின் பக்கமாக” என்று தன் திட்டத்தைச் சொன்னார் இயக்குநர். “இதை எளிதில் செய்துவிடுவார் என் ஆள்” என்றார் ஒருங்கிணைப்பாளர் வேகமாக. “காட்சிக்குத் தயாராகச் சொல்லுங்கள்” […]