ராஜேந்திரன் மறுபடியும் காணாமற் போய் விட்டான். அவன் அடைக்கப் பட்டிருந்த காப்பகத்தில் ஏதோ கவனக் குறைவு. இதைக் கேள்விப்பட்ட காரணமோ என்னவோ குறித்த நேரத்தில் அன்றைய முக்கியமான வேலைகள் முடிக்க முடியாமற் தள்ளிப் போயின. இது அவள் இயல்பே இல்லை. இன்னொருவரின் செயலோ செயலின்மையோ தன்னுள் எதிரொலிப்பதை அவள் அனுமதிப்பதே இல்லை. மதியத்துக்குப் பின் எல்லா வேலைகளையும் ரத்து செய்யச் சொன்ன போது உதவியாளர் “உடம்பு சரியில்லையா?” என்ற போது மட்டும் இயல்பாக அவளை முறைக்க இயன்றது. […]
மகாத்மா காந்தியடிகள் உலகிற்கு அறிவித்த அஹிம்ஸைத் தத்துவம் இந்து மரபுகளுக்கே அன்னியமானது. ஜைன மதத்தில் வேண்டுமென்றால் ஓரளவு பொருத்தமான போதனைகள் கிடைக்கலாம். ஆனால் ஒரு இஸ்லாமியர் அதுவும் ஆஃகானிஸ்தானைச் சேர்ந்த ஆழ்ந்த மதப் பற்றுள்ள 19ம் நூற்றாண்டில் பிறந்த ஒருவர் அஹிம்ஸை வழி முறையைப் பின்பற்றியது மிகவும் அதிசயம். காந்தியடிகளின் அஹிம்ஸை முறையை ஒரு ஏகலைவன் போல ஏற்று ஆஃகானிஸ்தானில் ஒரு அஹிம்ஸைப் போராட்டத்தை நடத்தியவர் கான். 1985 நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப் பட்டார் (கிடைக்கவில்லை). 1987ல் […]
எனக்கு இப்போது நினைத்துப் பார்க்க ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து….” என்று எதற்கெடுத்தாலும் கோஷமிட்டு தன் தாய் நாட்டுப் பற்றையும் தமிழ் பற்றையும், தம் பெருமையையும் இரைச்சலிட்டுச் சொல்லும் அந்த கோஷத்திலேயே எல்லாம் முடிந்து விட்டதாக நினைக்கும் ஒரு இயக்கம் முளை விட்டு இன்று ஒரு பலத்த சக்தியாக விளங்கும் நிலையில் தமிழும் தமிழ் நாடும் எந்த நிலையில் இருக்கிறது எனபது நமக்குத் தெரியும். ஒரு கலாசார வறுமை. சிந்தனை வறுமை. இதை […]
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாதீர் வையக்கு அணி இரு செய்திகளைப் பதிவு செய்யவே இத்தொடர் தொடங்கப்பட்டது வெறும் செய்திகளை மட்டும் கூறுதல் அந்தச் செயல்பாடுகளின் வலிமை தெரியாமல் போகும். அரசு எடுக்கும் எந்தத் திட்டமும் மக்களுக்காகத்தான்.. அதாவது நமக்காக. செலவழிக்கப்படும் நிதியும் நம்முடையது. எனவே முழுமையான பலன் கிடைக்க நம்முடைய பொறுப்புகளையும் எழுத வேண்டி வந்தது. சில எடுத்துக் காட்டுகளுடன் விளக்கம் தரப்பட்டது. இப்பொழுது தொடரைத் தொடரலாம். குழந்தைகள் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களைப் […]
’வேதனை’ பற்றி பகரும்படி வினவினாளே பேதையொருத்தி! உம் புரிதல்கள் அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்டுள்ள அந்த ஓட்டின் உடைவே உம் வேதனை. அக்கனியின் கல்லும் உடையும் பொருட்டு, அதன் இருதயம், கனலோனின் கிரணமதைத் தாங்குதல்போலே, நீவிரும் உம் வேதனையை அறியத்தான் வேண்டும். உம் வாழ்க்கையதின் அன்றாட அற்புதக கணங்களினூடே, உம் இருதயமதை உம்மால் கிடத்த முடியுமானால், உம்முடைய மகிழ்ச்சியைக் காட்டிலும் உம்முடைய வேதனைகள் குறைந்த அதிசயோத்தியாகக் காட்சியளிக்காது; உம்முடைய வயல்வெளிகளின்மீது கடந்து போகும் அந்தப் பருவக்காலங்களை ஒப்புக்கொள்ளுமாப்போலே, எஞ்ஞான்றும் […]
ஹிந்து ஆலயங்களில் பிராமணர் அல்லாதாரை அர்ச்சகராக நியமிக்கும் நடைமுறை செயல்பட முடியாமல் உள்ளதாகப் பலருக்குப் பெரிய குறை இருந்து வருகிறது. இதில் வேடிக்கை, இப்படிக் குறைப்பட்டுக் கொள்பவர் களில் மிகப் பெரும்பான்மையினர் ஹிந்து கோயில்களைப்பற்றி அக்கறை ஏதும் இல்லாதவர்கள். இன்னும் சொல்லப் போனால் ஏதேனும் ஆதாயம் கிட்டுமா என்று தேடுவதற்காகவே ஹிந்து ஆலயங்களுக்கு உள்ளே நுழைபவர்கள். இன்னுமொரு வேடிக்கை இதுபற்றி ஆழமான புரிதல் இன்றியும் தற்போதைய நிலவரம் என்ன என்பதையும் அறியாமல் சிலர் இது பற்றிச் […]
நண்பர்களே, மாற்று திரைப்பட வளர்ச்சிக்காகவும், மாற்று திரைப்பட கலைஞர்களை கவுரவப்படுத்தவும் தமிழ் ஸ்டுடியோவால் உருவாக்கப்பட்ட “லெனின் விருது” இந்த ஆண்டு ஆவணப்பட / திரைப்பட இயக்குனர் அம்ஷன் குமார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம். திரையரங்கில் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில்.. அம்ஷன் குமார் அவர்களுக்கு லெனின் விருது வழங்கப்பட்டதை முன்னிட்டு அவரது படைப்புகள் தமிழ்நாடு முழுவதும் தமிழ் ஸ்டுடியோவால் திரையிடப்படுகிறது. சென்னை, […]
ஆய்வாளர் நாமக்கல் நந்தர் (எ) தங்கம் விஸ்வநாதன் எழுதிய அதிகார நந்தீசர் என்னும் வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழா. நாள்: ஞாயிற்றுக் கிழமை, ஆகஸ்டு 12, 2012. நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை. (தேநீர்: காலை 9:45) இடம்: ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், உயர்நீதி மன்றம் எதிரில், பாரி முனை, சென்னை. நிகழ்ச்சி நிரல் கடவுள் வாழ்த்து: செல்வி க. காயத்திரி, ஜெயா டி.வி. புகழ் லிட்டில் மாஸ்டர். குத்துவிளக்கு […]