கவிதைகள்

This entry is part 2 of 3 in the series 11 ஆகஸ்ட் 2024

ரவி அல்லது கரைதலின் மீட்சி சற்றேனும் பிடித்து நிறுத்திட முடியாத இம்மனம்தான் சிலரை கோவிக்கிறது. சிலரை வெறுக்கிறது. சிலரை துதிக்கிறது தலைக்கேறிய கௌரவ தொனியில். அந்தியின் மோனத்தில் யாவும் கூடடைய. இதன் தொண தொணப்புதான் நின்றபடியாக இல்லை மேவும் கலைப்பில். சொல் கேளா அதனுடன் இனியொரு பொழுதும் துயருறுவதாக இல்லை குடை பிடிப்பதான அக்கரை அழைப்பில். சிறுமையின் செருப்பெனக் கொண்டாலும் கருணையினால் கரைவதைத் தவிர யாதொரு சுகமுமில்லை முன்கணம் வரை. *** புரை தீர்க்காதப் புண். அன்று […]

அங்காடி வண்டி

This entry is part 1 of 3 in the series 11 ஆகஸ்ட் 2024

அங்காடி வண்டியை வீட்டுக்குத் தள்ளிவந்து வீதியில் விட்டேன் வெயிலில் மழையில் பனியில் கிடந்தது துரு தின்றது குப்பைகள் கொண்டது காலவீச்சில் அதன் கால்கள் முறிந்தது வண்டிக்கும் வலியுண்டோ? என்னால்தான் இக்கதி தப்புதான் வண்டியே மன்னிப்பாயா? வண்டி சொன்னது தொழுது வாழ்ந்தேன் இன்று தொழுநோய் கொண்டேன் சித்திரமாயிருந்தேன் சிதைத்தாய் என் சாபம் தொடரும் தர்மம் தண்டிக்கும் நீ தீயில் முகம் கழுவும் தேதிக்குக் காத்திரு அமீதாம்மாள்

கரை திரும்புமா காகம் ?…

This entry is part 3 of 3 in the series 11 ஆகஸ்ட் 2024

ச.சிவபிரகாஷ் ஏழரை சனி வந்து, எழுச்சி மிக காட்டவே, உக்கிரம் தணிக்க, உத்தேசமாக பரிகாரம் சொன்னார்., ஊரறிந்த சோதிடர். சனிக்கிழமைகளில், காகத்துக்கு… எள்ளு சாதமும், சதா…நாட்களில், சாதமும் வைக்க… சுயநல சூழ்ச்சியறிந்து காகம் – அதை மன்றாடியும், மனதிறங்கி, வரவே இல்லை. கரிசனம் காட்டுமா? கடவுளான கிரகமும், தொண்டை கமறிய, காரியும். வெட்டப்பட்ட மரத்தில் – முன் கூடுகட்டி வாழ்ந்த, காகத்தையும், கடைசி வரை, காணவே இல்லை. காய வைத்த, வத்தல்,வடாமை வாயில் கவ்வ, வட்டமடித்து வந்த […]