ஒரு கதை ஒரு கருத்து – பாரதியாரின் ஸ்வர்ண குமாரி

This entry is part 4 of 15 in the series 13 டிசம்பர் 2020

  அழகியசிங்கர்             டிசம்பர் மாதம் 11ஆம் தேதி பாரதியாரின் பிறந்தநாள்.  இந்தப் பிறந்தநாளை ஒட்டி அவர் கதை ஒன்றை எடுத்துப் படிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது.  ஸ்வர்ண குமாரி என்ற கதையை எடுத்துப் படித்தேன்.             அவர் 42 கதைகள் எழுதி உள்ளார்.  அவர் கதைகள் படிப்பதற்கு எப்படி இருக்கிறது.  முதலில்  எளிமையாகச் சரளமாகப் படிக்க முடிகிறது.               பாரதி இந்தக் கதையை எப்படி ஆரம்பிக்கிறாரென்று பார்ப்போம்.               பெங்காளம் என்று கூறப்படும் வங்க தேசத்திலே, வாந்த்பூர்  (சாந்திர புரம்) என்ற கிராமத்தில் மனோரஞ்சன் பானர்ஜி என்ற ஒரு பிராமண வாலிபன் உண்டு. […]

ஆல்- இன் – வொன் அலமேலு

This entry is part 3 of 15 in the series 13 டிசம்பர் 2020

  (14.8.1987 குங்குமம் இதழில் வந்தது. “அம்மாவின் சொத்து” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.)       சட்டென்று வந்த விழிப்பில் அலமேலு வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து, மெதுவாய் நகர்ந்து சுவர்க் கெடியாரத்தில் நேரம் பார்த்தாள். மணி ஐந்து என்று அது அறிவிக்க, அவள் பதற்றமாய்ப் படுக்கைக்குத் திரும்பி வந்து கணவனைத் தொட்டு அசைத்து எழுப்ப முற்பட்டாள். கைகால்களை நீட்டி விறைத்துச் சோம்பல் முறித்துப் பெரிய ஓசையுடன் கொட்டாவி விட்ட பிறகும் உடனே எழாமல், “மணி […]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 22 – பாரிமுனை டு பட்ணபாக்கம்

This entry is part 2 of 15 in the series 13 டிசம்பர் 2020

  கதை சென்னையில் நடக்கிறது. அதுவும் பஸ்ஸில். ஊரின் “கலாச்சாரப்படி” காலங்காத்தாலேயே கடையைத் திறந்து வச்சு ஊத்திக் கொடுக்கிறவங்ககிட்டே இருந்து வாங்கிப்”போட்டுக்” கொண்டு வந்துவிட்டவான் என்று குடிமகனைப் பற்றி சக பிரயாணியான பெண் சொல்கிறாள், குடிமகனுக்கும்  அந்தப் பெண்மணிக்கும் இடையே நடக்கும் சம்பாஷணைகளில் கதை பின்னப்படுகிறது. சென்னை பாஷையில் தி. ஜா. ரவுண்டு கட்டி அடிக்கிறார்.  கண்டக்டரிடம் பணத்தைக் கொடுத்து டிக்கட் கேட்கிறான் குடிமகன்.  “இது என்னாய்யா ரூவா நோட்டா? வேற குடு. ஆணியில மாட்டி வச்சிருந்தியா? நடுவில் இம்மாம் பெரிசு ஓட்டை !  வேற குடுய்யா” “என்ன மிஷ்டர் ! நானா ஆணில மாட்டி வச்சிருந்தேன், ஐகோட்டாண்ட டீ குடிச்சேன். அவுருதான் குத்தாரு.” […]

மொழிபெயர்ப்புக் கவிதைகள்

This entry is part 15 of 15 in the series 13 டிசம்பர் 2020

    மூலம்: ஆங்கிலம்  தமிழில் : ட்டி. ஆர். நடராஜன்  இனிமை  பாப் ஹிகாக்  நான் நடக்கையில் ஒரு ஆரஞ்சை உரிப்பது என் வழக்கம். ஃப்ளோரிடாவின் மணத்தை நினைவூட்டும் தோலிகளை என் கால்சட்டைப் பையில் போட்டுக் கொண்டு. சிலநேரங்களில் நாற்சந்தியில் நிற்கும்  காரை நெருங்கி ஜன்னலைத் தட்டுவேன்.  பச்சை விளக்குக்காக ஆவலுடன் காத்திருக்கும்  ஓட்டுனரின் கவனத்தைக் கலைக்கும் விதமாய். பெரும்பாலும் கிடைப்பது  திட்டுகள். மறுதலிப்புகள். உதாசீனப்படுத்துதல்கள் –  என்னை மறுக்கும் கடவுளைப் போல்  –  ஆனால் அன்று நான் என் கையால்  ஜன்னலைச் சுரண்டிய போது   அவள் ஜன்னலைக் கீழே […]

சுவேதா

This entry is part 1 of 15 in the series 13 டிசம்பர் 2020

               ஜனநேசன்                                                                 திருச்சியில் எறிப்படுத்தவன் தான், இரயிலின்  தாலாட்டில் இரண்டாம் வகுப்பு  குளிரூட்டியின் மதமதப்பில்  தூங்கிக் கொண்டிருந்தேன்  . ரயில் நிற்கவும் தூக்கம்  அறுந்தது. படுத்தபடியே  ஜன்னல் திரையை விலக்கினேன் ,எட்டுமணி வெயில் முகத்தைக் கிள்ளிச்   சிரித்தது. காட்பாடி வந்திருந்தது. மின்னலாக எழுந்து முகத்தை துடைத்துக் கொண்டு  ஓடி நடைமேடையில் ஒரு பொட்டலம் இட்டலி வடை வாங்கி  எனது இருக்கைக்கு வந்தேன். எதிரில்  ஐம்பது வயது மதிக்கத் தக்க கனத்த சரீர பெண்மணி சுருதி பிசகாத […]