ப்ரியா வெங்கட் சென்னையைச் சேர்ந்த “வானவில் பண்பாட்டு மையம்” கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வோர் ஆண்டும் பாரதி பிறந்த தினத்தைக் கொண்டாடும் வகையில் சென்னையில் அவர் குடியிருந்த இல்லத்தில் பாரதி விழாவை நடத்தி வருகின்றனர். அவ்வாறே இவ்வாண்டும் டிசம்பர் 9,10,11ம் தேதிகளில் மகாகவி பாரதி விழா ‘தேசபக்திப் பெருவிழா’ என்ற வகையில் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக “பாரதி யார்?” என்ற நாடகத்தை அரங்கேற்றப் போவதாக முன்னரே அறிவித்திருந்தனர். அப்போதிருந்தே அனைவரும் ஆவலுடன் காத்திருக்கத் […]
நாகரத்தினம் கிருஷ்ணா அ. டாக்டர் ஜேகில் (Dr.Jekyill) முதல் தஷ்வந்த் வரை நீதிமன்றத்தில் காவல் துறையினர் முன் நிறுத்தமுயன்ற தஷ்வந்த் என்ற இளைஞன் மீது மாதர் சங்கம் நடத்தியதாகச் செய்தி. தாக்குதல் நடத்திய மனிதர்களின் கோபத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதுபோன்ற தாக்குதல்கள் நியாயமா என்ற கேள்வியும் எழுகிறது. தஷ்வந்த் பிரச்சினைக்கு வருவோம். ஆறுவயது சிறுமியைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிக் கொன்றதற்குத் தண்டிக்கபட வேண்டியவன் என்ற அடிப்படையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறான். அவன் மீதான குண்டர் […]
கோவர்தனா கரும் மை இட்டு கடமையாற்ற சென்றவனே மறைக்காமல் சொல் நடந்தது என்ன? அந்த மறைவுக்குள் அசைவின்றி கிடந்த அந்த இயந்திரத்தின் விசையை அழுத்தியது யார்? வாக்கை விற்று இல்லை இல்லை உன்னை விற்று நீ ஈட்டிய பணமா? பன்னுக்கும் உதவாது மண்ணுக்குள் புதையாது உயிரை உறிஞ்சும் மதமா? அஃறிணையும் பரிகசிக்கும் பெருமையென நீ நினைக்கும் சாதியத்தின் பலமா? பால்குடித்து வளர்ந்த கதை மறந்துவிட்டு பால் பொருத்து மலர்ந்த பேத மொட்டு பரப்பிய மணமா? மேனி முதல் […]
பி. வினாயகம் ஓர் எழுத்தாளரின் அனைத்துக் கதைகளையும் ஒட்டுமொத்தமாக வாசித்து அவரின் எழுத்தாள ஆளுமையைக் கணிக்கும் வழக்கம் பொதுவாக இலக்கியவாதிகள் செய்வது. எழுத்தாளர் யாரென்றே சட்டை பண்ணாமல் ஒவ்வொரு கதையும் தனித்தனியாக வாசித்து நகர்வோர் பலர். ஒரு சிறுகதையை வாசிக்கும்போது எழுத்தாளரின் பிம்பம் நம் மனத்தை ஆக்கிரமிக்கக் கூடாது. அவரின் முந்தைய கதைகளை வாசித்திருந்தால், ஒரு புதுக்கதையை வாசிக்கும்போது நம் சிந்தனையில் அவை இருக்கக்கூடா. எழுத்தாளன் எவ்வளவு பெரிய ஆளுமையாக பலரால் கருதப்பட்டாலும் அவ்வாளுமை நமக்கு தற்போது […]
டாக்டர் ஜி. ஜான்சன் 200. நாடக அரங்கேற்றம் டாக்டர் பார்த் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற்று சுவீடன் திரும்பிவிடுவார். அதன்பின்பு நான் மட்டுமே மருத்துவ வெளிநோயாளிப் பிரிவையும் வார்டுகளையும் கவனித்துக்கொள்ள வேண்டும். எனக்கு அது சிரமமாகத் தெரியவில்லை. காரணம் அவர் இருக்கும்போதே நான்தான் முழுதுமாக வார்டுகளிலிருந்தவர்களைக் கவனித்துக்கொண்டேன். ஒருவேளை அவர் வேண்டுமென்றே முழுப் பொறுப்பை என்னிடம் விட்டுவிட்டாரோ என்றும் எண்ணத் தோன்றியது. அவர் சென்றபின்பு நான் தனியே சமாளிக்க எனக்கு மன தைரியம் வரவேண்டும் என்றும் […]
முருகபூபதி- அவுஸ்திரேலியா ஐந்தாம் தரம் வரையே பள்ளிப்படிப்பைக் கண்டிருந்த தண்டபாணி முருகேசன் என்ற சிறுவன் தமிழகத்தின் கடலூர் வீட்டை விட்டு வெளியேறி, சென்னைவந்து, கம்யூனிஸ்ட் தோழர்களின் அரவணைப்பில் வளர்ந்து, கட்சிப்பிரசுரங்கள் விநியோகிப்பது முதலான தொண்டூழியம் முதல் பல்வேறு சிறு சிறு தொழில்களும் பார்த்து, அச்சுக்கூடத் தொழிலாளியாகி, செய்திப்பத்திரிகை, படைப்பு இலக்கியம் படித்துக்கொண்டே, ஒப்புநோக்காளனாகவும் (Proof Reader) தன்னை வளர்த்துக்கொண்டு, ஜெயகாந்தன் என்ற எழுத்தாளனாக அறிமுகமாகி, இலக்கிய உலகில் அங்கீகாரத்தையும் பெற்று பேராளுமையாக உருவாகியவரின் படைப்புகள் தோன்றிய காலத்தையும், […]
மீனாட்சி சுந்தரமூர்த்தி 1. நூல் அறிமுகம்: வளையாபதி ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.சமண இலக்கியமாகக் கருதப்படுகிறது.இந்நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை.காலமும் அறியக்கூடவில்லை. பெயர்க் காரணமும் புரியவில்லை.நூல் முழுமையும் கிடைத்திருந்தால் இக்கேள்விகள் எழ வாய்ப்பில்லை. இந்நூலின் எழுபத்தியிரண்டு பாடல்களே நமக்குக் கிடைத்துள்ளன.அறுபத்தாறு பாடல்கள் பதினான்காம் நூற்றாண்டில் தோன்றிய புறத்திரட்டிலிருந்தும், மூன்று பாடல்கள் சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையில் மேற்கோளாகவும் ,இரண்டு பாடல்கள் பெயர் அறியப்படாத அறிஞர் ஒருவரின் யாப்பருங்கல விருத்தியுரையில் (நூற்பா-37) மேற்கோளாகவும்,எஞ்சிய ஒரு பாடல் இளம்பூரணரின் தொல்காப்பியஉரையில்(செய்யுளியல்-98) […]
சோம. அழகு அன்புள்ள அமுதினிக்கு, அன்றைய திகதி நினைவில்லை. அன்று ஏன் எனக்கு மட்டும் புது பட்டுப் பாவாடை சட்டை அணிவித்து காலையிலேயே எனக்குப் பிடித்த பருப்புக் குழம்பு செய்திருந்தாய்? “ஆறு வயசாயிட்டது…. இனியெங்கிலும் அவளை ‘அம்மா’ எண்டுதான் விளிக்க வேணும். சரி தன்னே?’ என்று மாமி என்னைப் பார்த்துக் கூறவும், “பரவாயில்லை ! அவளுக்கு எப்படி இஸ்டமோ அப்படியே விளிக்கட்டும்” என்றாயே? நான் உன்னைப் பெயர் சொல்லி அழைத்ததை அவ்வளவு ரசித்தாயா? நாம் நட்டு வைத்த […]
எந்த நாட்டிலும், எந்த நேரத்திலும் எடுத்துக்கொள்ள வசதியாக ஒன்றரை லட்சம் அமெரிக்க டாலர்கள் தயாராக இருக்கிறது. துருக்கியின் அடனாவுக்குப் போய்வர விமான நுழைவுச்சீட்டு, விசா வந்துவிட்டது. திரும்பிவரும் சீட்டு தேவையில்லாமலே கூடப் போய்விடலாம். நாளைக் காலை அடனாவுக்குப் பயணமாக வேண்டும். தினமும் மழுங்கச் சவரம் செய்யும் முகத்தில் ஒரு மாதத் தாடி. அவர் முகம் அவருக்கே அடையாளம் தெரியவில்லை. கடவுச்சீட்டில் இருக்கும் முகம் அவருடையதுதான் என்று சொல்ல குடிநுழைவு அதிகாரியிடம் போராட வேண்டும் அந்த சிக்கந்தர். அவருக்கு […]
வலையில் விழுந்த வண்டு சிலந்தியைத் தின்றது கிழட்டுச் சிங்கம் தலையில் கழுகு புலிக்குத் தப்பிய முயலைப் பாம்பு செரித்தது கவிதைப் போட்டி வள்ளுவன் தோற்றான் விழுதுகள் சுருண்டன ஆல் சாய்ந்தது மழை கேட்டது மல்லி பிடுங்கிப் போட்டது புயல் வெள்ளத்தில் தாமரை மூர்ச்சையாகிச் செத்தன கூட்டில் மசக்கைக் குருவி சுற்றிலும் காட்டுத் தீ பாரம்பரிய வைர அட்டிகை பாஷா கடையில் இலையுதிர் காலம் முடிந்தது தொடர்கிறது இன்னொரு இலையுதிர் காலம் காலைப் புற்களில் கதிரொளி பட்டதில் பொசுங்கின […]