இலங்கை

This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013

  நள்ளிரவில் சிப்பாய்கள் தடதடவென்று கதவைத் தட்ட நெஞ்சில் திகில் எப்படியிருக்குமென்று தெரியாது.   தாழ்ந்து பறந்து விமானம் இரைச்சலிட்டுத் தாக்கி விட்டுப் போவது எப்படியிருக்குமென்று தெரியாது.   இழுத்துப் போய் எங்கோ மிதி மிதியென்று இராணுவ பூட்ஸ் கால்கள் மிதித்தால் எப்படியிருக்குமென்று தெரியாது.   கைகளைப் பின்கட்டி கண்கள் வெறிக்க திறந்த மார்பின் முன் தொடும் கொலைத்துப்பாக்கி முன் தன் உயிர்க்குஞ்சு துடிதுடிப்பது எப்படியிருக்குமென்று தெரியாது.   உற்றார் உறவினரெல்லாம் சிதறிப் போக சொந்த மண்ணிலேயே […]

சூரியனைச் சுற்றி உரசி வந்த வால்மீன் ஐசான் [Sun-Grazing Comet Ison ] அக்கினிப் பிழம்பில் சிக்கிச் சிதைந்து ஆவியானது

This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   பரிதியைச் சுற்றி உரசி வந்த  பெரிய வால்மீன் ஐசான்  தீக்குளித்துச் சின்னா பின்ன மானதா ? செத்துப் போனதா ? சிதைந்து சிறிதாய் மீண்டதா ?   எரிந்து ஆவியாகிப்  பொன்னொளி வீசிப் புத்துயிர் பெற்றதா ?  இன்னும் ஓர் நாளில் தெரியும் ! பூதக்கோள் வியாழனைச் சுற்றுவது ஒற்றை வளையம்  ! வியாழக் கோள் ஈர்ப்புத் தளத்தில் விழுந்த வால்மீன் சூமேக்கர்-லெவி தூள், தூளாகி நீர்க் […]

ஒரு விஞ்ஞான இஸ்லாமியர், மூன்று மெஞ்ஞான இந்துக்கள், ஒரு மெஞ்ஞான் கிறிஸ்துவர் & மேற்கு தொடர்ச்சி மலை.

This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013

புனைப்பெயரில் மேற்குத் தொடர்ச்சி மலை…. தென் இந்தியாவின் நீர் ஆதாரத்தின் உயிர் நாடி. சதுரகிரியாகட்டும், வெள்ளியங்கிரியாகட்டும் லட்சபோ லட்சம் இந்துக்கள் கூடுவார்கள் – அங்கு சித்தர்கள் இருக்கிறார்கள், சிவன் இருக்கிறார் என்று. பாதயாத்திரை, நடை யாத்திரை, கட்டுச்சோறு, நெய் விளக்கு, உச்சி மலை தீபம் , ஆராத்தி என இந்து மகா ஜனங்கள் மலையை ஆராதித்துக் கொண்டு. சதுரகிரி, அனுமன் தூக்கிய சஞ்சீவ மலையிலிருந்து விழுந்த விதைகளால் அதிசிய மருத்துவ சித்த மூலிகளைகள் நிறைந்தது என்றும், அங்கு […]

எளிமையும் எதார்த்தமும் கலந்த வளவ துரையனின் “சின்னசாமியின் கதை”

This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013

முனைவர் ந.பாஸ்கரன் புதினப்படைப்பு என்பது ஓர் அரிய முயற்சியின் வெளிப்பாடு . இன்றைய தமிழ் இலக்கியப்படைப்புகளில் மிகச்சிறந்தவையாக மிகச்சிலவே என்பதைவிட மிகச்சிலவாகவே புதினங்கள் வெளிவருகின்றன.அவற்றுள்ளும் வாசகனை வளைத்துப்போடும் வேலையை விரல்விட்டு எண்ணும் புதினங்களே செய்கின்றன. கவிதை எழுதும் படைப்பாளர்களின் எண்ணிக்கையைவிட கதை எழுதும் படைப்பாளர்களின் எண்ணிக்கை தமிழ்ச்சூழலில் மிகக்குறைந்த அளவில் காணப்படுகிறது. இந்த அளவு கொஞ்சம் மகிழ்ச்சியையும் அளிக்கத்தான் செய்கிறது. மிகச்சிலவாக உள்ள புதினப்படைப்பாளர்களிலும் பலர் வாசகர்களை நோக்கி எழுத்துமலையை உருவாக்கிவிட்டேன் வலிமைபடைத்தவர்கள் அதன் மீது ஏறி […]

டௌரி தராத கௌரி கல்யாணம்….! -27

This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013

பிரசாத்துக்கு குப்பென்று வியர்க்கிறது……முகம் கருத்து இறுகியது …இதயம் வேகமாகத் துடிக்கத் துவங்கியது. கைகள் உதறலெடுக்கக் கையிலிருந்த பிஞ்சுக் குழந்தையும் சேர்ந்து அவனது நடுங்கும் கரங்களில் ஊஞ்சலாடியது.   கலக்கத்துடன் அவன்  மங்களத்தை ஏறிட்டுப் பார்த்து கையிலிருந்த குழந்தையைக் காட்டி….இப்ப எப்பிடி?  என்று கண் சாடையில் கேட்டவன், அப்படியே கௌரியின்  பக்கம் மெல்லமாகப் பார்வையைத் திருப்புகிறான். தன் தலை மேல் யமுனை பாய்ந்து அவனை அப்படியே அமிழ்த்துவது போல பயத்தில் உறைந்து போகிறான். காலுக்குக் கீழே பூமி நழுவுவது போலவும் தொண்டைக்குள் கோலிக் குண்டு அடைத்துக் கொண்டது போலிருந்தது. அம்மா கல்யாணியின் மரணத்துக்குப் பிறகு […]

கிழிபடும் நீதிபதிகளின் புனிதப் போர்வைகள் காதல் – நீதிமன்றங்களின் கவுரவக் கொலைகள் : திருப்பூர் குணாவின் நூல்

This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013

  ஜனநாயகத்தின் அய்ந்து தூண்களைப் பற்றி இருக்கும் பிரைமைகள் எப்போதோ தகர்ந்து விட்டன. மிச்சம்மீதி நம்பிக்கை நீதிமன்றங்கள்  மீது இருப்பதாய் அவ்வப்போது சில மின்னல் கீற்றுகள்  தென்படுவதுண்டு.  அதுவும் மாயைதான். இளவரன், திவ்யா காதல் திருமணம், கலவரம், இளவரசன் சாவு ஆகியவற்றை முன் வைத்து அந்த நம்பிக்கை பொய்த்துப் போயிருப்பதை  திருப்பூர் குணா இந்த நூலில் தகுந்த தரவுகளுடன் மெய்ப்பித்திருக்கிறார். இந்நூலில் இளவரசன் திவ்யா விவகாரம் நீதிமன்றத்தில்   விசாரணைக்கு வந்த போது நீதிபதிகளின் மனப்பதிவுகளும் நடவடிக்கைகளும்  எவ்வாறு […]

ஜாக்கி சான் 18. ஒபரா அனுபவம்

This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013

    குருவின் பாராமுகம் சானை வெகுவாக பாதித்தது.   குரு ஒரு நாள் எல்லா மாணவர்களையும் அழைத்துப் பேசினார்.   “உங்கள் நெடு நாளையப் பயிற்சி முழுமை பெறும் தருவாயில் இருக்கிறது.  நீங்கள் என்னை மகிழ்விக்க இதைச் செய்யவில்லை.  இன்னும் பெரிய சாதனை செய்யவே இந்தக் கடுமையான பயிற்சி. பார்வையாளர்கள் முன்னால் அதுவும்.  என் முன்னால் தவறு செய்தால், தண்டனை மட்டுமே கிடைக்கும்.  ஆனால் அவர்கள் முன் தவறு செய்தால், உங்கள் பெயர் மட்டுமல்லாது, நம் […]

தாகூரின் கீதப் பாமாலை – 91 என் ஆத்ம சமர்ப்பணம்.. !

This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.   எனது வாழ்வுக் கிண்ணத்தில் நீ இனிமையை ஊற்றி வழிய வழிய நிரப்பி யுள்ளாய்  ! அதை நீ அறியாய் ! அதை நீ அறிய மாட்டாய் ! அதன் விலை மதிப்பு என்ன வென்று நிர்ணயம் செய்ய மாட்டாய் ! தனக்குத் தெரியாமலே வெண்ணிற மலர்ச் செடிபோல் நறுமணத்தை இரவிலே நிரப்பி வைப்பாய் ! கனவைப் போன்றது அந்தக் காட்சி ! […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 35

This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                       E. Mail: Malar.sethu@gmail.com 35.ஹிட்லரின் சித்தாந்தத்​தைச் சிதறடித்த ஏ​ழை……      என்னங்க ​வேக​வேகமா மூச்சி​றைக்க ஓடி வர்ரீங்க…என்னது….ஓடிப் பழகுறீங்களா…? ஆமா எதுக்கு இந்த வயசுல ஓடிப் பழகு​றேங்குறீங்க….. ஓ…​ஹோ….ஓ…ஓடுறதுக்கு வயசில்​லேங்குறீங்களா….? அப்ப ஓடுங்க ஓடுங்க…அதுக்கு முன்னா​லே ஒங்ககிட்ட நான் ​போனவாரம் ​கேட்​டேன்ல அந்தக் ​கேள்விக்குப் பதிலச் ​சொல்லுங்க….. என்னங்க ஓடிக்கிட்​டே இருக்குறீங்க…நின்னு பதிலச் […]