எழுத்து, நான் அன்று அந்தப் பையன்கள் என்னை விளையாடச் சேர்த்துக் கொண்டிருந்தால், நான் பின்னால் எழுதியே இருக்க மாட்டேன். அவர்கள் மைதானத்தின் நடுவே விளையாடிக் கொண்டிருபார்கள். நான் மைதானத்தின் ஓரத்தில் ஒரு புத்தகத்தைப் படித்தவாறு,அவர்களுடைய ஷூ, செருப்பு, ஸ்வெட்டர் ஆகியவற்றுக்குக் காவலாக உட்கார்ந் திருப்பேன். அது என்னுடைய ஒரு குறைபாடாக, பலவீனமாகக்கூட இருந்திருக்கலாம். ஆனால் என் மனம் அதை ஒரு பெருமையாகக் கருதத் தொடங்கி விட்டது. நான் அவர்களைவிட புத்திசாலியாம், புத்தகம் படிக்கிறேனாம். எனக்கு […]
கபிலவாஸ்து. பின்னிரவு. மன்னர் சுத்தோதனரின் மழைக்கால அரண்மனையின் இருபத்தைந்து அடி உயரமுள்ள பிரதான வாயிற் கதவின் கீழ்ப்பகுதியில் உள்ள ஏழடி அளவிலான சிறிய பகுதிக்கதவு திறந்தது. அந்த அரண்மனை சேவகரின் தலைவன் பின் நடந்து வர அவனுக்கும் முன்னே ஒரு பணியாள் தீப்பந்தந்தத்தை ஏந்தி நடந்தான். அரண்மனைக்கு எதிரே இந்திரனின் பிரம்மாண்டமான கோயில். இருவரும் வெளியே வந்து வலப்புறம் திரும்பி நடந்தனர். மன்னனின் கோடைக்கால அரண்மனை, குளிர்கால அரண்மனை இரண்டும் முன் வாயிலின் வெளியே எரியும் தழல் […]
ரிலே ரேஸ் போல, ஒரு கடத்தலை, ஓரு சில நிமிடங்களில், திகிலுடன் சொல்லியிருக்கிறார் ஹ¤சைன். விரைவில் தெலுங்கில் ‘ பர்கர் ‘ என்று ஒரு முழு நீள திகில் படம், அவரிடமிருந்து வரலாம். தனியாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் இளைஞனுக்கு, ஒரு செல்பேசி அழைப்பு வருகிறது. குரல் தன்னை ‘பாஸ்’ என அடையாளம் சொல்கிறது. ‘ உனக்கு பத்து லட்சம் வேண்டுமா? நான் சொல்கிறபடி செய் ‘ என்கிறது குரல். பத்து நிமிட அவகாசத்தில், உடை […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உன் வீணைக்குள் இனிய கானங்கள் முன்பே ஒளிந்திருந்தன ! பூக்கள் கொட்டிக் கிடக்கிறது என் கூடையில். அதே வசந்தகாலத் தென்றல் அடித்து அன்றைய தினத்தில் நம்மிருவரையும் ஆட வைத்தது ஒருங்கே ! அந்த நாளில் எவரும் அறிய மாட்டார் எந்த இன்னிசை அலைகள் இந்த வானை நிரப்பிய தென்று ! உந்தன் மெல்லிசைப் படகு வந்தது என் கடலோரம் எனது பூ மலர்ச்சி வண்ணத்தில் […]
கமலா தேவி அரவிந்தன் பேசும் மொழி மலையாளம். மூன்று தலைமுறைகளாக சிங்கப்பூரில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை வழித் தாத்தா பாட்டி கொல்லத்திலிருந்து வந்தவரகள். தாய்வழித் தாத்தா பாட்டி பாலக்காட்டின் ஒட்டப் பாலத்திலிருந்து வந்தவர்கள். கமலா தேவி குட்டிப் பெண்ணாக ஆரம்பப் பள்ளியிலிருந்து கற்றது தமிழ். வாழ்க்கை முழுதும் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும். கணவர் மலையாளி. பிரமிப்பாகவும் இருக்கிறது. தொடக்க காலத்தில் மலையாளத்தில் எழுதினாலும் பின்னர் தமிழிலும் எழுதத் தொடங்கி இப்போது சிறுகதைகள், நாவல், ரேடியோ நாடகங்கள் இத்யாதி […]
ஸர்.சி.வி. ராமன் (1888-1970) http://www.youtube.com/watch?v=XaWBI9w129w (Scattering of Yellow Light) [Raman Effect] நோபெல் பரிசு பெற்ற முதல் இந்திய விஞ்ஞானி ஆப்பில் பழம் மரத்திலிருந்து கீழே விழுந்த போது, ஏன் தரை நோக்கி விழுந்தது என்ற வினா, ஐஸக் நியூட்டன் [Isaac Newton] முதன் முதல் ஈர்ப்பு விசையைக் [Gravitation] கண்டு பிடிக்க ஏதுவாயிற்று! அதுபோல் ஒரு நிகழ்ச்சி, சி.வி. ராமன் வாழ்க்கையிலும் ஒரு பெரும் திருப்பத்தை உண்டாக்கியது! 1921 […]