Dr. ரமேஷ் தங்கமணி MSc., PhD., SLET மண் இயற்கையின் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் ஆகும். அவை நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன, உணவுப் பொருட்களின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கின்றன, மேலும் பலதரப்பட்ட உயிரினங்களின் இருப்பிடமாகவும் இருக்கின்றன. மண்ணின் தரத்தை பராமரிப்பதும், மண்ணின் தரம் வெப்பமாக இருப்பதை உறுதி செய்வதும் அனைவரின் பொறுப்பாகும். தொழில்மயமாக்கல் மற்றும் மோசமான நில மேலாண்மை அமைப்புகள் பல இடங்களில் மண்ணின் தரத்தை குறைத்து, மேலும் மண் அரிப்பு, வளம் குறைதல் […]
வளவ. துரையன் மேகங்களின் உருவங்கள் காற்றால் மாறுவதைப் போல மெதுவாக இங்கே இரக்கமின்றிச் செல்கிறது கடந்த காலம் அன்று முதல் பார்வையில் நீ தந்த குளிர்மொழிதான் மனக்குகையில் உட்கார்ந்துகொண்டு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறது நினைத்து நினைத்து மறக்க முயல்கிறேன் நினைவுகளைப் போட்டுக் கசக்கிப் பிழிந்து கரும்பறைக்கும் இயந்திரமாக மனம் கசப்பு கொள்கிறது எல்லாம் காலியானாலும் சமையல் பாத்திரத்தின் அடியில் ஒட்டியிருக்கும் ஒரு சிறு சோற்றுப் பருக்கையாய் நீ அமர்ந்து கொண்டிருக்கிறாய் அதனால் பசியாறாது என்று தெரிந்திருந்தும் அதையே […]
வெயிலில் நடந்து வாடும்போதுதான் நினைவுக்கு வருகிறது தோட்டத்துச் செடிக்கு நீர் ஊற்றாதது நடும்போதே நான் சொன்னேன்ல தெனமும் வந்து தண்ணி ஊத்தணும்னு அம்மா கத்துவார் ஆனால் நம்பிக்கை இருக்கிறது திட்டித் திட்டி எனக்குச் சோறு போடுவதுபோல அம்மா அதற்குத் தண்ணீர் ஊற்றி இருப்பார் நான் என்னை நம்பியா வைத்தேன் அம்மாவை நம்பித்தானே அம்மா இல்லையா?
0 முன்னதாக நடந்த “ தமிழ் இலக்கியம் சில புதிய பரிமாணங்கள் “ என்றத் தலைப்பிலான கருத்தரங்கிற்கு முன்னாள் துணை வேந்தர் ப. க. பொன்னுசாமி முன்னிலை வகித்தார். கருத்தரங்கைத் துவக்கி வைத்து பதிப்பாளர் ரவி தமிழ்வாணன் ’ தமிழ்ப்பதிப்பக உலகின் என்ற எதிர்காலம்” என்ற தலைப்பில் பேசினார். விருது பெற்ற எழுத்தாளர்கள் பல்வேறுத் தலைப்புகளில் பேசினர். மலையாளம்- தமிழ்- ஆங்கிலத்தில் எழுதும் கேரள எழுத்தாளர் அஞ்சு சஜீத் சிறப்புரை ஆற்றினார் 0 விருது பெற்றோர்: திருவாளர்கள் குமரி எஸ். நீலகண்டன், கவின், மோ. அருண், இல.வின்சென்ட், த ..சித்தார்த்தன், அமுதன் தனசேகரன், மு.இராமநாதன், , இரா. மோகன்ராஜன், க.மூர்த்தி ,வீரபாண்டியன், சிந்து சீனு, இரா. மோகன்குமார், மு.ஆதிராமன்,ராமன் முள்ளிப்பள்ளம், பெரணமல்லூர் சேகரன், வ. கோபாலகிருஷ்ணன், பாலக்காடு அஞ்சு, சஜீத்,பாலக்காடு ஜி நாகராஜ், இதயநிலவன், கதிர் நிலவன், கதிரவன் மகாலிங்கம்,விஜி முருகநாதன் […]
வெ.தி.சந்திரசேகரன் வழக்கம்போல கல்லூரிக்கு வந்த தமிழ்க்கொடியை, இன்றைக்கு கால்குலஸ் நடத்தும் புரபசர் பொன்னுச்சாமி வராத காரணத்தால், அவளோடு படிக்கும் அருண் சினிமாவிற்கு அழைக்க, அவளும், சிறிது நேரம் யோசித்துவிட்டு, ‘சரி’ யென்று தலையாட்டினாள். நாளையும், நாளைமறுநாளும் சனி, ஞாயிறு ஆதலால் கல்லூரிக்கு விடுமுறை. அதனால் கிராமத்திலிருந்து பேருந்தில் தினமும் கல்லூரிக்கு வரும் தமிழ்க்கொடியால் இரண்டுநாட்கள் திண்டுக்கல்லுக்கு வரமுடியாது என்பதும் அவள் ஒத்துக்கொண்டதுக்கு ஒரு காரணம். தமிழ்க்கொடி, ஒரு ஏழெட்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சில்வார்பட்டி என்னும் சின்ன […]