உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை? – 1

This entry is part 24 of 26 in the series 9 டிசம்பர் 2012

உன்னை போல் ஒருவன் வெளியான சமயத்தில் அது முசுலிம்களுக்கு எதிரான படம் என்று சிலர்  வாதிட்டார்கள். அதே போல, இரண்டு வாரங்களுக்கு முன்பு, துப்பாக்கி படத்தில் உள்ள முசுலிம் எதிர்ப்பு காட்சிகளைப் பற்றி நேர்படப் பேசு என்ற நிகழ்ச்சியில் விவாதம் நடந்த போது, சினிமா விமர்சகர் திரு. அஜயன் பாலா, உன்னை போல் ஒருவன் முசுலிம்களுக்கு எதிரான படம்; அதை பற்றி யாரும் பேசவில்லை என்று தெரிவித்தார். இதை அடுத்து, என் மனதில் அடங்கிப் போய் கிடந்த […]

மதிப்பும் வீரமும்

This entry is part 4 of 26 in the series 9 டிசம்பர் 2012

பண்டைய சீனாவில் கி.மு. 475-221 வரலாற்றில் அதிக போர்கள் நடந்த காலம்.  ஏழுக்கும் மேற்பட்ட குறுநிலப் பிரதேசங்களுக்கு இடையே எப்போதும் போர் தான். அவற்றில் மிகவும் அதிக பலம் பொருந்திய அரசன் என்று கருதப்பட்டவன் அரசன் ச்சின் சீ ஹ_வாங். அவன் தன்னாட்சி செய்து வந்த காலம். அவன் மற்ற பிரதேசங்களுடன் எப்போதும் சுமுக உறவுடன் இருக்க விரும்பாதவன்.  அதிலும் மன்னன் ச்ஜாவ் என்றால், பலகீனமான மன்னன் என்பதால், மிகவும் காட்டமாக இருப்பான். இதற்கு மேலாக, மன்னன் […]

மூன்று பேர் மூன்று காதல்

This entry is part 3 of 26 in the series 9 டிசம்பர் 2012

யுவனும் , வஸந்த்தும் சேர்ந்து வெகு நாட்களுக்குபிறகு (சத்தம் போடாதே’க்குப்பிறகு) இணைந்திருக்கும் படம்.நிறைய எதிர்பார்ப்புகளுடன் வந்திருக்கும் பாடல்கள். ‘ஆதலினால் காதல் செய்வீர்’, ‘ஆதிபகவன்’ என்று இடையே சில ஆல்பங்கள் யுவனிடமிருந்து வந்திருந்த போதும் அவற்றில் சில பாடல்களைத்தவிர மற்ற எவையும் அவ்வளவாக ரசிக்க இயலவில்லை.எல்லாவற்றிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் படி இந்த ஆல்பத்தில் எந்தப்பாட்டை விடுவது எதை ரசிப்பது என்று திக்குமுக்காடச்செய்திருக்கிறார் யுவன்.! ஆஹா காதல் கொஞ்சிக்கொஞ்சிப்பேசுதே வசீகரிக்கும் ஒரு குரலுடன் நந்தினி ஸ்ரீரிக்கர் (‘ஆப்பிரிக்கா காட்டுப்புலி’ […]

மலேசிய தான் ஸ்ரீ சோமா அறவாரியத்தின் அனைத்துலகப் புத்தகப் பரிசினை இலங்கை அறிஞர் மு.பொன்னம்பலம் வென்றார்

This entry is part 2 of 26 in the series 9 டிசம்பர் 2012

(செய்தி: ரெ.கா.) மலேசியாவில் தான் ஸ்ரீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியத்தால் நடத்தப்பட்ட 2010/2011ஆம் ஆண்டுகளுக்கான அனைத்துலகப் புத்தகங்களுக்கான இலக்கியப் பரிசை இலங்கை அறிஞர், கவிஞர், விமர்சகர் மு.பொன்னம்பலம் வென்றார். அவருடைய “திறனாய்வின் புதிய திசைகள்” என்ற நூலுக்கு அமெரிக்க டாலர் 10,000 பரிசாக வழங்கப்பட்டது. டிசம்பர் 6ஆம் தேதியன்று பெட்டாலிங் ஜெயாவில் தோட்ட மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்தப் பரிசு வழங்கப்பட்டது. மு.பொ.நேரில் வந்து பரிசினைப் பெற்றுக்கொண்டார். இதே நிகழ்வில் மலேசிய நூல்களுக்கான சிறப்புப் பரிசை […]

சந்திரனில் விவசாயம் எப்படி நடக்கலாம் என்று யூகம் தரும் இயந்திர விவசாயப் பண்ணைகள்

This entry is part 1 of 26 in the series 9 டிசம்பர் 2012

  இங்கிலாந்தில்,  பைக்ண்டன் ஜூ – வில் நட்டக்குத்தலாக இருக்கும் ஹைட்ரோபோனிக்  விவசாய பண்ணை. இது  முட்டைக்கோஸ் வகையான லெட்டூஸ் பயிரை விளைவிக்கிறது. இருக்கும் இடத்தை முழுவதும் உபயோகப்படுத்திக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தொட்டிகளில் மண் இல்லாமல் கன்வேயர் பெல்ட் மூலமாக  எப்போது சூரிய வெளிச்சம் வேண்டுமோ அப்போது தரும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. முழு விவசாயமும் கணினி மூலமாக கட்டுப்படுத்தப்படுகிறது. இதில் ஒரு சதுர மீட்டரில் 112 லெட்டூஸ்களை உற்பத்தி செய்யப்படுகிறது.     ஜெர்மனியில் ஒரு […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -6

This entry is part 15 of 26 in the series 9 டிசம்பர் 2012

    ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா   பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் […]