பி.ஜி.சம்பத்தின் “ அவன் நானல்ல ( மலையாளக்கதை ) – ஒரு பார்வை

This entry is part 16 of 26 in the series 9 டிசம்பர் 2012

தோப்பில் முகம்மது மீரான் மொழிபெயர்ப்பில் அம்ருதா இதழில் வெளிவந்த கதையைப் படித்தவுடன் இதைப்பற்றி எழுதியே தீரவேண்டும் என்கிற ஒரு உந்துதல். ரோசி என்கிற மணமான பெண்ணைப் பற்றிய கதை. இனோஸ் அவளது கணவன். சுரேஷ் என்கிற மருத்துவன் அவனது பள்ளிக்கால  நண்பன். கதை இவர்கள் மூவரைப் பற்றியது. கதை செக்ஸ் சம்பந்தப்பட்டது என்றாலும், அதை ஒரு மணமான இளம் பெண்ணின் கோணத்தில் அலசியிருப்பதுதான் இந்தக் கதையின் புதுமை. இனோஸ் சுரேஷை வற்புறுத்தி, தான் வசிக்கும் ஊரில், கிளினிக் […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 39

This entry is part 14 of 26 in the series 9 டிசம்பர் 2012

  நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை.   —   உலகில் உயிரினங்கள் தோன்றிய நாள் முதலாக வாழ்வியல் வரலாறும் தொடங்கி விட்டது. காலங்கள் சுழற்சியில் மாறுதல்களும் இருந்து கொண்டே இருக்கின்றன. அதனால்தான் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதனை இலக்கணமாகக் கொண்டுள்ளோம். என்னதான் மாறுதல்கள் வந்தாலும் பல அடிப்படையான விஷயங்கள், இயற்கையைச் சார்ந்து தன் இயல்புடன்  பயணிக்கின்றது. வாழ்வியலின் வரலாறு முழுமையும் எழுதப் புகுந்தால் மகாபாரதத்திற்கு மேல் நீட்சியான படைப்பாகிவிடும். எனவே […]

சந்திப்பு

This entry is part 13 of 26 in the series 9 டிசம்பர் 2012

தாம்பரம் தொடர் வண்டி நடைமேடையில் நான் நடந்துகொண்டிருந்தேன் மின்சார ரயிலை விட்டிறங்கி இன்னும் ஐந்து கிலோமீட்டருக்கு ச்சென்றாக வேண்டும். அங்கு தான் வீடு என்று சொல்லிக்கொள்ள ஒன்றைக்கட்டிக்கொண்டு மிச்ச வாழ்க்கையை ஒட்ட எனக்கு சாத்தியமாயிற்று. பணம் படுத்தும் பாடுதானே எல்லாமும். ‘ அது சரி எதிரே வருகிறவன் நண்பன் சிவா போலே தெரிகிறான்.சிவா என்கிற அந்த சிவசுப்பிரமணியன் என் நண்பன். அவனைப்பார்த்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருக்கும், நானும் அவனும் ஒரே அறையில் வசித்தவர்கள். ஒரே […]

நினைவுகளின் சுவட்டில் (105)

This entry is part 12 of 26 in the series 9 டிசம்பர் 2012

கொஞ்ச நாட்கள் கழிந்தன. எந்த இடத்திலிருந்தாவது ஏதும் ஆர்டர் வருமா என்று காத்திருப்பு. இன்னும் wanted column-ல் ஏதும் எனக்கு ஏற்ற விளம்பரங்கள் வருமா என்ற காத்திருப்பு. ஒரு மாதம் இரண்டு மாதங்கள் கழிந்திருக்கும். முதலில் வந்தது Northern Railway-யிலிருந்து. எனக்கு வேலை கிடைத்துவிட்டது. சந்தோஷமாக இருந்தது. முதல் தடவையாக நானே முயன்று பெற்ற வேலை அல்லவா? இங்கு யாரும் ராஜாவோ, செல்ல ஸ்வாமியோ சொல்லி ஒரு முரளீதர் மல்ஹோத்ரா கருணை மனம் கொண்டு, ”boys service-ல் […]

ஒருவர் சுயத்தனம் பற்றி எனது பாடல் -1 (1819-1892) (புல்லின் இலைகள் -1)

This entry is part 11 of 26 in the series 9 டிசம்பர் 2012

  மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா   வால்ட் விட்மன் வாழ்க்கை வரலாறு: அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன் 1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார்.  தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார்.  அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி யிலிருந்து தந்தையால் நிறுத்தப் பட்டார்.  ஆகவே அவர் சிறு […]

தாகூரின் கீதப் பாமாலை – 43 சதுப்பு நிலப் பாடல்கள்

This entry is part 10 of 26 in the series 9 டிசம்பர் 2012

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பாசான நீர்க்கொடி போன்ற எனது பாடல்கள்  அலை வெள்ள அடிப்பில் பாதை தவறி எப்போதும் திசை மாறிப் போகும் ! நங்கூரம் இல்லை அவற்றுக்கு ! ஆதார மற்ற காற்றிலே அவை ஏன் ஆடி வருகின்றன  ?  அவை ஏன் இடம் மாறிப் போகின்றன, தடம் ஏதும் விடாது தானியம் ஏதும் விளையாது ? எம்முயற்சியும்  இல்லை  அவற்றுக்கு ! ஒன்றைக் குறிவைத்து […]

கண்ணீர்ப் பனித்துளி நான்

This entry is part 9 of 26 in the series 9 டிசம்பர் 2012

  மயிர் கூச்செரியும் கடுங்குளிரில் நிலவுமறியாது பனிக்கட்டிகளுக்குள் மறைந்திருக்கும் கண்ணீர்ப் பனித்துளி நான்   ஆயிரக்கணக்கில் தாரகைகள் பூக்கும் ஆகாயம் அனுப்பும் ஒளிக்கீற்று மேல் காதலுற்று சூரியனுக்கே காதல் கடிதங்களை வரையும் கண்ணீர்ப் பனித்துளி நான்   நாளை உதிக்கவிருக்கும் விடிகாலையில் உனது வெளிச்சத்தை முத்தமிட்டு அந்த உஷ்ணத்திலேயே உருகிக் கரைந்துவிடும் கண்ணீர்ப் பனித்துளி நான்   – ரொஷான் தேல பண்டார தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

வெளி

This entry is part 8 of 26 in the series 9 டிசம்பர் 2012

  அது ஒரு தொடக்கப்பள்ளி.வாரத்தில் மூன்று நாள் கம்ப்யூட்டர் க்ளாஸ் நடக்கும்.மற்ற பாடங்களைவிட கம்ப்யூட்டர் க்ளாஸுக்கு ஆர்வத்துடன் மாணவர்கள் வருவதற்கு ஆசிரியர் இளங்கோவன் தான் காரணம்.   பிரேயர் முடிந்தவுடன் கனஜோராக குதூகலத்துடன் கம்ப்யூட்டர் க்ளாஸுக்கு ஓடும் குழந்தைகளளை தலைமை ஆசிரியை கண்டித்தும் கேட்பதில்லை.குட் மார்னிங் என்று ஆசிரியர் இளங்கோவனை வரவேற்பதில் சிறிது கெஞ்சலும் இருக்கும்,இன்று வகுப்புக்கு எங்களை அழையுங்கள் என்ற வேண்டுகோளும் அதில் அடங்கி இருக்கும்.   அந்தப் பள்ளி ஸ்ரீராமகிருஷ்ண மடத்துக்குச் சொந்தமானது.பெண் துறவிகள் […]

காளை மேய்த்தல்(Ox Herding)- பத்து ஜென் விளக்கப் படங்கள்

This entry is part 7 of 26 in the series 9 டிசம்பர் 2012

I ஜென் வழி(The Way of Zen)-ஒரு விளக்கம் ஜென் வழியில் மெய்யுணர்வு (realization/enlightenment) அடையும் கருத்தாக்கங்களில், காளை மேய்த்தல் படங்கள் மிகவும் அறிமுகமானவை. காளை என்ற குறியீட்டின் மூலம் மெய்யுணர்வுக்கான அடுத்தடுத்த பத்துக் கட்டங்களை இந்தப் படங்கள் விளக்குகின்றன. காளை என்ற குறியீடு உணர்வுறும் எல்லா உயிர்களின்(sentient beings) ஆதி இயல்பு(primordial nature). அவற்றின் உண்மையான இயல்பு  (True-nature).  உண்மையான இயல்பு தான் புத்த இயல்பு அல்லது புத்த மனம்.( Buddha nature or Buddha […]

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 8. தி.ஜ.ரங்கநாதன் – ஆஹா ஊகூ

This entry is part 5 of 26 in the series 9 டிசம்பர் 2012

  ”இதென்ன கழைக்கூத்தாடியின் கூச்சல் போலிருக்கிறதே!’’ என்று பிரமித்துவிட்டார் ஒரு நண்பர். யார்? ஸ்ரீ ப.ராமஸ்வாமி அவர்கள்தான். “ஆஹா ஊகூ!” என்ற தலைப்பு அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் கட்டுரை அவருக்குப் பிடித்தது; அதன் விறுவிறுப்பும் வேகமும் தொனியும் பிடித்தன. கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை எடுத்து, அதை ஆமோதிக்கும் முறையில், ஒரு சிறு குறிப்புடன், ஒரு தினசரி பத்திரிகையின் இலக்கியப்பகுதியிலும் கூட அவர் எழுதிவிட்டார். கட்டுரை ’சக்தி’ யில் முதன் முதலாக வெளிவந்தபோது, இப்படி அவர் செய்தார். அவருக்கென்ன? […]