கதவு திறக்கவில்லை. நவநீதன் ஐந்து நிமிஷமாகத் தட்டிக் கொண்டிருந்தான். ஒழிவின்றியல்ல; விட்டுவிட்டு. பக்கத்தில் தான் ரயில்வே ஸ்டேஷன். ஒரு மின்சார ரயில் அவன் தட்டத் தொடங்கியதிலிருந்து இதற்குள் வந்து நின்று, போய்விட்டது. நவநீதன் கதவைத் தட்டிக் கொண்டு நிற்பதை ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் ஓரிருவர் திரும்பிக் கவனித்தனர். பிளாட்பாரக் கோடிக்கும் பத்தடி தாழ்விலிருந்த அந்த வீதிக்கும் மத்தியில் இரும்புக் கம்பி வேலி நின்றது. அந்தப் பக்கம் பிளாட்பார விளக்கு. இந்தப் பக்கம் தெரு விளக்கு. அவன் வீட்டுக் […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com பார்க்கில் மழை குறைந்து விட்டது. குழந்தைகள் வீட்டுக்கு ஓட்டமெடுத்துக் கொண்டிருந்தார்கள். சுற்று வட்டாரத்தில் இருக்கும் வீடுகளின் கேட்டுகள் திறந்து கொண்டிருந்தன. “மம்மி.. டாடி!” பெற்றோரை அழைத்துக் கொண்டு தாம் வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டதற்கு அடையாளமாக் கூக்குரல் இட்டுக் கொண்டிருந்தார்கள். சில பெற்றோர்கள் எதிரே வந்து குழந்தைகளை தூக்கி செல்லம் கொஞ்சியபடி உள்ளே அழைத்துப் போய் கொண்டிருந்தார்கள். அபிஜித்தின் தாடை எலும்பு இறுகியது. அவன் பார்வை […]
இப்படித் தொடங்குகிறது உங்களின் ஒருநாள்….. காலையில் கண் விழித்ததும் போர்வையை உதறி எழுந்து போகிறீர்கள்; உடனேயே சுருக்கங்களின்றி மடிக்கப் பட்டுவிடும் உங்களின் படுக்கை……! துர்நாற்றத்தை சகிக்க முடியாது ஒருபோதும் உங்களால்; கழிவறை சுத்தமாய் ஓடோனில் மணக்கத் தயாராக இருக்கிறது உபயோகப் படுத்தி வெளியேறுகிறீர்கள்…..! தினசரியை மேய்ந்து கொண்டிருக்கையில் காஃபி வருகிறது உங்களைத் தேடி…..! ஆவி பறக்கும் அடித் தொண்டையில் கசக்கும் அற்புதமான பானம்! அருந்தி முடித்ததும் அப்புறப் படுத்தப் படுகிறது அவசரமாய் காலிக் […]
****************************************************** எழுபதுகளின் மத்தியில் நடந்த கதை இது. அப்போது பால்பாண்டிக்கு பனிரெண்டு அல்லது பதிமூன்று வயதிருக்கும். அன்றைக்கு அவனைப் பயமெனும் பேய் பிடித்து ஆட்டத் தொடங்கியது. காரணம் குருவு அவனைத் தொட்டு விட்டான்; தொடுதல் என்றால் இலேசுபாசான தொடுதல் இல்லை. அப்படியே தோளோடு தோள் சேர்த்துத் தூக்கித் தழுவி அவனைக் கீழே இறக்கி விட்டான். குருவு, பால்பாண்டி மாதிரியான குடியானவர்களைத் தொடக் கூடாத தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன். அந்த சாதியைச் சேர்ந்தவன் வம்புக்காகவோ அல்லது தன்னையும் அறியாமலோ […]
வைகை அனிஷ் தமிழகத்தில் தேர் இழுத்தல் என்பது பெரிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.தேர் என்பது கோயில்களில் கடவுளரை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பயன்படும் ஊர்தியாகும். திருவிழாக்காலங்களில் பக்தர்கள் தேரை வடம்பிடித்துச் இழுத்துச்செல்வர். முக்கியமான கலைப்வேலைப்பாடுகளுடன் பாரம்பரிய மிக்க கலைகள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவற்றை சிற்பங்களாக வடிவமைத்து தேர் செய்து வைத்திருப்பார்கள். இந்து சமயத்தில் மட்டும் அல்லாமல் கிறிஸ்தவ, பவுத்தம், முஸ்லிம்களால் சந்தனக்கூடு போன்றவை தேரின் அமைப்பில் இருக்கும். புத்தமதத்தில் அருகனுக்கு தேர் இருந்ததாக வரலாற்றுக்குறிப்புகள் உள்ளது. மரங்களை வைத்து தேர் […]
அ. செந்தில்குமார் (அக்டோபர் 27, 2007 அன்று நடைபெற்ற புலம் பெயர் வாழ்வைக் குறித்த இலக்கிய வட்டக் கூட்டத்தில் பேசியதன் சுருக்கம்) புலம் பெயர்தல் என்கிற கருத்தை அடிப்படையாக வைத்து நாற்றுகள், தொட்டிச் செடிகள் குரோட்டன்கள் என்கிற தலைப்பில் பேசப்போகிறேன். மனிதர்களைத் தாவரங்களோடு ஒப்பிட்டுகிறானே என்று யாரும் வருத்தப்படக்கூடாது. புலம் பெயர்வது மனித இனத்திற்குப் புதிதானது இல்லை. தொன்று தொட்டு நடைபெற்று வரும் சுழற்சி. புலம் பெயர்தல் தனி மனித வாழ்வில் […]
டேவிட் ஜெ.பிரவீன் UZACHI இயக்கம் செயல்பட்டு வந்த Calpulapan பகுதியை சுற்றி இருக்கும் நிலங்கள் உலக சோள உற்ப்பத்தியின் தாய்மண். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலப் பகுதியில்தான் முதன் முதலில் சோள பயிர் விவசாய கண்டுபிடிப்பு உள்ளானது என்பது பொதுவாக வரலாற்று ஆய்வுளகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசயம். சோளப் பயிரின் தாய்மடியான இந்த பகுதிகளுக்கு NAFTA (North American Free Trade Agreement) மூலம் வந்து சேர்ந்தது வினை. NAFTA என்கிறப் பெயரே தன் விளக்கதை கொடுத்திருக்கம் […]
எழுத்தின் வளைவுகள் நெளிவுகள் மையப்புள்ளியாய் தொனியில் அழுத்தத்தில் மழுப்பலில் சொற்கள் சொற்றொடர்கள் கூர் முனையில் நீளத்தில் பயன்பாட்டில் வேறுபடும் கருவிகளாகும் ஆயுதங்களுமாகும் மண் வாசனை வர்ணாசிரம சுருதி அதிகார அடுக்கின் அழுத்தங்கள் ஏழ்மையின் இயலாமைகள் இவற்றுள் ஒன்று தொனிக்காத சொற்களுண்டா? வர்க்கங்களின் காப்புரிமை உடைய சொற்களுண்டு விற்பவர் மட்டுமல்ல வலை விரிப்பவர் மட்டுமல்ல தூண்டில் வீசுவோர் சொற்களின் இடையே ஒர் ஆயுதக் கிடங்கை மாயமாய் மறைக்க வல்லார் அரசியலின் […]
படத்தின் துவக்க காட்சியே, தூள்! இன்டிகோ விமானத்தில் ஒரு வட இந்திய பெண்ணிடம் சில்மிஷம் செய்து மாட்டிய வயதான தொழிலதிபர் பற்றி நீங்கள் யூட்யூபில் தேடினால் கிடைக்கலாம். படத்தை குடும்பம் குடும்பமாக மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த குடும்பங்களிலெல்லாம் ஏகப்பட்ட பெண்களும் இருக்கிறார்கள். பெண்ணியவாதிகள் எல்லாம் எங்கே? சரிக்கும் தவறுக்கும் இடையே நூல் இடைவெளி தான் என்கிறார் கவுதம். சரிக்கும் தவறுக்கும் இடையே வசீகரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம் போல. தேன்மொழியை பெண் பார்க்க வரும் காட்சி தீவிரமாக […]
செய்தி: கா. ஜோதி கனவு இலக்கிய வட்டம் சார்பில் “ கவிதைத் திருவிழா “ திருப்பூர் மங்கலம் சாலை மக்கள் மாமன்றம் நூலகத்தில் ஞாயிறு அன்று கவிஞர் கா. ஜோதி தலைமையில் நடைபெற்றது. நாகேசுவரன் ( உலகத் திருக்குறள் பேரவை ), சி.சுப்ரமணியன் ( மக்கள் மாமன்றம் ) , கே.பி.கே செல்வராஜ் ( முத்தமிழ்ச் சங்கம் ) , மூர்த்தி ( கல்விக் கூட்டமைப்பு ) , நடேசன் ( ஆசிரியர் கூட்டணி ) ஆகியோர் […]