அமீதாம்மாள் சிறகு சிறை இரண்டுமே இதுதானாம் துளிர்களே இங்கு வேர்களாம் வியர்வையே இங்கு ‘கொடை’ களாம் செலவுகளே இங்கு வரவுகளாம் கண்ணீரே இங்கு உறவுகளாம் தலைமுறைப் பாலங்கள் இங்குதானாம் கோடையோடு வசந்தமும் இங்குதானாம் நடவும் அறுவடையும் இங்குதானாம் பூட்டும் சாவியும் இடம் மாற்றிக் கொள்வது இங்குதானாம் அறுசுவையும் இங்குதானாம் நவரசமும் இங்குதானாம் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு சிவப்பு தத்துவமாவது இங்குதானாம் விளக்கு எண்ணெய் திரி பொறி விளக்கமாவது இங்குதானாம் மன்னிப்பேகூட தண்டனையாவது இங்குதானாம் நீ உண்ண நான் […]