அம்மாவை விமர்சிக்கலாமா.. உள்ளும் புறமும் அறிந்த அம்மாவாய் இருப்பின் விமர்சிக்கலாம் என்றே தோன்றுகிறது. பிடித்தது பிடிக்காதது எல்லாம் அவர்களுக்குத் தெரிந்தாலும் மகளாய் இங்கே ரசனைப் பார்வை மட்டுமே மிச்சமிருக்கிறது.. அம்மாக்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட தேவதைகள் என்பது இன்னொரு முறை நிரூபணமாகி இருக்கிறது. இலக்கிய உலகில் செங்கோல் ஏந்திய தேவதைகளில் என் தமிழன்னை சுசீலாம்மா ஒரு முக்கிய தேவதை. தன்னைத் தேடித் தேடிக் காணும் பெண்களில் எல்லாம் கண்டடைந்து எழுத்தாய் விவரிக்கும் நேயம் அவருக்கே வாய்த்தது. சமயத்தில் ருத்ர […]
தகவல் குறிப்பு திண்ணையில் பிரசுரமான ‘விஸ்வரூபம்’ நாவல் நூல் வடிவம் கண்டு வெளியீட்டு விழா மார்ச்2 சனிக்கிழமை சென்னையில் நடக்கிறது. வாசக நண்பர்கள் அவசியம் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறேன். (invite enclosed) அரசூர் வம்சம் மற்றும் அதனைத் தொடர்ந்து விஸ்வரூபம் என்ற என் இரு நாவல்களைப் பிரசுரம் செய்த திண்ணைக்கு பிரத்யோகமாக நன்றி சொல்ல வேண்டும். அவ்வப்போது பல காரணங்களால் இடைவெளி விட்டு நாவலை வளர்த்துப் போய், எழுதி அனுப்பிய அத்தியாயத்தில் திருத்தம் போடச் சொல்லி […]
‘ஏம்மா… கூடைய ஒரு ஓரமா சீட்டுக்கு அடியில தள்ளலாமில்ல.. இப்படி மத்தியில வச்சிருக்கியே.. மத்தவங்களும் நிக்க வேண்டாம்’ கடா மீசையோடு வெள்ளை வேட்டி சட்டையுமாய் நின்று கொண்டு வந்த அந்த ஆஜானுபாவமான மனிதர் நெற்றி புருவம் மேலேறியபடி சொல்ல… ‘ஆங்… கூடைக்கும் சேத்துத்தான் டிக்கெட் வாங்கிருக்கேன்… அது அப்படித்தான் இருக்கும்… நீ வேணுமின்னா உடம்பு நோகாம சொகுசா கார்ல வரவேண்டியது தானே…’ வெடுக்கென்று அந்த மூதாட்டி சொல்ல… ‘ஒரு கூடைக்கு டிக்கெட் வாங்கிட்டா… பஸ்சையே வெலைக்கு வாங்கிட்டதா […]
ஐம்பது வருடங்களாயிற்று. தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு பெரும் புரட்சியே நிகழ்ந்துள்ளது. வேறு எதில் புரட்சி நிகழ்ந்துள்ளதோ இல்லையோ, தமிழ்க் கவிதை என்று இப்போது சொல்லப்படுவதில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழ்க் கடற்கரையோரங்களில், கிழக்கு இந்திய தீவுகளில், சுமத்ராவில் சுனாமி வீசிய காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்தோமே. கடற்கரையோர சாலைகளில் கார்கள் மிதந்து கொண்டிருந்தன. காவிரியில் வெள்ளம் வந்தால் ஒரு வருடம் தான் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் நாசமாகும். ஆனால் அடுத்த வருடங்களில் விளைச்சல் அமோகமாக […]
இலங்கை மூதூரைச் சேர்ந்த இருபத்து மூன்றே வயதான முஸ்லிம் பெண்ணுக்கு சவுதிஅரேபிய அரசு மரணதண்டனை வழங்கி கொலை செய்துள்ளது.சவுதிஅரேபிய குடும்பத்தில் பணிப்பெண்ணாக வேலைக்குச் சேர்ந்த சிறிது நாட்களிலேயே சவுதி எஜமானியின் நான்குமாத குழந்தைக்கு பாட்டிலில் பாலூட்டியபோது வாய்வழியாகவும்,மூக்குவழியாகவும் புரையேறி அக்குழந்தை தற்செயலாக இறந்துள்ளது.. அப்போது .ரிஸானாவுக்கு பதினேழுவயது. 2005 இல் கைது செய்யப்பட்ட அந்த ஏழைப் பெண் ரிஸானா சவுதி அரசால் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு 2013 ஜனவரி 9 அன்று மரணதண்டனை வழங்கப்பட்டு கொல்லப்பட்டாள். சவுதி அரசு […]
தஸ்லிமா நஸ்ரின் பங்களாதேஷில், டாக்காவில் நாத்திக வலைப்பதிவர்களுக்கு மரண தண்டனை கோரி போலீஸுடன் இஸ்லாமிஸ்டுகள் மோதியதில் நான்கு பேர்கள் இறந்திருக்கிறார்கள். இருநூறு பேர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள். இஸ்லாமிஸ்டுகள் நாத்திகர்களை வெறுக்கிறார்கள். இவர்களது பதாகை, “அல்லா முகம்மது குரானை விமர்சனம் செய்யும் நாத்திக பதிவர்களுக்கு மரண தண்டனை கொடு என்று கோருகிறோம்” என்று கூறுகிறது. இந்த பதாகையில் நாத்திக பதிவர்களின் முகங்கள் இருக்கின்றன. ஆஸிப் முஹதீன் இதில் ஒருவர். ஆஸிப் முகதீன் ஒரு மாதத்துக்கு முன்னால் இஸ்லாமிஸ்டுகளால் கத்தியால் குத்தப்பட்டார். […]