தோள்வலியும் தோளழகும் ( அனுமன்[ பகுதி1]

This entry is part 3 of 13 in the series 10 ஜனவரி 2021

                                                                                                                                       இராமகாதையின் மொத்தமுள்ள ஏழு காண்டங்களில் 4வது காண்டமாகிய கிஷ்கிந்தா காண்டத்தில் அறி முகமாகும் அனுமன் இல்லாவிட்டால் இராமகாதையின் பின் பகுதியே கிடையாது என்று சொல்லும்படியான புகழுடையவன் அனுமன். யார் இந்த அனுமன்? அனுமனே தன்னை இன்னான் என்று அறிமுகம் செய்துகொள்வதைப் பார்ப்போம்.                          யான் காற்றின் வேந்தற்கு அஞ்சனை வயிற்றில்                                வந்தேன்! நாமமும் அனுமன் என்பேன்                                      (கிஷ்கிந்தா காண்டம்)   (அனுமப் படலம் 15) இசை சுமந்து எழுந்த தோள்—புகழைச்சுமந்து […]

இன்னொரு புகைப்படம்

This entry is part 2 of 13 in the series 10 ஜனவரி 2021

கு.அழகர்சாமி அறிந்தவர் இல்லின் கூடத்தில் மாட்டப்பட்டிருக்கும் அநேக புகைப்படங்கள். அநேக புகைப்படங்களில் தெரியும் அநேக உருவங்கள். அநேக உருவங்களின் நெரிசலில் ஓருருவத்தைத் தேடி- தேடி இல்லாது- இல்லாததால் அறிதலில்லையென்றில்லை என்ற அறிதலில் ஆசுவாசமாகி- அநேக புகைப்படங்களின் மத்தியில் இன்னொரு புகைப்படமானேன் நிச்சிந்தையில் நான். கு.அழகர்சாமி

நீ இரங்காயெனில் ….

This entry is part 1 of 13 in the series 10 ஜனவரி 2021

திர்லதா கிரிஜா (அமரர் மணியனின் “சிறு கதைக் களஞ்சியம்” முதல் இதழில் 1985ல் வெளிவந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “அம்மாவின் சொத்து” எனும் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.) – காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதன் பின்னர் நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன. நாடெங்கிலும் நூற்றாண்டு விழா ஆங்காங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. அடேயப்பா!  நூறு ஆண்டுகள்! ஆஞ்சநேயலு தம் வாழ்க்கைப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டினார். அவர் பிறந்து வளர்ந்த தெல்லாம் மதுரை ஜில்லாவின் ஒரு சிறு கிராமத்தில். தாய் மொழி தெலுங்கானாலும், […]