இருப்பதோடு இரு

This entry is part 2 of 12 in the series 17 ஜனவரி 2021

ஒரு வண்டு சிலந்தியிடம் சொன்னது ‘உன்னைப்போல் இருந்துண்ணவே ஆசை எனக்கும் – ஆனால் வலை செய்யும் கலை அறியேனே’ சிலந்தி வண்டிடம் சொன்னது ‘சும்மா இருப்பது சோம் பேறித்தனம் பறந்துண்ணவே ஆசை எனக்கு – ஆனால் றெக்கைகள் இல்லையே’ இறைவனிடம் சென்றன இரண்டும் கேட்ட வரங்களைத் தந்தான் இறைவன் வலைபின்னியது வண்டு பறந்தது சிலந்தி ஒரு நாள் கூடாத இடத்தில் கூடுகட்டி பறவை செத்தது பறக்கக் கூடாத இடத்தில் பறந்து சிலந்தியும் செத்தது அமீதாம்மாள்

“எலி” – சிறுகதை அசோகமித்திரன் (1972)

This entry is part 1 of 12 in the series 17 ஜனவரி 2021

ஜெ.பாஸ்கரன் அசோகமித்திரனின் படைப்புகள் எளிமையாகத் தோன்றும்; உண்மையில் அவை மிக ஆழமான, அடர்த்தியான கருத்துக்களை உள்ளடக்கி இருக்கும். கதை சொல்லுகிற போக்கில், அதனூடே மெல்லிய நகைச்சுவையும், எள்ளலும் மிக இயல்பாக வந்து விழுந்த வண்ணம் இருக்கும். எளிமையான, மத்தியதர மக்களின் வாழ்க்கையில் இருக்கும் அன்றாடப் பிரச்சனைகளே பெரும்பாலான கதைகளின் அடிநாதமாக இருக்கும். ‘எலி’யும் அதற்கு விதிவிலக்கல்ல! ஏழ்மைக்கும், எலிக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருப்பதாக எனக்குத் தோன்றும்! – ஒரு எலியினால் ஏற்படும் பிரச்சனைகளை, அது […]